For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கர்ப்ப காலத்தில் நீங்கள் எப்போது எல்லாம் மருத்துவரிடம் செல்ல வேண்டும் தெரியுமா?

கர்ப்பமாக இருக்கும் பெண்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம். சில பெண்கள் கர்ப்பமாக இருக்கும் போது பெரும்பாலான கஷ்டத்தை அனுபவிப்பார்கள். மற்றும் சில பெண்கள் அதிர்ஷ்டவசமாக எந்த வித கஷ்டமும்

|

கர்ப்பமாக இருக்கும் பெண்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம். சில பெண்கள் கர்ப்பமாக இருக்கும் போது பெரும்பாலான கஷ்டத்தை அனுபவிப்பார்கள். மற்றும் சில பெண்கள் அதிர்ஷ்டவசமாக எந்த வித கஷ்டமும் இல்லாமல் தப்பித்து விடுவார்கள். அதே போல் சில பெண்கள் சுக பிரசவம் மற்றும் ஆரோக்கியமான குழந்தைகளை பெற்று எடுக்கின்றனர். ஆனால் உடல் ஆரோக்கியமற்ற பெண்கள் மற்றும் இரட்டை குழந்தைகளை சுமப்பவர்களாக இருப்பவர்கள் தங்கள் உடல் நலத்தில் சற்று அதிகமாக அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும்.

Reasons to Call the Doctor During Pregnancy

பெண்கள் பொதுவாக கர்ப்ப காலத்தில் தங்களது உடலில் சற்று அதிகமாகவே அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். நீங்கள் எப்போது மருத்துவரிடம் செல்ல வேண்டும். எந்த மாதிரி அறிகுறிகள் வரும் போது நீங்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பது மிக முக்கியம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இரத்தப் போக்கு

இரத்தப் போக்கு

கர்ப்ப காலத்தில் இரத்தப் போக்கு என்பது பதிமூன்று நாட்கள் முதல் சில வாரங்கள் நீடிக்கும். இதற்க்காக பயப்பட தேவையில்லை. ஏறக்குறைய 25 சதவீத பெண்கள் இரத்த போக்கினை அனுப வைக்கின்றனர். ஆனால் இவர்களும் ஆரோக்கியமான குழந்தைகளை பெற்று எடுக்கிறார்கள். இரத்த போக்கு என்பது கருசிதைவு என்று அனைவரும் கருதிகிறார்கள். எல்லா இரத்த போக்கும் கரு சிதைவுக்கு காரணம் அல்ல. உங்கள் கரு முட்டை வளர்ச்சிக்கான நேரம் இது எனவே இரத்த போக்கு ஏற்படும் போது கரு சிதைவு என்று வருந்த தேவையில்லை. நீங்கள் கர்ப்பமான ஆரம்ப காலத்தில் உடலுறவு வைப்பதாலும் இரத்தப் போக்கு ஏற்பட வாய்ப்புள்ளது. உங்களுக்கு எப்போது இரத்த போக்கு ஏற்பட்டாலும் நீங்கள் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

தொடர்ச்சியான தலைவலி

தொடர்ச்சியான தலைவலி

கடுமையான மற்றும் தொடர்ச்சியான தலைவலியுடன் மயக்கம், தலைசுற்றல் அல்லது மங்கலான பார்வை இருந்தால் நீங்கள் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். உட்காருவதற்கு ஏற்றவாறு அமைதியான இடத்தில அமருங்கள். உங்கள் அருகில் எப்போதும் ஒருவர் இருக்க வேண்டும். மருத்துவரை பார்க்க காத்திருந்தால் தண்ணீர் குடிக்க முயற்சி செய்யுங்கள். நீங்கள் ஓய்வு எடுக்க விரும்பினால் உங்கள் இடது பக்கம் சாய்ந்து கொள்ளுங்கள்.

MOST READ:சோயா சாஸ் ஊற்றியதும் மறைந்திருக்கும் ஓவியங்கள் வெளியே வருமாம்... நீங்களே பாருங்களேன்...

சிறுநீர் கழித்தல்

சிறுநீர் கழித்தல்

கர்ப்ப காலத்தில் அடிக்கடி சிறுநீர் கழிப்பது எல்லா பெண்களிடம் இருந்தும் வரும் ஒரு பொதுவான புகாராகவே இருக்கிறது. ஆனால் உங்கள் சிறுநீரக பை எரியும் போதோ அல்லது வலிக்கும் போது இது நோய்த்தொற்றின் அறிகுறியாகும். இது பல பெண்களுக்கு ஏற்படும் பொதுவான நோய்த்தொற்றுயாகும். உங்களுக்கு சிறுநீர் பையில் வலியோ அல்லது எரிச்சலோ இருந்தால் நீங்கள் உடனடியாக உங்கள் மருத்துவரை தொடர்பு கொள்ள வேண்டும். ஏனெனில் நோய்த்தொற்று உருவாகும் போது குறைப்பிரசவமோ அல்லது குறைந்த எடையில் குழந்தை பிறக்கவும் வாய்ப்பு உள்ளது.

கடுமையான இடுப்பு வலி

கடுமையான இடுப்பு வலி

கர்ப்ப காலத்தில் இடுப்பு வலி என்பது அனைவருக்கும் ஏற்படும் ஒன்று தான். தாங்க முடியாத அளவில் அதிகமான வலி ஏற்படும் போது சற்று தண்ணீர் குடித்து விட்டு ஓய்வு எடுங்கள். உங்கள் வலியுடன் காய்ச்சலும் சேர்ந்து இருக்கும் போது மருத்துவரை அணுக வேண்டும்.

இடைவிடாத வாந்தி

இடைவிடாத வாந்தி

கர்ப்ப காலத்தில் குமட்டல் மற்றும் வாந்தி வருவது இயல்பான ஒன்று. ஆனால் காய்ச்சலுடன் வாந்தி ஏற்படும் போது உங்கள் மருத்துவரை அணுக வேண்டும். அதே போல் காலை எழுந்தவுடன் வாந்தியோ அல்லது உங்கள் உடல் ஆரோக்கியம் சரி இல்லாதது போல் உணர்ந்தால் மருத்துவ ஆலோசனைப்

பெறுவது நல்லது.

காய்ச்சல் அல்லது குளிர் காய்ச்சல்

காய்ச்சல் அல்லது குளிர் காய்ச்சல்

காய்ச்சல் என்பது சாதாரண விஷயம் தான். ஆனால் கர்ப்ப காலத்தில் ஏற்படும் காய்ச்சல் உங்கள் குழந்தையும் சேர்த்து பாதிப்பை ஏற்படுத்தும். குழந்தைகளின் வளர்ச்சியும் உங்கள் உடலின் ஆரோக்கியம் மற்றும் வெப்பநிலை பொறுத்தே அமைகிறது. கர்ப்பத்தின் ஆரம்ப காலத்தில் வெப்ப நிலையை சீர்குலைப்பது கரு சிதைவுக்கு வழிவகுக்கும். எனவே காய்ச்சலோ அல்லது குளிர் காய்ச்சலோ ஏற்பட்டால் மருத்துவரை அணுக வேண்டும்.

MOST READ:இன்டர்வியூ போகும்போது எப்படி மேக்அப் போட்டுட்டு போனா வேலை கன்பார்மா கிடைக்கும்?...

கருவின் இயக்கம்

கருவின் இயக்கம்

உங்கள் கர்ப்ப காலத்தில் கருவின் அசைவுகளை எண்ண வேண்டியது அவசியம். ஒரு நாளைக்கு ஒரு முறையாவது பத்து நிமிடத்திற்குள் பத்து அசைவுகளை நீங்கள் உணர வேண்டும். அவ்வாறு ஏதும் உணரவில்லை எனில் நீங்கள் ஒரு டம்ளர் அளவு பழச்சாறு அருந்த வேண்டும். அதில் உள்ள சர்க்கரை குழந்தையின் இரத்த சர்க்கரையை அதிகரித்து அசைவுகளை ஏற்படுத்தும். மேலும் நீங்கள் இடது பக்கமாக அரை மணி நேரம் முதல் இரண்டு மணி நேரம் வரை படுத்துக் கொண்டு அசைவுகளை எதிர் பாருங்கள். எந்த வித அசைவுகளையும் உணர வில்லை எனில் நீங்கள் கண்டிப்பான முறையில் மருத்துவரிடம் செல்ல வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Reasons to Call the Doctor During Pregnancy

Few women pass through pregnancy without an anxious moment along the way. Fortunately, most go on to have normal pregnancies and healthy babies. While women with special health conditions or a history of premature labor, or those who are carrying multiples, need to pay special heed when anything unusual occurs, most women can relax and let nature take its course.
Story first published: Thursday, August 1, 2019, 17:43 [IST]
Desktop Bottom Promotion