Latest Updates
-
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா? -
தொடர்ந்து 10 நாட்கள் கிராம்பு நீரை குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஆந்திரா பீர்க்கங்காய் பச்சடி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் வெற்றியும், பணமும் குவியும்! -
விமானத்தில் ஏர் ஹோஸ்டஸாக எப்போதும் ஏன் பெண்கள் மட்டுமே இருக்கிறார்கள் தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
கோதுமை இட்லியும், தேங்காய் இல்லாத தண்ணி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்!
விடுமுறை முடுஞ்சது.. உங்க குழந்தைகளை பள்ளிக்கு எப்படி அழைத்துச் செல்வது? இதோ டிப்ஸ்..!
Parenting tips for kids: கோடை வெயிலைக் குறைக்க வசதியாக வீட்டில் இருந்தபடி இத்தனை நாட்களாக குழந்தைகள நேரத்தை கழித்தனர். குழந்தைகள் தங்கள் பாட்டி, தாத்தா மற்றும் உறவினர்கள் வீடுகளுக்குச் விடுமுறைக்கு சென்றனர். ஆனால் இப்போது பள்ளிக்குச் செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது.
ஆனால், இதுவரை மகிழ்ச்சியாக இருந்த குழந்தைகள் மீண்டும் பள்ளிக்குச் செல்ல மிகவும் சிரமப்படுவார்கள்.. விடுமுறையில் தாமதமாக எழுந்து, அவர்கள் விரும்பும் இடங்களுக்குச் சென்று, சாப்பிட்டு, சுற்றித் திரிவார்கள். இனிமேல் ரோபோ போல் காலை எழுந்தவுடன் பள்ளிக்கு கிளம்பி செல்ல வேண்டும்..

இதுபோல காலை நேரத்தில் சீக்கிரம் எழுந்து பள்ளிக்குச் சென்று படிப்பது என்பது குழந்தைகளை காட்டிலும் பெற்றோர்களும் சற்று பதற்றத்தில் உள்ளனர். ஆனால் உங்கள் பிள்ளைகள் நன்றாகப் பள்ளிக்குச் செல்ல வேண்டும் என்றால் இதைச் செய்ய வேண்டும் என்று பல நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். வாங்க இந்த குறிப்புகளை பற்றி இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்.
1. நேரம் அட்டவணை அமைக்க வேண்டும்: குழந்தைகள் பள்ளிக்கு செல்ல பழகுவதற்கு முதலில் நேரத்தை ஃபிக்ஸ் செய்ய வேண்டும். எழுந்திருத்தல், தயாராகுதல், விளையாடுதல், வீட்டுப்பாடம் செய்தல், குடும்ப உறுப்பினர்களுக்குச் சிறிது நேரம்... இப்படி எல்லாச் செயல்களுக்கும் நேர அட்டவணை அமைக்க வேண்டும். இப்படி செய்தால் அதை பின்பற்றி விரைவில் பழகிவிடுவார்கள். ஒரு மாதத்திற்கான நிலையான கால அட்டவணை அமைத்தல் என்பது சிறந்தது.
2. செய்ய வேண்டிய பட்டியலை உருவாக்கவும்: உங்கள் குழந்தைகளுக்கான செய்ய வேண்டிய பட்டியலை உருவாக்குவது சிறந்த முடிவுகளைப் பெறலாம். வீட்டுக்குக் கொண்டு வர வேண்டிய புத்தகங்கள், பள்ளிக்கு எடுத்து செல்ல வேண்டிய நோட்டுப் புத்தகங்கள் என அனைத்தையும் எழுத வைத்தல். உங்கள் குழந்தைகள் தினமும் பள்ளிக்கு எடுத்துச் செல்ல வேண்டிய அனைத்தையும் நினைவூட்ட இந்தப் பட்டியல் பயனுள்ளதாக இருக்கும். இதைச் செய்வதன் மூலம், உங்கள் குழந்தை ஒரு பொறுப்பான மாணவராக வளருவார்..
3. விரும்புவதைத் தேர்ந்தெடுக்கட்டும்: உங்கள் பிள்ளைக்குத் தேவையான பள்ளிப் பொருட்கள், புத்தகங்கள், காலணிகள், சீருடைகள் ஆகியவற்றின் பட்டியலை முன்கூட்டியே தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள்... குழந்தைகளுடன் ஷாப்பிங் செய்து, அவர்கள் விரும்புவதைத் தேர்ந்தெடுக்க அனுமதிக்கவும்.
4. படிப்பு மட்டும் முக்கியமல்ல: பள்ளிக்குச் செல்வதற்கு முன், அதாவது காலையில், பள்ளியிலிருந்து திரும்பிய பிறகு, அவர்கள் ஓய்வு நேரத்தில் என்ன செய்ய விரும்புகிறார்கள் என்று முதலில் அவர்களிடம் கேட்க வேண்டும். நீங்கள் விளையாடுவது, பாடுவது, நடனம் ஆடுவது, ஏதேனும் ஒரு இசைக்கருவியை வாசிப்பது என்றால், அந்த வகுப்புகளில் சேருவது அவசியம்.
5. ஆரோக்கியமான உணவு: குழந்தைகளை அதிக புரதச்சத்து நிறைந்த காலை உணவுடன் பள்ளிக்கு அனுப்ப வேண்டும். இது அவர்களின் உடல் மற்றும் மன வலிமையை பலப்படுத்துகிறது. அவர்கள் விரும்பி உண்ணும் ஆரோக்கியமான உணவை கொடுக்க வேண்டும். புதிய பள்ளி ஒரு ஆண்டுக்கு குழந்தைகளை பழக்கப்படுத்துவது சற்று கடினமாக இருந்தாலும். மேலும், அவர்களின் சாதனைகளை பள்ளியில் கொண்டாடுவது அவர்களின் தன்னம்பிக்கையை அதிகரிக்கும்.



Click it and Unblock the Notifications