Latest Updates
-
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்..
கருவில் இருக்கும்போதே குழந்தைகள் பூமியில் வாழ தங்களை எப்படி தயார்படுத்திக்கொள்வார்கள் தெரியுமா
பொதுவாக குழந்தைகள் பிறப்பதற்கு கருவில் இருக்கும் போது சில குறிப்பிட்ட விஷயங்களை கற்றுக்கொள்வார்கள் என்று நாம் கேள்விப்பட்டிருப்போம்.
நம் வாழ்க்கையை அழகாக்குவது யாரென்றால் அது நம் மூலமாக இந்த உலகை அடையும் நமது குழந்தைகள்தான். அந்த குழந்தைகளை பற்றி என்னதான் தெரிந்து கொண்டாலும் நமக்கு அது போதவே போதாது. மனித பிறப்பு என்பது கற்றலை அடிப்படையாக கொண்டது. பிறப்பு தொடங்கி இறப்பு வரை நமது வாழ்க்கையில் நடக்கும் ஒவ்வொரு விஷயமும் நமக்கு ஒரு பாடத்தை கற்பிக்கும். ஆனால் இந்த கற்றல் என்பது நம் பிறந்த பிறகுதான் தொடங்குகிறதா என்று கேட்டால் அதற்கு பதில் இல்லை என்பதுதான் உண்மை.

பொதுவாக குழந்தைகள் பிறப்பதற்கு கருவில் இருக்கும் போது சில குறிப்பிட்ட விஷயங்களை கற்றுக்கொள்வார்கள் என்று நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் நாம் நினைப்பதையும் தாண்டி குழந்தைகள் தாயின் கருவில் இருக்கும்போது பலவற்றை கற்றுக்கொள்ளவும், உணரவும் செய்கிறார்கள். அந்தத் வகையில் குழந்தைகள் தாயின் கருவில் இருக்கும்போது கற்றுக்கொள்ளும் ஆச்சரியமான விஷயங்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

மனஅழுத்தம்
அம்மாக்கள் எந்த அளவிற்கு பதட்டமும், மனஅழுத்தமும் அடைகிறார்களோ அதற்கேற்றாற்போல கருவில் உள்ள குழந்தை தன் இடதுகையை முகத்தை நோக்கி நகர்த்தும். இதன்மூலம் அம்மாவின் உணர்ச்சிகள் குழந்தையின் மீது ஆச்சரியமான விளைவுகளை ஏற்படுத்தும். எனவே அம்மாக்கள் எப்பொழுதும் வயிற்றில் குழந்தை இருக்கும்போது பதட்டமடையாமல் அமைதியாக இருக்க வேண்டும்.

உணவின் சுவை
சில குறிப்பிட்ட உணவுகளை சாப்பிடும்போது அதன் சுவை உங்கள் உடலில் உள்ள அமோனியோடிக் திரவத்தால் உணரப்படும். பூண்டு, இஞ்சி, சோம்பு, மற்றும் இனிப்பு சுவை உள்ள பொருட்கள் அனைத்தும் அமோனியோடிக் அமிலத்தால் உணரப்படும். ஆராய்ச்சியாளர்களின் நம்பிக்கைப்படி குழந்தைகள் நம் உலகத்திற்குள் நுழையும்போது அவர்களை நம் உணவுப்பழக்கத்திற்கு தயார்படுத்தும் இயற்கை நிகழ்வாக இது உள்ளது என்று நம்புகிறாரகள்.

உணர்ச்சிகள்
குழந்தைகள் தாயின் கருவில் சிரிப்பார்கள் என்பது நாம் அறிந்ததே. கரு உருவான முப்பத்தி ஆறாவது வாரத்தில் இருந்து குழந்தைகள் தங்களுக்கென சில முகபாவங்களை வரையர்த்துக்கொள்வார்கள். தனக்கென தனிப்பட்ட அழகிய புன்னகை, மகிழ்ச்சியின்போது கண்களை மூடிக்கொள்ளுதல் போன்றவற்றை செய்வார்கள்.

கண்களை திறப்பது
இருபத்தி எட்டாவது வாரத்தில் இருந்து உங்கள் குழந்தைகள் அடிக்கடி கண்களை திறக்க தொடங்குவார்கள். அவர்களால் அதிகமாக எதையும் பார்க்கமுடியாது, ஆனால் இரண்டாவது பருவத்தில் இருந்து அவர்கள் வெளிச்சத்திற்கு எதிர்வினை ஆற்றுவார்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது. பிரகாசமான ஒளி தாயின் வயிறு மூலம் குழந்தையை அடையலாம், இதனால் அவர்கள் நகர முயற்சிப்பார்கள். இந்த ஒளியால் அவர்களுக்கு எந்த தீங்கும் ஏற்படாது.

கதைகளை புரிந்துகொள்வது
ஆய்வுகளின் படி அம்மாக்கள் படிக்கும்போது கருவில் உள்ள குழந்தையின் இதயத்துடிப்பு குறையும், ஏனெனில் அந்த சமயங்களில் குழந்தைகள் ஜாலியாகதங்கள் அம்மா கூறும் கதைகளை கேட்க தொடங்குகிறார்கள். கருவில் இருக்கும்போது அவர்கள் கேட்கும் அனைத்து குரல்களையும் அவர்களால் கேட்க முடியும், அதன்பின்னர் அவர்கள் பிறந்தபின் தாங்கள் கீத குரலை அவர்களால் அடையாளம் காண முடியும்.

சுவாசித்தல்
உங்கள் குழந்தைக்கு தேவையான ஆக்சிஜனை வழங்கும் பணியை உங்கள் தொப்புள்கொடி சரியாக செய்கிறது. இருப்பினும் உங்கள் குழந்தை எப்படி மூச்சுவிட வேண்டும் என்ற பயிற்சியை கருவிலேயே தொடங்கிவிடுவார்கள். கரு உருவான ஒன்பதாவது வாரத்திலேயே குழந்தைகள் மூச்சுவிடவும், அது வாழ்க்கைக்கு எவ்வளவு முக்கியம் என்பதையும் அறிந்துகொண்டு விடுவார்கள்.

அழுகை
ஆய்வுகளின் படி மூன்றாவது பருவகாலத்தில் கருவில் உள்ள குழந்தைகள் தாயின் வயிற்றின் மீது ஏற்படும் சத்தங்களுக்கு எதிர்வினையாக வாயைத்திறந்து அழத்தொடங்குவார்கள். மேலும் உதடுளை கீழ்நோக்கி நகர்த்துவார்கள்.

கை - வாய் ஒருங்கிணைப்பு
குழந்தைகள் தங்களின் மூன்றாவது பருவ காலத்தில் கருவில் இருக்கும்போது விரல் சப்ப தொடங்கிவிடுவார்கள். நாம் நினைப்பதை விட குழந்தைகள் கருவில் பலமடங்கு சுறுசுறுப்பாக இருப்பார்கள், பூமியில் பிறந்தவுடன் எப்படி வாழவேண்டும் என்பதற்கான அனைத்து பயிற்சிகளையும் கருவிற்குள்ளேயே தொடங்கிவிடுவார்கள். ஸ்கேன் செய்து பார்க்கும்போது குழந்தைகள் விரல் சப்புவதை பார்ப்பது பெற்றோர்களுக்கு அதீத மகிழ்ச்சியை தரும்.

விக்கல்
விக்கல் குழந்தைகளின் முதல் பருவத்திலேயே தொடங்கிவிடும், ஆனால் அம்மாக்களால் இதனை உணர இயலாது. ஆனால் இரண்டாவது பருவகாலத்தில் அவர்களால் இதை உணரமுடியும். சில அம்மாக்களுக்கு அப்போது கூட உணர முடியாமல் போகலாம்.



Click it and Unblock the Notifications











