Latest Updates
-
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
குழந்தைகளைத் தாக்கும் தக்காளி காய்ச்சல் என்றால் என்ன? அதன் அறிகுறிகள் என்ன?
Tomato Flu In Tamil: தக்காளி காய்ச்சல் என்பது ஒரு தொற்றக்கூடிய காய்ச்சலாகும். இந்த காய்ச்சல் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளையே அதிகளவில் பாதிக்கிறது. இந்த தக்காளி காய்ச்சல் வைரஸ் மூலம் பரவி தோலில் சிவப்பு நிற புடைப்புகளை உண்டாக்கும். இந்த தக்காளி காய்ச்சல் காக்ஸ்சாக்கி என்ற வைரஸால் ஏற்படுகிறது.
குறிப்பாக இந்த தக்காளி காய்ச்சல் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகள் மற்றும் சிறிய குழந்தைகளை அதிகளவில் பாதிக்கிறது. இந்த காய்ச்சலின் அறிகுறிகளாக சொறி, மூட்டுவலி மற்றும் காய்ச்சல் போன்றவை அடங்கும். பொதுவாக குழந்தைகள் அழுக்கான இடங்களை தொடுவதாலும் நேரடியாக கையை வாயில் வைப்பதாலும் நோயெதிர்ப்பு சக்தி குறைவாலும் இந்த வைரஸ் எளிதாக பரவி விடுகிறது.

சரி வாங்க, இந்த தக்காளி காய்ச்சலை எப்படி போக்கலாம் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்னென்ன என்பதைப் பற்றி இக்கட்டுரையில் நாம் காண்போம்.
தக்காளி காய்ச்சல் ஒருவரிடம் இருந்து ஒருவருக்கு பரவுமா?
தக்காளி காய்ச்சல் ஒரு தொற்று நோயாகும். இது நேரடி தொடர்பு மூலம் ஒருவரிடம் இருந்து ஒருவருக்கு பரவுகிறது. குழந்தைகளிடம் இருக்கும் சுகாதாரமின்மை மற்றும் கையை வாயில் வைக்கும் பழக்கம் காரணமாக இந்த தொற்று ஒருவரிடம் இருந்து ஒருவருக்கு பரவுகிறது. இந்த காய்ச்சல் பல வாரங்கள் வரை நீடிக்க வாய்ப்பு உள்ளது. எனவே இந்த காய்ச்சல் வருவதற்கு முன்னரே குழந்தைகளுக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது மிகவும் அவசியம்.
தக்காளி காய்ச்சலின் அறிகுறிகள்:
* அதீத காய்ச்சல்
* தோலில் தடிப்புகள் தோன்றுதல்
* கடுமையான நீரிழப்பு ஏற்படுதல்
* சோர்வு
* மூட்டு வலி
* உடம்பு வலி
* சோம்பல்
* வயிற்றுப் பிடிப்புகள்
* சோர்வு
* வயிற்றுப் போக்கு
* வீங்கிய மூட்டுகள்
* தோல் எரிச்சல்
* பசியிழப்பு
* கைகள், முழங்கால்கள், பிட்டம் ஆகியவற்றில் ஏற்படும் நிறமாற்றம்
* மூக்கு ஒழுகுதல் மற்றும் தும்மல்
அடிக்கடி இருமல் ஏற்படுதல்
பாதிக்கப்பட்ட நபரிடம் இருந்து பாதுகாப்பான தூரத்தை பராமரியுங்கள்
தக்காளி காய்ச்சல் தொடர்பு மூலம் பரவுகிறது என்பதால் பாதுகாப்பான தூரத்தை பராமரிக்க வேண்டியது மிகவும் அவசியம். பாதிக்கப்பட்ட நபருக்கு அருகில் குழந்தைகள் செல்வதை தவிர்க்க வேண்டும்.
சரியான சுகாதாரத்தை கடைபிடியுங்கள்
குழந்தைகளுக்கு தக்காளி காய்ச்சல் தொற்று இருந்தால் அதிக தண்ணீர் குடிக்க வலியுறுத்துங்கள். மேலும் சொறி போன்ற அறிகுறிகள் இருந்தால் நகங்களைக் கொண்டு சொறியாமல் பார்த்துக் கொள்ளுங்கள். இதன் மூலம் தொற்று எளிதாக அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
வீட்டு வைத்திய முறைகள் எதுவும் வேண்டாம்
உங்கள் குழந்தைகளுக்கு தக்காளி காய்ச்சல் அறிகுறிகள் அதிகமாக இருந்தால் உடனே மருத்துவரை அணுகுவது நல்லது. தோலில் சிவப்பு கொப்புளங்கள், தோல் எரிச்சல், மூட்டு அசெளகரியம், மூக்கு ஒழுகுதல், அதிக காய்ச்சல், குமட்டல், உடம்பு வலி, இருமல், தும்மல், வயிற்றுப் போக்கு மற்றும் சோர்வு போன்ற அறிகுறிகள் இருந்தால் வீட்டு வைத்திய முறைகளை பின்பற்ற வேண்டாம். இது உங்களுக்கு ஆபத்தை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. உங்கள் மருத்துவரிடம் சென்று முறையான சிகிச்சை முறைகளை மேற்கொள்வதே நல்லது.
உங்களை நீரேற்றமாக வைத்து கொள்ளுங்கள்
குழந்தைகளை நீரேற்றமாக வைத்துக் கொள்வது நல்லது. தண்ணீரை நன்றாக கொதிக்க வைத்து குழந்தைகளுக்கு பருக கொடுங்கள். தண்ணீரைத் தவிர ஆரோக்கியமான பானங்களான பழச்சாறுகள் , இளநீர் போன்றவற்றை உணவில் சேர்க்க கொடுங்கள்.
தக்காளி காய்ச்சல் சிகிச்சை முறைகள்
தக்காளி காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். போதுமான ஓய்வு மற்றும் தூக்கம் என்பது மிகவும் அவசியம். தோலில் ஏற்படும் கொப்புளங்கள் வெடிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அறிகுறிகள் குறையும் வரை கவனமாக இருக்க வேண்டும். மூக்கு ஒழுகுதல், தும்மல் போன்றவற்றிற்கு தூய்மையான கர்ச்சீப்பை பயன்படுத்த வேண்டும். அறிகுறிகள் குறையும் வரை தனிமைப்படுத்துவது அவசியம்.
கவனத்தில் வைக்க வேண்டியவை
தக்காளி காய்ச்சலும் டெங்கு, சிக்குன்குனியா காய்ச்சலைப் போன்றது தான். எனவே நோயாளி குணமாகும் வரை அவரை தனிமையில் வைக்க வேண்டும். ஏனெனில் பாதிக்கப்பட்ட நபரிடம் இருந்து எளிதாக மற்றவருக்கு பரவ நேரிடலாம். பாதிக்கப்பட்ட நபர் பயன்படுத்தும் உடைகள், பாத்திரங்கள் மற்றும் படுக்கைகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். வெதுவெதுப்பான நீரில் போட்டு நன்றாக சுத்தம் செய்து உலர வையுங்கள். அப்புறம் மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்துகளை அவருக்கு கொடுத்து வாருங்கள்.



Click it and Unblock the Notifications