Latest Updates
-
மழைக்காலத்தில் சருமம் பொலிவா இருக்கணுமா? அப்ப இந்த ஆயுர்வேத ஃபேஸ் மாஸ்க்கை போடுங்க.. -
ஆடி கிருத்திகை ஸ்பெஷல் அப்பம் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
மிதுன ராசியில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரர்களின் பணக்கஷ்டம் தீரப்போகுது! -
கொங்குநாட்டு ஸ்டைல் பச்சைப்பயறு குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
நட்ஸ்கள் குறித்து பலரது மனதில் உள்ள டாப் 5 சந்தேகங்களுக்கு பதிலளித்த டாக்டர்.அருண்குமார்! மிஸ் பண்ணாம படிங்க.. -
ஆகஸ்ட் 20-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் வரை இந்த 3 ராசிக்காரங்க உஷாரா இருக்கணும்! -
ரவா பன் தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 04 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் -
சனி-சந்திரனால் உருவாகியுள்ள விஷ யோகம்: இந்த 3 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்! -
சூரிய கிரகணம் அன்று உருவாகும் சதுர்கிரக யோகத்தால் இந்த 3 ராசிக்காரங்க கோடிகளை குவிக்கப் போறாங்களாம்
உங்க குழந்தைக்கு இந்த அறிகுறி இருந்தா உடனடியாக மருத்துவரிடம் ஓட வேண்டுமாம் விளக்குகிறார் மருத்துவர் பத்மப்ரியா
பெரியவர்களின் ஆரோக்கியமும், குழந்தைகளின் ஆரோக்கியமும் ஒரே மாதிரியானதல்ல. குழந்தைகள் எளிதில் நோய்களுக்கு ஆளாவார்கள். உங்கள் குழந்தையின் வழக்கமான நடத்தையில் மாற்றத்தை நீங்கள் உணர்ந்தால், உங்கள் குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் இருக்கலாம். அவர்கள் தொடர்ந்து அழுதாலோ அல்லது வழக்கத்திற்கு மாறாக நடந்து கொண்டாலோ, உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். உங்கள் குழந்தைளை எந்தெந்த சூழ்நிலைகளில் உடனடியாக மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டுமென்று குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர் பத்மப்ரியா நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார்.
உடல் வெப்பநிலை 100.4 F டிகிரி மேல் இருக்கும்போது
உங்கள் குழந்தையின் உடல் வெப்பநிலை 100.4 F டிகிரிக்கு கீழ் இருந்தால் அது சாதாரணமாகும். ஒருவேளை வெப்பநிலை 100.4 F அளவிற்கோ அல்லது அதைவிட அதிகமாகவோ இருந்தால் உங்கள் குழந்தைக்கு மருத்துவ உதவி உடனடியாக தேவை. குழந்தையின் வெப்பநிலை நேரத்தை பொறுத்து மாறுபடலாம், காலை நேரத்தில் குறைவாகவும் மதியப் பொழுதில் அதிகமாகவும் இருக்கும். தெர்மாமீட்டரில் 100.4 F என்று காட்டவில்லையெனில் குழந்தைக்கு காய்ச்சல் இல்லை என்று அர்த்தம்.

அசாதாரண நடத்தை
குழந்தைக்கு காய்ச்சல் இருந்தால் மற்ற நாட்கள் போலல்லாமல் கவலையாக காணப்படலாம். அவர்கள் மந்தமாக இருப்பதாகத் தோன்றலாம், விளையாடுவதில் ஆர்வம் காட்டாமலும், தூக்கமின்றியும், உணவு உண்ணாமலும் இருக்கலாம். இவை அனைத்தும் காய்ச்சலின் முக்கிய அடையாளங்களாகும். இந்த நிலையில் உடனடியாக மருத்துவரிடம் செல்ல வேண்டும்.
வலிப்பு
உங்கள் குழந்தை அளவு அல்லது எடையில் ஒப்பிடுகையில் சிறியவராக இருந்தால், காய்ச்சல் வலிப்பய்க் கூட தூண்டும், இது சில நொடிகள் அல்லது சில நிமிடங்களுக்கு நீடிக்கும். இந்த வலிப்பு பெற்றோர்களுக்கும் குழந்தைக்கும் அச்சுறுத்தும் அனுபவமாக இருக்கலாம், ஆனால் அவை பொதுவாக குழந்தையின் ஆரோக்கியத்திற்கு பாதிப்பில்லை. ஒருவேளை இந்த வலிப்பு சில நிமிடங்களுக்கு மேலும் நீடிக்குமாயின் அவர்களுக்கு கண்டிப்பாக மருத்துவ உதவி தேவை. இதுபோன்ற சூழ்நிலைகளில் உடனடியாக மருத்துவரிடம் செல்ல வேண்டும்.
உடல் அறிகுறிகள்
குழந்தையின் உடலில் ஏற்படும் பல்வேறு அறிகுறிகளும் உடல்நல குறைபாட்டை பிரதிபலிக்கின்றன, இது காய்ச்சலுக்கு வழிவகுக்கும் மற்றும் தீவிரமாக இருக்கும். குழந்தைக்கு காது வலி, தொண்டை புண், அல்லது வயிற்று வலி ஆகியவை இருக்கலாம், மேலும் வழக்கத்தை விட அதிக தாகமாக உணரலாம். இந்த அறிகுறிகள் காய்ச்சலின் முக்கியமான அறிகுறிகளாகும்.
தொடர்ந்து வாந்தி எடுத்தல்
உங்கள் குழந்தைக்கு கடுமையான வயிற்று வலி மற்றும் வாந்தி இருந்தால், அவர்களுக்கு அதிக காய்ச்சல் இருக்கலாம். அவர்கள் சுவாசிக்கையில் ஏதாவது பிரச்சனையை எதிர்கொண்டார்கள் எனில் உடனடியாக மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது .
காய்ச்சல் நோய்த்தொற்றை எதிர்த்து போராடும் உடலின் செயலாகும், அது ஒரு ஆபத்தான செயல் அல்ல. அதிகரித்த உடல் வெப்பநிலை காரணமாக நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை. அறிகுறிகளை அடையாளம் கண்டு, சரியான மருந்தை கொடுத்து, உங்கள் குழந்தைக்கு போதுமான ஓய்வுக் கொடுத்தாலே அவர்களின் உடல்நிலை சீராகிவிடும்.



Click it and Unblock the Notifications