Latest Updates
-
2 முருங்கைக்காயை இருந்தா.. இப்படி ஒருவாட்டி பிரியாணி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
4-ல் 3 இந்திய பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு: உடலில் இரும்புச்சத்தை அதிகரிக்க சிம்பிளான 6 டிப்ஸ் இதோ! -
ஐயங்கார் ஸ்டைல் பொரிச்ச ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
வாடகைக்கு மனைவி கொடுக்கும் வினோத நாடு? இதற்கு எவ்வளவு கட்டணம் வாங்குறாங்க தெரியுமா? -
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா?
கர்ப்ப காலத்தின் போது தாவரங்களினால் ஏற்படும் அழற்சி உங்கள் குழந்தையை பாதிக்குமா?
அழற்சி ஏற்படுவதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று தாவரங்களில் இருந்து ஏற்படும் துகள்கள் மற்றும் சுற்றி இருக்கும் தூசிகள் ஆகியவை முக்கிய காரணங்களாகும். தாவரங்கள், மரங்கள், புற்கள் போன்றவற்றிலிருந்து வரும்
அழற்சி ஏற்படுவதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று தாவரங்களில் இருந்து ஏற்படும் துகள்கள் மற்றும் சுற்றி இருக்கும் தூசிகள் ஆகியவை முக்கிய காரணங்களாகும். தாவரங்கள், மரங்கள், புற்கள் போன்றவற்றிலிருந்து வரும் சிறு சிறு கண்ணுக்குத் தெரியாத மகரந்த துகள்கள் அலர்ஜினை ஏற்படுத்துகின்றன.

இந்த துகள்கள் உங்கள் நோய் எதிர்ப்பு மண்டலத்தைப் பாதித்து அல்ர்ஜினை ஏற்படுத்துகிறது. மேலும் இந்த மகரந்த அழற்சி சிலருக்கு ஆண்டு முழுவதும் இருப்பதாகவும் மற்றும் சிலருக்குக் குறிப்பிட்ட மாதங்களுக்கு மட்டும் இருப்பதாகவும் கூறுகின்றனர்.

மகரந்த அழற்சி மற்றும் ஆஸ்துமா
ஆஸ்துமா ஏற்படுவதற்கு முக்கிய காரணமாக மகரந்த துகள்கள் உள்ளது. மகரந்த துகள்களைச் சுவாசிக்கும் போது முதலில் நுரையீரல் பாதிக்கப்பட்டு நோய்யெதிர்ப்பு மண்டலத்தைத் தாக்குகிறது. இந்த மகரந்த துகள்கள் உங்களின் சுவாச மண்டலத்தில் நுழையும் போது நோய் எதிர்ப்பு மண்டலம் இவற்றைத் தாக்கி ஆஸ்துமாவை ஏற்படுத்துகிறது.

நோய் எதிர்ப்பு மண்டலம்
நோய் எதிர்ப்பு மண்டலத்தில் மகரந்த துகள்கள் நுழையும் போது அங்கிருக்கும் புரதங்கள் மற்றும் ஆன்டிபயோடிக் அகியவற்றை வெளிப்புற பொருட்களாகக் கருதி ஒவ்வாமைக்கு வழி வகுக்கின்றன. இந்த மகரந்த துகள்களில் இருக்கும் இராசயங்கள் நோய்யெதிர்ப்பு மண்டலத்தில் பரவி மூக்கடைப்பு, கண் அரிப்பு மற்றும் சரும அழற்சி ஆகியவற்றை ஏற்படுத்துகிறது.

தண்டர்ஸ்ட்ரோம் ஆஸ்துமா
தண்டர்ஸ்ட்ரோம் ஆஸ்துமா என்பது காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் ஒன்றாகும். இது காற்றில் மகரந்த துகள்கள் பரவிச் சுவாசிக்கும் போது உட்சென்று சுவாசத்தைத் தடுத்துச் சரியாக மூச்சு விட முடியாமல் செய்யும் அல்லது மூச்சினை வேகமாக விடச் செய்யும். அத்துடன் மார்பில் சற்று கனமான வலி, இருமல் மற்றும் மூச்சுத்திணறல் போன்றவற்றிற்கு வழிவகுக்கும்.

குழந்தை பாதிப்பு
கர்ப்ப காலத்தில் கர்ப்பிணிப் பெண்கள் மகரந்த துகள்களினால் பாதிக்கப்பட்டால் அது குழந்தையும் பாதிக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். கர்ப்ப காலத்தின் 6 முதல் 9 மாதங்களில் இந்த நோய் தீவிரமடைவதினால் குழந்தைகளுக்கு ஆஸ்துமா ஏற்பட வாய்ப்புள்ளது. அதாவது இந்த நோய் தொப்புள்கொடி வழியாகத் தாயிடம் இருந்து குழந்தைகளுக்குப் பரவுவதால் குழந்தைகளுக்கு எதிர்காலத்தில் ஒவ்வாமை மற்றும் ஆஸ்துமா போன்றவை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன என்றும் கூறுகின்றனர்.

குழந்தைகள் ஆஸ்துமா
குழந்தைகள் அடிக்கடி இருமல், மூச்சு விடத் திணறுதல், மார்பு வலி, தூங்கும் போது மூச்சு விடத் திணறுதல் மற்றும் தூங்கும் போதும் சுவாசிக்கும் போதும் விசில் போன்ற சத்தம் வருதல் அத்துடன் எப்போதும் சோர்வாக இருப்பது போன்ற அறிகுறிகள் இருந்தால் ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்று அர்த்தம்.

தடுத்தல்
பெண்களின் கர்ப்ப காலத்திலும், குழந்தைகளுக்கும் ஆஸ்துமா வராமல் தடுப்பதற்கு சில வழிகள் உள்ளன அவற்றை எப்போதும் கடைப்பிடியுங்கள்.
உங்களுக்கு எந்த மாதிரியான அழற்சி சேராது என்பதை கண்டுபிடியுங்கள். அப்படிப்பட்ட இடங்களுக்கும் ஒவ்வாமை ஏற்படுத்தும் மரம் மற்றும் செடிகள் இருக்கும் இடத்திற்கும் செல்லுவதைத் தவிருங்கள்.
கார்களில் செல்லும் போது கதவுகளை மூடிக்கொள்ளுங்கள்.
வெளியில் செல்லும்போது ஃபேஸ் மாஸ்க் அணிந்து கொள்ளுவது நல்லது.
வெளியிலிருந்து வந்தவுடன் உங்கள் கைகள் மற்றும் முகங்களை நன்றாகக் கழுவுங்கள்.
ஏதேனும் அழற்சி ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரிடம் செல்லுங்கள்.



Click it and Unblock the Notifications
