ஆடி பெருக்கு ஸ்பெஷல் முப்பருப்பு வடை - எப்படி செய்யணும் தெரியுமா?

Posted By:

Aadi Perukku Special Masala Muparuppu Vadai Recipe In Tamil: ஆடிப்பெருக்கு வரப்போகிறது. இந்த ஆடிப்பெருக்கு நாளில் மக்கள் வீட்டில் வடை பாயாசத்துடன் சமைத்து சாப்பிடுவார்கள். இந்த நாளில் உங்கள் வீட்டில் இருப்பவர்களுக்கு ஸ்பெஷலாக ஏதாவது செய்து கொடுக்க நினைக்கிறீர்களா?

அப்படியானால் உங்கள் வீட்டில் வடை செய்வதாக இருந்தால், வழக்கமாக செய்யும் வடையை செய்யாமல், மூன்று விதமான பருப்புக்களை கொண்டு அருமையான மசாலா பருப்பு வடையை செய்யுங்கள். அதுவும் அத்துடன் பீட்ரூட்டை துருவி சேர்த்து செய்யும் போது, வடையின் சுவை இன்னும் பிரமாதமாக இருக்கும்.

Aadi Perukku Special Recipe How To Make a Masala Muparuppu Vadai

உங்களுக்கு இந்த மசாலா முப்பருப்பு வடையை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மசாலா முப்பருப்பு வடை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* உளுத்தம் பருப்பு - 1 கப்
* கடலைப்பருப்பு - 1 1/2 கப்
* வடை பருப்பு/ பட்டாணி பருப்பு- 2 கப்
* காஷ்மீரி வரமிளகாய் - 1
* வரமிளகாய் - 2
* பூண்டு - 2 பல்
* பட்டை - 1 சிறிய துண்டு
* கிராம்பு - 1
* பெருங்காயம் - 1 சிட்டிகை
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* உப்பு - சுவைக்கேற்ப
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - சிறிது (பொடியாக நறுக்கியது)
* கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
* புதினா - சிறிது (பொடியாக நறுக்கியது)
* பீட்ரூட் - பாதி (துருவியது)
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு

செய்முறை:

* முதலில் ஒரு பாத்திரத்தில் உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு மற்றும் பட்டாணி பருப்பை நீரில் குறைந்தது 1 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில் காஷ்மீரி வரமிளகாய், பூண்டு, வரமிளகாய், பட்டை, கிராம்பு, பெருங்காயத் தூள், சோம்பு, கறிவேப்பிலை மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அத்துடன் ஊற வைத்துள்ள உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு மற்றும் பட்டாணி பருப்பை நீரை முழுமையாக வடிகட்டிவிட்டு சேர்த்து, சற்று கொரகொரவென்று அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு அரைத்ததை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு, அத்துடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி, புதினா சேர்த்து கைகளால் நன்கு பிசைந்து விட வேண்டும்.
* அடுத்து அதில் துருவிய பீட்ரூட்டை சேர்த்து கைகளால் நன்கு பிசைந்து, மூடி வைத்து 3 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், வடை கலவையை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து உருட்டி தட்டி, எண்ணெயில் போட்டு, பொன்னிறமாக ப்ரை செய்து எடுத்தால், சுவையான மசாலா முப்பருப்பு வடை தயார்.

[ of 5 - Users]
Story first published: Saturday, August 2, 2025, 15:04 [IST]
Desktop Bottom Promotion