Latest Updates
-
இன்றைய ராசிபலன் 24 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப துக்கமான நாளாக இருக்குமாம் -
August Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. ஆகஸ்ட் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
சந்திரன் விருச்சிக ராசிக்கு செல்வதால் தொந்தரவுகளையும், துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் -
செட்டிநாடு கொண்டைக்கடலை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க..
பெண் குழந்தைகளை பெற்ற ஒவ்வொரு பெற்றோரும் இந்த விஷயங்கள கண்டிப்பா தெரிஞ்சிக்கணுமாம்...ஏன் தெரியுமா?
ஒவ்வொரு பெற்றோர்களுக்கும் குழந்தைகளை வளர்ப்பது என்பது கடினமாக இருக்கும். அதுவும் பெண் பிள்ளைகளை வளர்ப்பது என்பது மிகவும் சவலானதாக இருக்கும். ஏனென்றால், பெண் பிள்ளைகள் வீட்டின் மகாலெட்சுமி என்று அழைக்கப்படுகிறார்கள்.
ஒரு குடும்பத்தில் பெண் பிள்ளைகள் இருப்பது குடும்ப கவுரமாகவும், பெருமையாகவும் கருதப்படுகிறது. அவள் எப்படி வளர வேண்டும்? என்ன செய்ய வேண்டும்? என்பது பற்றி அவள் முடிவெடுக்க முடியாது. அவளின் பெற்றோர்களும், இந்த சமூகமும்தான் முடிவெடுக்க வேண்டும். பெண்களை சுற்றி பல கட்டுப்பாடுகள் மற்றும் வரம்புகள் உள்ளன.

இன்றும் கூட பெரும்பாலான சந்தர்ப்பங்களில், குடும்பத்தில் ஒரு மகளின் இருப்பு நிரந்தரமான ஒன்றாகக் காணப்படவில்லை. காரணம், அவள் திருமணம் செய்து கொண்டு, அடுத்த வீட்டிற்கு செல்கிறவள் என்ற நினைப்பு. மகளை வளர்ப்பது பற்றிய எண்ணம் மாறி கடந்த சில வருடங்கள் ஆகிறது. மகள்கள் வளர்க்கப்பட வேண்டிய விதத்தில் வளர்க்கப்படுகிறார்கள்.
இன்றைய நாளில் பெண்கள் எல்லா இடங்களிலும் இருக்கிறார்கள். பழமையான காலத்தில் அமைக்கப்பட்ட சில விதிகளால் பெண் பிள்ளைகளின் திறமைகளை வீணடிக்காதீர்கள். பெண் பிள்ளைகளை வளர்ப்பது பற்றி ஒவ்வொரு பெற்றோரும் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் பற்றி இக்கட்டுரையில் காணுங்கள்.
உடல்நலத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்
எப்போதும் உங்கள் பெண் பிள்ளையின் உடல்நலம் மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்வு குறித்து நீங்கள் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். நீங்கள் ஒரு மகளை வளர்க்கும்போது, அவளுடைய ஆரோக்கியம் உட்பட பல விஷயங்களில் நீங்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும். பொதுவாக, பெண்ணின் ஆரோக்கியம் எப்போதும் புறக்கணிக்கப்படுகிறது.
இன்னும் மோசமான நிலை என்றால், பெண்களே, தங்கள் ஆரோக்கியத்தை புறக்கணிக்கிறார்கள். பெண் பிள்ளையும் அப்படித்தான் வளர்க்கப்பட்டாள். தங்கள் ஆரோக்கியத்தை பற்றி பொதுவெளியில் பேச பெண்கள் தயங்குகிறார்கள். மாதவிடாய், பாலினம் மற்றும் எதிர் பாலினத்தைப் பற்றிய கல்வியை அவளுக்குக் கொடுப்பதில் இருந்து உங்கள் மகளின் நலனில் கவனம் செலுத்த தொடங்குங்கள்.
தனியுரிமை தேவை
பெரும்பலான வீடுகளில், பெண் பிள்ளைகளுக்கு தனியுரிமை பற்றி ஒருபோதும் கற்பிக்கப்படுவதில்லை. அவளே அதை கற்றுக்கொள்கிறாள். ஆடைகளை மாற்றுவதற்கு ஒதுக்குப்புறமான இடத்தைக் கண்டுபிடிப்பதில் இருந்து, தனது சானிட்டரி பேட்களை மறைக்க இருண்ட மற்றும் வசதியான இடத்தைக் கண்டுபிடிப்பது வரை, தனியுரிமையைத் தேடுவது ஒரு பெண்ணுக்கு தானாகவே வருகிறது.
ஒரு பெற்றோராக, இதற்கு உங்கள் பெண் பிள்ளைக்கு உதவுங்கள். அது அவளுடைய சொந்தப் போராட்டமாக மட்டும் இருக்க வேண்டாம் மற்றும் ஆரோக்கியமற்ற வழிகளில் அவள் செல்வதை தடுக்கலாம். ஒவ்வொரு வீட்டிலும், பெண் பிள்ளைகளுக்கு தனியுரிமையைப் பெற முழு குடும்பமும் ஒன்று சேரட்டும்.
உரிமை கோரப்பட வேண்டும்
மகள் என்பவள் உங்கள் சொத்து அல்ல. பெண் பிள்ளைகள் பொருளோ அல்லது பொம்மையோ இல்லை. நீங்கள் அவளை வளர்க்கிறீர்கள். அவளுடைய தேவைகளை பூர்த்தி செய்யவும், விருப்பப்படுவதை பெறவும், விஷயங்களில் கருத்தைக் கூறுவதற்கும் அவளுக்கு உரிமைகள் உண்டு.
குடும்ப உறுப்பினர்களாகிய நீங்கள் பெண் பிள்ளைகள் சொல்வதைக் காது கொடுத்து கேட்க வேண்டும். அது அவளுடைய கல்வி அல்லது திருமணமாக இருந்தாலும், அவளுடைய சொந்த முடிவுகளை எடுக்க அவளுக்கு உரிமை உண்டு என்பதை ஒவ்வொருவரும் புரிந்துகொள்ள வேண்டும். அதற்கு நீங்கள் அவளுக்கு ஆதரவளிக்க வேண்டும்.
எப்போதும் "பெண்ணாக" இருக்க வேண்டியதில்லை
பெண்களைப் பற்றிய சமூகத்தின் அறிவு மிகவும் முனைப்பானது. பெண்கள் எப்படி இருக்க வேண்டும் மற்றும் ஆடைகளை எப்படி அணிய வேண்டும் என்று மக்கள் கூறும் சில வரைமுறைகள் உள்ளன. அதன்படி தான் ஒவ்வொரு பெண்ணின் வாழ்க்கை அமைய வேண்டும், வாழ்க்கையை வாழ வேண்டும் என்று இந்த சமூகம் கூறுகிறது.
நினைவில் கொள்ளுங்கள், இது உங்கள் மகளினுடைய வாழ்க்கை. அவள் எப்படி இருக்க வேண்டும் என்று விரும்புகிறாளோ, அப்படியே இருக்க அவளுக்கு உரிமை உள்ளது. உங்கள் மகள் பெண்ணாக இருக்கிறாள். ஆனால், எந்த நேரமும் பெண்ணாக இருக்க வேண்டியதில்லை. எதுவாக இருந்தாலும், அது அவளை மற்றவர்களை விட வித்தியாசமான பெண்ணாக மாற்றாது.
தைரியமாக வளர்க்க வேண்டும்
உங்கள் மகளை தைரியசாலியாக வளர்க்க வேண்டும். யாரையும் நம்பி இருக்க வேண்டாம், அவள் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பதை அவளுக்கு உணர்த்துங்கள். உங்கள் மகளின் எல்லா விஷயத்திலும் நீங்களே முடிவெடுக்க வேண்டாம், செய்ய வேண்டாம்.
அவளே சொந்தமாக விஷயங்களைச் செய்யட்டும் மற்றும் அனுபவத்திலிருந்து கற்றுக்கொள்ளட்டும். இது உங்கள் பெண் பிள்ளையை தைரியசாலியாகவும் துணிச்சலான பெண்ணாகவும் வளர உதவும்.
சாதிக்க முடியும் என்று நம்பிக்கை கொடுங்கள்
பொதுவாக இந்த சமூகத்தில் ஆண்களுக்கு கொடுக்கப்படும் சுதந்திரமும், உரிமையும் பெண் பிள்ளைகளுக்கு கொடுக்கப்படுவதில்லை. ஆண் பிள்ளைகள் மட்டுமே சாதிக்கக்கூடியவர்கள் என்று நம்ப வைப்பதன் மூலம் உங்கள் மகள்களின் திறனைக் கட்டுப்படுத்துகிறீர்கள். இதை முதலில் நிறுத்த வேண்டும்.
தொழில் முதல் பொறுப்பு வரை, பாலினம் என்று எதுவும் இல்லை. ஒரு ஆணால் எந்த விஷயத்தையும் செய்ய முடியும் சாதிக்க முடியும் என்றால், அவளும் அதைச் செய்ய முடியும் என்பதை ஒரு பெண்ணுக்குக் கற்றுக் கொடுங்கள். எதை வேண்டுமானாலும் சாதிக்கலாம் என்பதை உங்கள் மகளுக்குக் கற்றுக் கொடுங்கள்.



Click it and Unblock the Notifications

