Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
26 வார கருவைக் கலைக்க அனுமதியை மறுத்த உச்சநீதிமன்றம்: ஏன்? உண்மை காரணம் என்ன?
Supreme Court Rejects Abort At 26-week Pregnancy: சமீபத்தில் ஏற்கனவே இரண்டு குழந்தைகளுக்கு தாயான பெண்மணி, மூன்றாவது குழந்தையை பெற்றெடுக்க விரும்பவில்லை என தன் வயிற்றில் வளரும் 26 வார கருவை கலைக்க அனுமதி வேண்டும் என்று கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். இதற்கு இரு நீதிபதிகள் அமர்வு அனுமதி அளித்த நிலையில், அப்பெண்ணின் வயிற்றில் வளரும் கரு உயிர்வாழ்வதற்கான சாத்தியத்தைக் கொண்டிருப்பதாக எய்ம்ஸ் மருத்துவர்கள் குழு தெரிவித்துள்ளது.
மேலும் அந்த பெண்ணுக்கு எந்த மாதிரியான கருகலைப்பை செய்ய வேண்டுமென மருத்துவக்குழு கேட்டிருந்தது. இந்த வழக்கு மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்கு மாற்றப்பட்டது. அந்த பெண்ணை மீண்டும் பரிசோதனை செய்து கருக்கலைப்பிற்கான சாத்தியம் குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய அக்குழுவிற்கு அறிவுறுத்தப்பட்டது.

அதற்கு அந்த குழு அப்பெண்ணை பரிசோதித்ததில் அப்பெண்ணின் வயிற்றில் வளரும் சிசு 26 வாரங்கள் மற்றும் 5 நாட்களை கடந்துள்ளது என்றும், கரு ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும், கருவின் இதயத் துடிப்பை மேற்கொள்ளும் நடவடிக்கை தவறாக போகும் பட்சத்தில் அக்குழந்தை வாழ்நாள் முழுவதும் பாதிக்கப்படும் என்றும் அறிக்கை அளித்துள்ளனர். இந்த அறிக்கையை பரிசீலித்த நீதிபதிகள் 26 வார கருவை கலைக்க மறுப்பு தெரிவித்துள்ளனர்.
கருத்தரித்து தாமதமான நிலையில், அதுவும் 26 வாரத்தை கடந்த பின் கருவை கலைக்க முயற்சித்தால், அது அப்பெண்ணின் உடலில் பல்வேறு மோசமான விளைவுகளை ஏற்படுத்தலாம் அல்லது உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தலாம். பொதுவாக தாமதமான கருக்கலைப்புகள், ஆரம்ப கால கருக்கலைப்புகளில் இருந்து வேறுபட்டவை. இது பொதுவாக முதல் மூன்று மாதங்களில் அல்லது இரண்டாவது மூன்று மாதங்களின் ஆரம்ப காலத்தில் நிகழும். இப்போது தாமதமான நிலையில் கருவைக் கலைத்தால் எந்த மாதிரியான விளைவுகளை சந்திக்கக்கூடும் என்பதைக் காண்போம்.
தாமதமான கருக்கலைப்பினால் உடல் ரீதியாக ஏற்படும் பக்க விளைவுகள்
தாமதமான கருக்கலைப்புகள், அதுவும் 24 வாரத்திற்கு மேல் கருக்கலைப்பு செய்யும் போது, அது உடல் ரீதியாக பல பிரச்சனைகளை ஏற்படுத்தும். அதில் அதிகப்படியான இரத்தப்போக்கு, தொற்றுகள், கருப்பையில் காயங்கள் மற்றும் பிற உறுப்புகளில் சேதம் போன்றவை அடங்கும்.
மேலும் தாமதமாக கருக்கலைப்பு செய்யும் போது, அறுவை சிகிச்சை தேவைப்படுவதால், அது அறுவை சிகிச்சைக்கு பின் ஏற்படும் சிக்கல்களை அதிகரிக்கும். கூடுதலாக இது அப்பெண்ணை உணர்ச்சி ரீதியாகவும், மன ரீதியாகவும் மோசமாக பாதிக்கும்.
தாமதமான கருக்கலைப்பு பெண்களின் உடலை எப்படி பாதிக்கிறது?
தாமதமாக கருவைக் கலைக்கும் போது, அது அப்பெண்ணின் உடலில் குறுகிய கால மற்றும் நீண்ட கால பாதிப்புகளை ஏற்படுத்தும். அதில் உடல் ரீதியாக, தழும்புகள், கருப்பை சேதம் அல்லது மீண்டும் கருவுறுதலில் பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
முக்கியமாக கருக்கலைப்பிற்கு பின், உடலில் இரத்தத்தின் அளவு குறைவதால், இரத்த சோகை ஏற்படுவதற்கான வாய்ப்புக்களும் உள்ளன. மேலும் இதனால் மிகுந்த உடல் சோர்வை சந்திக்கக்கூடும். உணர்ச்சி ரீதியாக, இது குற்ற உணர்வு, மன வருத்தம் மற்றும் பதட்டம் போன்றவற்றிற்கு வழிவகுக்கும்.
தாமதமான கருக்கலைப்பை எது ஆபத்தானதாக்குகிறது?
தாமதமான கருக்கலைப்பு மிகவும் ஆபத்தானது. ஏனெனில் கரு நன்கு வளர்ந்திருக்கும். வளர்ந்த நிலையில் உள்ள கருவை அகற்ற சிக்கலான அறுவை சிகிச்சையை செய்ய வேண்டியிருப்பதால் தாயின் உடல் மோசமாக பாதிக்கப்படலாம். சில சமயங்களில் தாயின் உயிருக்கே ஆபத்துகள் ஏற்படுவதற்கான வாய்ப்புக்களும் உள்ளன.



Click it and Unblock the Notifications