Latest Updates
-
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா?
கர்ப்பிணிகள் குழந்தையை இடுப்பில் சுமந்தால் கருக்கலைப்பு ஏற்படுமா?
இந்த பதிப்பில் கர்ப்ப காலத்தில், கர்ப்பிணிகள் ஒரு குழந்தையை தூக்குவது, இடுப்பில் வைத்துக் கொள்வது போன்ற விஷயங்கள், கருவில் இருக்கும் இரண்டாம் குழந்தையை பாதிக்குமா? இல்லையா என்பதை படித்து அறியலாம்.
கர்ப்ப காலத்தில் பெண்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்; முதல் குழந்தையை பெற்று எடுத்து உடனேயே அலல்து ஓரிரு வருடங்களில் இரண்டாவது முறையாக கர்ப்பம் அடைந்தால், அது கொஞ்சம் சிரமத்தை பெண்களுக்கு கொடுக்கும். ஏனெனில் கையில் இருக்கும் முதல் குழந்தை மற்றும் வயிற்றில் இருக்கும் இரண்டாம் குழந்தை என இருவரையும் திறம்பட பார்த்துக் கவனித்துக் கொள்ள வேண்டும்.

இந்த பதிப்பில் கர்ப்ப காலத்தில், கர்ப்பிணிகள் ஒரு குழந்தையை தூக்குவது, இடுப்பில் வைத்துக் கொள்வது போன்ற விஷயங்கள், கருவில் இருக்கும் இரண்டாம் குழந்தையை பாதிக்குமா? இல்லையா என்பதை படித்து அறியலாம்.

தூக்கலாமா? கூடாதா?
கர்ப்ப காலத்தில் பெண்ணை அவ்வளவாக எந்த வேலையையும் செய்ய விடாமல் ஓய்வு எடுக்க வைப்பர்; சொல்வர். அதுவும் கர்ப்பத்தின் முதல் 3 மாத காலம் மற்றும் கடைசி 3 மாத காலம் மிக மிக முக்கியமானவை! ஏனெனில் முதல் 3 மாத காலகட்டத்தில் தான் பெண்ணின் கருவறையில் கரு வளரத் தொடங்குகிறது; அந்த சமயங்களில் மாடிப்படிகளில் ஏறுவதே கூடாது எனும் பொழுது குழந்தையை பொருளை தூக்குவதெல்லாம் கூடவே கூடாது.
மூன்றாம் 3 மாத காலகட்டத்தில் குழந்தை வெளிவரும் சமயம் என்பதால், அப்பொழுதும் வயிற்றின் மீது எந்தவொரு அழுத்தமும் கொடுக்கப்பட கூடாது. இடையில் இருக்கும் இரண்டாம் 3 மாத காலகட்டத்தில் பெண்கள் 13 கிலோவிற்கு குறைவான எடையை தூக்கலாம், முடிந்தவரை எதையும் தூக்காமல் இருப்பதே நல்லது என்று மருத்துவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

என்ன நடக்கும்?
தாயின் மனதிற்கு இரண்டு குழந்தைகளும் ஒன்று; எனவே இரண்டு குழந்தைகளையும் ஒரே மாதிரியாக கவனித்துக் கொள்ள வேண்டும் என்று ஆசை கொண்டு, கர்ப்பமாக இருக்கும் தருணத்தில் முதல் குழந்தையை தூக்கி தூக்கி வைத்துக் கொண்டால் பிறக்க இருக்கும் இரண்டாம் குழந்தைக்கு எந்த மாதிரியான பாதிப்புகள் நிகழலாம் என்று அடுத்தடுத்த பத்திகளில் படித்து அறியுங்கள்!

கருக்கலைப்பு
முன்பே கூறிய படி கருவில் வளரும் குழந்தை முழு வளர்ச்சியை அல்லது நிலைத் தன்மையை பெறும் முன், அதன் மீது அதிகப்படியான அழுத்தம் அல்லது கருவிற்கு அசௌகரியமான நிலை உருவானால், கருவானது கலைந்து விடும் வாய்ப்பு உண்டு. மேலும் குழந்தையை அதிக நேரம் தூக்கி வைத்திருப்பது, தூக்கிக்கொண்டு நடப்பது போன்றவை தீவிர பாதிப்புகளை ஏற்படுத்தலாம்.

கருவின் வளர்ச்சி!
குழந்தையை தூக்கிக் கொண்டு நடப்பதாலோ அல்லது வேலை பார்ப்பதாலோ ஏதேனும் ஒரு வகையில் எதேச்சையாக வயிற்றின் மீது அடியோ, அழுத்தமோ உண்டானால், கர்ப்பிணியின் வயிற்றில் வளரும் கரு குறைபாட்டுடன் அதாவது வளர்ச்சி குன்றி, உறுப்புகள் இல்லாமல் பிறக்க நேரிடலாம் என்று கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. மேலும் கருவின் வளர்ச்சி குன்றி குறைப்பிரசவம் நிகழக்கூட வாய்ப்பு உண்டு.

தாய்க்கும் பாதிப்பு!
குழந்தையை வயிற்றில் சுமக்கும் பொழுது, மற்றொரூ குழந்தையை கையில் ஏந்திக் கொண்டு சுற்றினால், அதன் பாதிப்பு வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு மட்டுமின்றி, இருவரையும் சுமக்கும் தாய்க்கும் ஏற்படும். ஏற்கனவே கர்ப்ப காலத்தால் பலவீனமாக தாயின் உடல், இந்த இரண்டு சுமைகளின் பாரத்தால் மேலும் பலவீனமாகும் வாய்ப்பு உண்டு. இந்த பாதிப்பால் மயக்கம், பலவீனம், உடல் வலி, அசதி போன்ற சிறிய பாதிப்புகள் முதல் சீரற்ற இரத்த அழுத்தம், இரத்த ஓட்டம் குறைதல் போன்ற பெரிய பாதிப்புகள் வரை எது வேண்டுமானாலும் நிகழலாம்.
எனவே மிகவும் கவனமாக இருங்கள்; சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும் என்பது போல, நீங்கள் நலமாக இருட்னஹல் தான் இரண்டு குழந்தைகளையும், குடும்பத்தையும் ஒழுங்காக பார்த்துக் கொள்ள முடியும் என்பதை நினைவில் வைத்து செயல்படுங்கள்!

தூக்கவே கூடாதா?
குழந்தையை பார்த்துக் கொள்ளலாம், மடியில் சிறிது நேரம் வைத்து விளையாடலாம்; ஆனால், இடுப்பிலோ வயிற்றை அழுத்தும் வகையிலோ தூக்குதல் மட்டும் வேண்டாம். நீங்கள் தூக்காமல் இருப்பது முதல் குழந்தையின் மனதில் மனஅழுத்தத்தை ஏற்படுத்தி விடக்கூடாது; எனவே, முதல் குழந்தையிடம் வயிற்றில் இருக்கும் குழந்தை பற்றியும், முதல் குழந்தையை நீங்கள் தூக்கினால் என்னவெல்லாம் நடக்கலாம் என்பது குறித்தும் குழந்தைக்கு புரியும் வகையில், கதை போல தெளிவாக எடுத்து கூறுங்கள்!
கண்டிப்பாக குழந்தைகள் புரிந்து கொள்வார்கள், தன்னுடைய தம்பி அல்லது பாப்பா நலமாக பிறந்து தன்னுடன் விளையாட வேண்டும் என்பது அவர்களின் ஆசையாக இருக்கும்; எனவே, குழந்தைக்கு புரியும் படி நல்ல விதமாக, நீங்கள் எடுத்துக் கூறினால், அவர்கள் அதை புரிந்து கொண்டு சமத்தாக நடந்து கொள்வார்கள்!



Click it and Unblock the Notifications