Latest Updates
-
12 ஆண்டுகள் கழித்து கடகத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: இந்த 5 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது..! -
கோயம்பத்தூர் ஸ்டைல் சாம்பார் ரெசிபி - இந்த மாதிரி சாம்பார் வைச்சு பாருங்க - டேஸ்ட் வேற லெவலில் இருக்கும் -
உருளைக்கிழங்கை ஒருவாட்டி இந்த பக்குவத்துல வறுவல் செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்.. -
செவ்வாய் ரிஷப ராசிக்கு செல்வதால் கோடிகளில் புரளப்போகும் 3 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
உணவில் உள்ள முழு சத்துக்களை பெற வேண்டுமா? அப்ப இப்படி சாப்பிடுங்க.. கூறும் ஹெல்த் கோச்! -
வீட்டில் செல்வம் பெருகணுமா? வாஸ்து சாஸ்திரம் சொல்லும் இந்த செடிகளை சரியான திசையில் வையுங்கள்! -
சாணக்கிய நீதி படி பெண்களின் கூடவே பிறக்கும் 5 தீய குணங்கள் என்னென்ன தெரியுமா? -
Guru Peyarchi 2026: உச்சம் பெறும் குருவால் இந்த 6 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படப்போகுது.. -
ஓட்ஸ் இட்லியும், கார சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 02 ஜூன் 2026: இந்த நாள் உங்கள் ராசிக்கு எப்படி இருக்கப்போகிறது தெரியுமா
குழந்தைகளை பெற்றுக்கொள்ள உங்களுக்கு விருப்பமில்லையா? அது சரின்னு இந்த 4 காரணம் சொல்லுது!
நீங்கள் குழந்தைகளை விரும்பாததற்கு பல்வேறு தனிப்பட்ட காரணங்கள் இருக்கலாம். குழந்தைகளை வளர்ப்பது சவாலானது மற்றும் உங்கள் மனைவி அல்லது குடும்ப உறுப்பினராக யாரும் உங்களை கட்டாயப்படுத்தக்கூடாது.
பெற்றோர் என்பது எல்லோருடைய கப் டீ அல்ல. அதேபோல, எல்லாரும் அதை குடிக்க வேண்டும் என்ற அவசியமில்லை. சிலர் குழந்தைகளை பெற்றுக்கொள்ள விரும்புகிறார்கள், சிலர் விரும்பவில்லை. இரண்டு வழிகளிலும், அவரவர் தனிப்பட்ட விருப்பங்கள் முக்கியம். பெரும்பாலும் குழந்தைகளைப் பெற்றெடுக்கும் எண்ணத்தில் அதிக பேர் உள்ளனர். மற்றொரு மனிதனுக்கு பொறுப்பாக இருப்பது அல்லது வளர்ப்பது ஒரு பெரிய பாரமாக இருக்கலாம். சிலர், இந்த சமூக அழுத்தத்திற்காக குழந்தைகளை பெற்றுக்கொள்கிறார்கள். எல்லோரும் அதற்கு தயாராக இல்லை. நீங்கள் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களின் குழந்தைகளை நேசிக்கலாம், அவர்களுடன் விளையாடலாம். ஆனால் உங்களுக்கே சொந்தமாக குழந்தை இருக்க விரும்பவில்லை.

சமூக அழுத்தம் மற்றும் குற்ற உணர்வு, பதட்டம் போன்ற வேறு சில உணர்ச்சிகள் அவ்வப்போது உங்களைச் சுமைப்படுத்தக்கூடும் என்றாலும், குழந்தைகளை விரும்பாதது முற்றிலும் ஏற்றுக்கொள்ளத்தக்கது. மேலும் குழந்தைகள் இல்லாததற்கான காரணங்கள் மற்றும் உங்கள் உள்ளத்தை எப்படி சமாதானப்படுத்துவது என்பது பற்றி இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.

உண்மையான சுயத்தை அறிந்து ஏற்றுக்கொள்ளுங்கள்
நீங்கள் குழந்தைகளை விரும்பாததற்கு பல்வேறு தனிப்பட்ட காரணங்கள் இருக்கலாம். குழந்தைகளை வளர்ப்பது சவாலானது மற்றும் உங்கள் மனைவி அல்லது குடும்ப உறுப்பினராக யாரும் உங்களை கட்டாயப்படுத்தக்கூடாது. நீங்கள் இப்போது அல்லது எதிர்காலத்தில் குழந்தைகளை விரும்பவில்லையா என்பதை பற்றி தெளிவாக இருக்க வேண்டும். பதில் எதுவாக இருந்தாலும், உங்கள் கூட்டாளருடன் திறந்த மற்றும் நேர்மையான உரையாடலை மேற்கொள்ளுங்கள். எனவே நீங்கள் உங்களுடைய பக்கத்தில் மட்டுமே யோசிக்கிறீர்கள். உங்கள் முடிவின் பின்னணியில் உள்ள காரணங்களை நீங்கள் புரிந்துகொண்டு ஏற்றுக்கொண்டால், இந்த பாதையைப் பின்பற்றுவது எளிதாகிவிடும்.

தனிப்பட்ட விருப்பம்
சொந்தக் குழந்தை இல்லாத திருமண வாழ்க்கை முழுமையடையாது என்று இந்த சமூகம் அனைவரையும் நம்ப வைத்துள்ளது. குழந்தைகள் உங்கள் உறவில் மகிழ்ச்சியைத் தருகிறார்கள் மற்றும் தம்பதிகளை ஒன்றிணைக்கிறார்கள். இது முழுமையான உண்மை அல்ல, நீங்கள் அதை கண்மூடித்தனமாக நம்பக்கூடாது. மற்றொரு உயிரை இந்த உலகிற்கு கொண்டுவருவது அவர்களின் தனிப்பட்ட விருப்பங்கள். ஆனால், இந்த சமூகம் இதை மன அழுத்தத்துடன் உங்களிடம் கொண்டு வருகிறது. இது ஒரு உணர்வுபூர்வமான அன்பாக இருந்தாலும், ஒருவர் அவரின் விருப்படி குழந்தை பெற்றுக்கொண்டால், மட்டுமே நிகழும்.

உண்மையற்ற எதிர்பார்ப்புகள்
குழந்தைகளைப் பராமரிப்பதற்கு, நீங்கள் தயாராக இல்லாதபோது, மனச்சோர்வு மற்றும் ஆரோக்கியமற்ற உறவுகளுக்கு வழிவகுக்கும். இது உங்களைச் சுற்றியுள்ளவர்களுடனான உங்கள் பிணைப்பில் கவலையும் குற்ற உணர்வையும் ஏற்படுத்தலாம். எனவே சமூகத்தின் உண்மையற்ற எதிர்பார்ப்புகளைக் கற்றுக்கொள்வது முக்கியம். நீங்கள் யார், உங்கள் வாழ்க்கையில் நீங்கள் என்ன விரும்புகிறீர்கள் என்பதை அறிவதில் இருந்து இது தொடங்குகிறது.

உண்மையை எதிர்கொள்ளுங்கள்
நம்மில் பலர் பெற்றோர்களாகிய நமது திறன்களை சந்தேகிக்கிறோம் மற்றும் இந்தப் புதிய பயணத்தைத் தொடங்க பயப்படுகிறோம். பயப்படுவது இயல்பானது மற்றும் புதிய பெற்றோரிடமிருந்து எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் அவர்கள் தவறு செய்வதிலிருந்து கற்றுக்கொள்கிறார்கள், சிலர் பெற்றோராக இருக்க முடியாது என்பதும் ஒரு உண்மை. குழந்தைகளை பெற்றுக்கொள்ள விரும்பவில்லை என்றாலும், நீங்கள் உங்கள் கூட்டாளருடன் அன்பான உறவில் இருக்க முடியும். ஏனென்றால் உங்கள் எதிர்காலத்திலிருந்து முற்றிலும் வேறு எதையாவது நீங்கள் விரும்புகிறீர்கள். இது ஒரு தீவிரமான உண்மை, ஆனால், இதை ஏற்றுக்கொள்வதற்கு மக்களுக்கு கடினமாக உள்ளது.

முடிவை நீங்களே எடுக்க வேண்டும்
குழந்தைகளுக்கு உங்கள் நேரம் மற்றும் ஆற்றல், நிலையான கவனிப்பு மற்றும் நிதி ஆதரவு தேவை. உங்கள் குழந்தையை உலகிற்கு கொண்டு வருவதற்கு முன், நிதித் திட்டங்கள் உட்பட உங்கள் எதிர்காலத் திட்டங்களைப் பற்றி நீங்கள் சில முடிவுகளை எடுக்க வேண்டும். இது உங்கள் இருவருக்கும் சிறந்த முடிவாக இருக்க வேண்டும். ஆதலால், உங்களுக்கு குழந்தை வேண்டுமா? வேண்டாமா? என்பதை நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும். இதனால் குழந்தைகள் இல்லை அல்லது வேண்டாம் என்ற உங்கள் முடிவுகள் மீண்டும் மீண்டும் கேள்விக்குள்ளாக்கப்படாது.

இறுதிகுறிப்பு
குழந்தைகள் உங்கள் உலகத்திற்கு மகிழ்ச்சியைக் கொண்டுவரும். அதே வேளையில், நீங்கள் அதற்குத் தயாராக இல்லை என்றால், உங்களையும் உங்கள் உறவுகளையும் கஷ்டப்படுத்தக்கூடிய கடுமையான விளைவுகள் ஏற்படலாம். திறந்த மனதுடன் இருப்பதும் முக்கியம். மேலும் இன்று உங்களுக்கு சரியானது என்று தோன்றும் விஷயம், இன்னும் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு உங்களுக்கு சரியாக இருக்காது என்பதை நினைவில் கொள்ளுங்கள். மேலும் புதிய தகவல்களைப் பெறும்போதும், நீங்கள் மனிதனாக உருவாகும்போதும் உங்கள் மனதை மாற்றுவது சரியே. உங்கள் வாழ்வை தயக்கமின்றி வாழ்வதே உண்மையான மகிழ்ச்சிக்கும் திறவுகோலாகும்.



Click it and Unblock the Notifications