Latest Updates
-
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது -
May Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. மே மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
ஐயங்கார் ஸ்டைல் பருப்பு உருண்டை குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, செமையா இருக்கும் -
வெயிலால் கருமையாகியுள்ள சருமத்தை வெள்ளையாக்கணுமா? அப்ப இந்த முலாம் பழ ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
வெயிலின் தாக்கத்தை குறைக்க வாஸ்து செடிகளுக்கு மவுசு: மணி பிளாண்ட், அரேகா பாம் வாங்க மக்கள் ஆர்வம் -
செஃப் தாமு ஸ்டைல் பருப்பு ரசம் - 5 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க... -
May 2026 Monthly Horoscope: மே மாதம் ராஜவாழ்க்கை வாழப்போற 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வாஸ்து மாற்றங்கள்: ஏப்ரல் 24-ல் இந்த சின்ன மாற்றத்தை செஞ்சா பணமழை கொட்டுமா? -
ஆண்களே! உங்க விந்துவை கெட்டிபடுத்தணுமா? அப்ப இந்த டாக்டர் சொல்ற 5 உணவுகளை சாப்பிடுங்க..
கர்ப்ப காலத்தில் பெண்கள் இரத்த வாந்தி எடுத்தால் கருவிற்கு ஆபத்தா?
கர்ப்ப காலத்தில் பெண்களில் ஏற்படும் வாந்தி சாதாரணமாக இல்லாது, இரத்தம் கலந்த அலல்து இரத்தமே வாந்தியாக வெளியானால் அது இதைக் குறிக்கிறது, அது கருவை பாதிக்குமா, இரத்த வாந்திக்கு என்ன காரணம் போன்றவை குறித்
கர்ப்ப காலத்தில் பெண்கள் பலவித உடல் மாற்றங்களுக்கு உள்ளவர்கள்; இந்த மாற்றங்களை எல்லாம் ஏற்படுத்தும் சூத்திர தாரராக அவர்களின் உடலில் நிகழும் ஹார்மோன் மாற்றங்கள் இருக்கும். இந்த ஹார்மோன் மாற்றங்களால் பெண்களில் கர்ப்பகால தொடக்கத்தில் பலவித குறைபாடுகள் ஏற்படும்; அவையாவன: வாந்தி, மயக்கம், குமட்டல், சோர்வு, பலவீனம்.., இந்த குறைபாடுகளில் வாந்தி என்பது பெரும்பாலான பெண்களில் ஏற்படும் பிரச்சனையாக உள்ளது.

இவ்வாறு கர்ப்ப காலத்தில் பெண்களில் ஏற்படும் வாந்தி சாதாரணமாக இல்லாது, இரத்தம் கலந்த அலல்து இரத்தமே வாந்தியாக வெளியானால் அது இதைக் குறிக்கிறது, அது கருவை பாதிக்குமா, இரத்த வாந்திக்கு என்ன காரணம் போன்றவை குறித்து இந்த பதிப்பில் படித்து அறியலாம்.

இரத்த வாந்தி ஏன் ஏற்படுகிறது?
கர்ப்பிணி பெண்களில் இரத்த வாந்தி ஏற்படுவதற்கு பல காரணங்கள் உண்டு; அவற்றுள் முக்கியமான காரணங்கள் தொண்டையையும் வயிற்றையும் இணைக்கும் குழாயில் ஏற்பட்ட விரிசல் அல்லது பிரச்சனை மற்றும் மேற்குடல் பகுதிகளில் ஏற்பட்ட விரிசல் போன்றவை ஆகும். இந்த காரணங்களால் கர்ப்பிணி பெண்கள் இரத்த வாந்தி எடுக்க நேர்ந்தால், அப்பொழுது வெளிப்படும் இரத்தம் அடர்ந்த சிவப்பு அல்லது பிரௌன் நிறத்தில் இருக்கும் என்று கூறப்படுகிறது.
மேலும் இதை தவிர்த்து என்னென்ன காரணங்களால் கர்ப்பிணி பெண்களில் இரத்த வாந்தி ஏற்படலாம் என்று பார்க்கலாம்.

வயிறு கோளாறு
வயிறு மற்றும் அதில் அடங்கி இருக்கும் நுண்ணுறுப்புகளில் ஏதேனும் பாதிப்பு, எரிச்சல் போன்ற மாற்றங்கள் ஏற்பட்டால் அந்த சமயங்களில் கர்ப்பிணிகள் இரத்த வாந்தி எடுக்க நேரிடும். கர்ப்பிணிகள் இரத்த வாந்தி ஏற்பட்டால், தங்களுக்கு ஏதேனும் வயிறு தொடர்பான பிரச்சனைகள் உள்ளதா என்று சோதித்து அறிந்து அதற்கேற்ற சிகிச்சை மேற்கொள்ள முயல வேண்டும்.

நீர் மற்றும் பசி!
கர்ப்பிணி பெண்களின் உடலில் நீர்ச்சத்து மிகவும் குறைந்து விட்டாலோ அல்லது பசியின்மையால், போதிய அளவு உணவினை கர்ப்பிணி பெண்கள் உட்கொள்ளாமல் இருந்தாலோ அந்த சமயங்களில் கர்ப்பிணிகளுக்கு இரத்த வாந்தி வெளிப்படுவதற்கு வாய்ப்பு உண்டு. ஆகையால் சரியான அளவு நீர் மற்றும் உணவினை நேராநேரம் உண்டு மகிழ்ச்சியாக இருக்க முயலுங்கள்.

பதட்டம் மற்றும் கோபம்
கர்ப்ப காலத்தில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால் உங்கள் உணர்வுகள் மாறுபடும்; இருப்பினும் உங்கள் உடலில் அதிக கோபம், பதற்றம் மற்றும் வருத்தம் எதுவும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இந்த தேவையற்ற தொந்தரவுகள் அளவு உங்கள் உடலில் அதிகமானால் அது இரத்த வாந்தியாக வெளிப்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உண்டு; மனஅழுத்தத்தையும் தவிர்த்து விட முயல வேண்டும்.

உணவு விஷம் - புட் பாய்சன்
கர்ப்பிணி பெண்களின் உடலில் அவர்தம் உண்ட உணவுகளால் ஏதேனும் தொந்தரவு நேர்ந்து அது அவர்களின் உடலில் விஷமாக மாறி ஏதேனும் பாதிப்புகளை ஏற்படுத்த நேரலாம்; அந்நிலையை தான் புட் பாய்சன் என்று கூறுகிறோம். இம்மாதிரியான நேரங்களில் கர்ப்பிணி பெண்கள் இரத்த வாந்தி எடுப்பதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன.

மருந்து மற்றும் மாத்திரைகள்
கர்ப்பிணிகள் பல விஷயங்களுக்காக கர்ப்ப காலத்தில் பல மருந்து மற்றும் மாத்திரைகளை உட்கொண்டு வருவார்கள்; அவற்றால் ஏதேனும் பிரச்சனை அல்லது பக்க விளைவுகள் நேர்ந்தால் அதன் வெளிப்பாடு இரத்த வாந்தியாக இருக்கலாம்; ஆகையால் கர்ப்பிணிகளே! உட்கொள்ளும் மருந்து மாத்திரைகளில் கவனம் தேவை!

கருவை பாதிக்குமா?
இது போன்ற காரணங்களால் ஏற்படும் இரத்த வாந்தி கருவை பாதிக்குமா என்றால், இந்த கேள்விக்கு கருவை பாதிக்க அதிக வாய்ப்புகள் இருக்கிறது என்று தான் கூற வேண்டும். ஏனெனில் எதனால் இரத்த வாந்தி ஏற்படுகிறது என்பதை பொறுத்து தான் பாதிப்பின் தீவிரம் மாறுபடும். முன்பு கூறிய குடல் மற்றும் தொண்டை குழாயில் பாதிப்பு ஏற்பட்டதால், இரத்த வாந்தி வெளிப்பட்டால் அது அத்தகைய பாதிப்பை ஏற்படுத்தாது.

இரத்த வாந்தி எந்த வகை?
இதுவே பெண்ணின் இரத்தக் குழாய்களில் எங்கேனும் விரிசல் அல்லது உடைத்தல் ஏற்பட்டு அதன் வழியாக இரத்தம் வெளியேறி பாதிப்பு உருவாகி, அப்பாதிப்பு இரத்த வாந்தியை ஏற்படுத்தினால், கண்டிப்பாக அது கவலைப்பட வேண்டிய நேரத்தை குறிக்கிறது. ஆகையால், கர்ப்பிணி பெண்களே! வெளிப்படும் இரத்த வாந்தி எந்த வகையினது என்று அறிந்தால் தான், அதன் விளைவு எப்படி இருக்கும் என்று தெளிவாக கூற முடியும்.

மருத்துவர் சந்திப்பு!
கர்ப்பிணி பெண்களே! இரத்த வாந்தியால் உங்கள் உடலிலும் இரத்த சோகை மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைதல், பலமிலத்தல், இதய செயல்பாடு குறைதல் போன்ற பல பாதிப்புகள் ஏற்படலாம்; இந்த பாதிப்புகளோடு மிக முக்கிய பாதிப்பாக உங்களுள் வளர்ந்து வந்த குழந்தைக்கு ஏதேனும் குறைபாடு நேரிடலாம் அல்லது கருவே அழிந்து போகும் நிலை உண்டாகலாம்.
எனவே, முதல் முறையாக இரத்த வாந்தி வெளிப்பட்ட உடனேயே மருத்துவரை சந்திக்க விரைய வேண்டும்; மருத்துவரை சந்தித்து எதனால் இரத்த வாந்தி ஏற்பட்டது என்று சோதித்து அறிந்து, அதனை சரி செய்வதற்கான சிகிச்சையை மேற்கொண்டு உங்களின் ன் ஆழத்தையும், உங்களுள் வளரும் குழந்தையின் நலத்தையும் ஒருசேர காக்க முயல வேண்டும்.



Click it and Unblock the Notifications