For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கருவில் குழந்தையின் வளர்ச்சி நின்றுவிட்டதற்கான அறிகுறிகள்

கர்ப்பகாலம் என்பது பெண்கள் வாழ்வில் மிகவும் மகிழ்ச்சியாகவும், எச்சரிக்கையாகவும் இருக்கவேண்டிய நேரமாகும்.இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் கருவிலுள்ள குழந்தையின் வளர்ச்சி நின்றுவிட்டதென அர்த்தம். இதில்

|

கர்ப்பகாலம் என்பது பெண்கள் வாழ்வில் மிகவும் மகிழ்ச்சியாகவும் அதேசமயம் எச்சரிக்கையாகவும் இருக்கவேண்டிய நேரமாகும். பெண் கருத்தரிக்கும் போது அவர்களுள் விவரிக்க முடியாத ஆயிரக்கணக்கான கேள்விகள் எழும். " படுத்தால் குழந்தைக்கு ஏதாவது ஆகிவிடுமோ?", " அதிகம் சாப்பிட்டால் குழந்தைக்கு ஏதாவது ஆகிவிடுமோ?" என கவலைகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போகும். இந்த கவலைகளாலேயே அவர்களின் தூக்கம் கெடும்.

Pregnancy

பெரும்பாலான கருச்சிதைவுகள் கருவுற்ற 12 வாரங்களுக்குள்ளேயே ஏற்படுகிறது. 10 முதல் 20 சதவீத பெண்களுக்கு 20 வது முன்னரே ஏற்படுகிறது. 20 வாரங்களுக்கு பின் ஏற்படும் கருச்சிதைவு அம்மாவின் உடல்நலத்தையும் பாதிக்கும். எப்பொழுது நடந்தாலும் கருச்சிதைவு என்பது யாராலும் தாங்கிக்கொள்ள முடியாத ஒன்று. உங்கள் குழந்தை கருவில் வளர்ச்சியடைவது நிறுத்தப்பட்டுவிட்டது என்பதை உணர்த்தும் 10 அறிகுறிகளை இங்கு பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
1. இதய துடிப்பு

1. இதய துடிப்பு

பெண்கள் கர்ப்பத்தின் முதல் கட்டத்தில் இருக்கும்போது மருத்துவர்கள் டாப்ளர் கொண்டு குழந்தையின் இதயத்துடிப்பை உணரதொடங்குவார்கள். குழந்தைக்கு இதயத்துடிப்பு 9 அல்லது 10 வது வாரத்தில் ஆரம்பிக்கும். குழந்தையின் நிலை அல்லது தொப்புள்கொடியை பொருத்து குழந்தையின் இதயத்துடிப்பு கேட்காமல் இருக்கலாம், இருப்பினும் இதுவும் குழந்தையின் வளர்ச்சி நின்றுவிட்டது என்பதற்கு இதுவும் ஒரு அறிகுறிதான்.

2. ஃபன்டல் உயரம்

2. ஃபன்டல் உயரம்

ஃபன்டல் உயரம் என்பது அம்மாவின் மைய எலும்பிலிருந்து அளவிடப்படுவதாகும். இதனை டேப்பின் உதவிகொண்டு மருத்துவர்கள் அளவிடுவார்கள். இதுதான் கருவிற்குள் குழந்தை வளரும் அளவை சொல்வதாகும். ஒருவேளை அளவு எதிர்பார்த்த அளவு இல்லையென்றால் மருத்துவர்கள் மேற்கொண்டு மற்ற பரிசோதனைகளை செய்வார்கள். கருவின் வளர்ச்சி நின்றதற்கு முதல் அறிகுறி இதுதான்.

HCG அளவு குறைதல்

HCG அளவு குறைதல்

ஹியூமன் கோரியானிக் கோனாடோட்ரோபின் என்பது கர்ப்பிணி பெண்களுக்கு மட்டும் சுரக்கும் ஒரு ஹார்மோனாகும். வீட்டில் கர்ப்ப பரிசோதனை செய்யும்போது இந்த ஹார்மோன்தான் அவர் கர்ப்பிணியா, இல்லையா என்பதை கூறுவது. இந்த ஹார்மோன் சுரக்கும் அளவு கர்ப்பகாலத்தில் தொடர்ந்து மாறிக்கொண்டேயிருக்கும். இதன் அளவு மிகவும் குறைவது கருவிலுள்ள குழந்தையின் ஆபத்திற்கான அறிகுறியாகும்.

கருவுருதல் வளர்ச்சி கட்டுப்பாடு

கருவுருதல் வளர்ச்சி கட்டுப்பாடு

IGUR சோதனையின் போது கருவிலுள்ள குழந்தையின் வளர்ச்சி விகிதம் எதிர்பார்த்ததை விட குறைவாக இருந்தால் நிச்சயம் அது சிக்கல்தான். இரட்டை குழந்தைகள் வயிற்றில் இருக்கும்போது ஒரு குழந்தை IGUR ஆல் பாதிக்கபட்டால் மற்றொரு குழந்தை பாதுகாப்பாக இருக்கும். இந்த பிரச்சினை தொப்புள்கொடியால் ஏற்படுவது. தொப்புள்கொடியில் பாதிப்பு ஏற்படும்போது அது கருவிலுள்ள குழந்தையின் வளர்ச்சியை பாதிக்கும்.

திடீர் இரத்தப்போக்கு

திடீர் இரத்தப்போக்கு

பெண்களுக்கு மாதம்தோறும் இரத்தப்போக்கு ஏற்படுவது வழக்கமான ஒன்றுதான். ஆனால் கர்ப்பகாலத்தில் இரத்தப்போக்கு ஏற்படும்போது அவ்வாறு அலட்சியமாக விடமுடியாது. அது கருச்சிதைவின் அறிகுறியாக கூட இருக்கலாம். சில பெண்களுக்கு கர்ப்பகாலத்தில் சிறிதளவு இரத்தப்போக்கு ஏற்படலாம் ஆனால் இரத்தப்போக்கின் அளவு அதிகமாக இருந்தால் அது பாதிப்பின் அறிகுறிதான்.

திரவ வெளியேற்றம்

திரவ வெளியேற்றம்

யோனி திரவ வெளியேற்றம் கர்ப்பகாலத்தில் ஏற்படும் ஒன்றுதான் ஆனால் அது அதிகமாயிருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகவும். இது குழந்தையை கருவிற்குள் பத்திரமாக வைத்திருக்கும் அமினோ அமிலத்தின் வெளிப்பாடாக கூட இருக்கலாம். அந்த அமிலம் வெளியேறுவது கரு தன் வளர்ச்சியை நிறுத்திவிட்டது என்பதன் அறிகுறியாகும்.

தாங்கமுடியாத தசைப்பிடிப்பு

தாங்கமுடியாத தசைப்பிடிப்பு

கர்ப்பகாலத்தில் தாங்க முடியாத அளவிற்கு தசைப்பிடிப்பு ஏற்பட்டால் உங்கள் கருவிலுள்ள குழந்தை ஆபத்தில் உள்ளது என அர்த்தம். அது சாதாரணமான தசைப்பிடிப்பாக இருந்தால் பரவாயில்லை, ஆனால் தாங்க முடியாத அளவிற்கு வலி ஏற்பட்டால் கருச்சிதைவு ஏற்பட தொடங்கிவிட்டது, கருப்பையில் இருந்து கருவை வெளியே தள்ளு முயலுகிறது என்று உணருங்கள்.

அசாதாரண ஸ்கேன்

அசாதாரண ஸ்கேன்

கர்ப்பகாலத்தின் முதல் மூன்று மாதங்களில் முதன் அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் செய்யப்படும். இது குழந்தையின் நிலை, வளர்ச்சி மற்றும் அளவு ஆகியவற்றை மட்டும் சரிபார்க்காது, பிறப்பு குறைபாடுகளையும் அடையாளம் காட்டும். ஒருவேளை இந்த சோதனையில் உங்கள் குழந்தையின் அசைவுகள் எதுவும் தெரியவில்லை என்றால் உங்கள் மருத்துவர் உங்களிடம் ஒரு கெட்ட செய்தியை சொல்லப்போகிறார் என்று அர்த்தம்.

அதிக காய்ச்சல்

அதிக காய்ச்சல்

கற்பகாலத்தில் அம்மாவிற்கு அதிக காய்ச்சல் ஏற்பட்டால் அது கருவிலுள்ள குழந்தையின் மீது பாதிப்பை ஏற்படுத்தும். உண்மையில் குழந்தையின் வளர்ச்சி கருவில் நின்றுவிட்டதால்தான் அம்மாவிற்கு அதிக காய்ச்சல் ஏற்படுகிறது. இரண்டு நிகழ்ச்சிகளுமே அலட்சியமா விடக்கூடியது அல்ல. உடனடியாக மருத்துவரை தொடர்புகொள்ள வேண்டும்.

இறுதிக்கால கட்டத்தில் கருவின் வளர்ச்சி பாதிக்கப்படுதல்

இறுதிக்கால கட்டத்தில் கருவின் வளர்ச்சி பாதிக்கப்படுதல்

கருவிலுள்ள குழந்தையின் அசைவுகள் இரண்டாவது காலகட்டத்தில் உணரப்பட்டு பின் மூன்றாவது காலகட்டத்தில் உணரப்படாமல் இருந்தால் உடனடியாக மருத்துவரை தொடர்புகொள்ள வேண்டும். இது ஒருவேளை தாமதமான கருசிதைவாக இருக்கலாம். மற்றவர்களுக்கு முன் அம்மாதான் இதனை உணருவார். இந்த அறிகுறிகள் உங்களை பயமுறுத்த கூறப்படவில்லை, இந்த அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை தொடர்புகொள்ள வேண்டும் என்பதற்காக கூறப்படுவது. ஏனெனில் கர்ப்பகாலத்தில் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டியது அவசியம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Signs which show that baby stops growing in the mother's womb

Pregnancy is the time when women should be extra careful. Because even a small thing which mother do, also can lead to miscarriage. If you have low level HCG, Bleeding, High fever contact your doctor immediately.
Story first published: Friday, August 3, 2018, 18:09 [IST]
Desktop Bottom Promotion