For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பிரசவம் ஆவதற்கு முன் பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் என்ன?

By Lekhaka
|

எவ்வளவு தான் அவர்கள் கர்ப்ப காலத்தில் ஆயிரம் வலிகளை கடந்தாலும்...குழந்தையை தன் கைகளால் தாங்கும் ஒரு நிமிடம், அந்த வலிகள் அனைத்தும் விழிகளில் இருந்து மறைந்து குழந்தையை நன்றாக வளர்க்க வேண்டுமென்னும் ஆசையை மட்டுமே அடையும். இருப்பினும் கர்ப்ப காலத்தில், அவர்கள் படும் வேதனையையும் வலியையும் பற்றி கண்டிப்பாக சொல்லி தான் ஆக வேண்டும்.

இந்த ஆர்டிக்கலின் மூலமாக, புதிதாக குழந்தை பெற்றெடுக்கும் பெண்களின் மனதில் இருக்கும்... லேபர் பற்றின கேள்விகளுக்கான வினோதமான பதிலை தர நாங்கள் முன் வந்துள்ளோம்.

Questions About Going Into Labour

ஒரு புதிய தாயாக நீங்கள் பெறும் அனுபவங்களை கனிசமாக வேறுபடுத்தலாம் என்பதனை கவனத்தில் கொள்ளுங்கள். இந்த பதில்களும் பவளத்தினை போன்ற விலைமதிப்பற்றதாகவே படிப்பவர்களுக்கு இருக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் வேண்டாம். மேலும் சில தகவல்களை நாம் இப்பொழுது கீழே பார்க்கலாம்.

#1

புதிதாக கருவுற்றிருக்கும் பெண்ணுக்கு லேபர் ஆரம்பிப்பது எப்படி தெரியும்? இதற்கான பதில் மிக சுலபமான ஒன்றல்ல.

#2

லேபர், இரண்டு நிலைகளாக பிரிக்கப்படுகிறது என்பதனை நாம் முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். அவை ப்ரீ-லேபர் மற்றும் ஆக்டிவ் லேபர் எனப்படும். இந்த இரண்டு முறைகளும் எவ்வாறு தொடங்கும் என்பதனை விவரிப்பது கடினமாகும். மேலும், இந்த இரண்டு நிலைகளும் ஒவ்வொரு பெண்ணுக்கு மாறவும் செய்கிறது.

#3

சில பெண்களுக்கு இவை வேகமாக நடக்கும். சிலருக்கோ...இந்த லேபர் பருவம் என்பது நீண்டதோர் உணர்வினை தருகிறது. இந்த பிரசவிக்கும் காலத்தின் முதலில் ஒரு வாரத்திற்கு அதற்கான அறிகுறிகள் ஒரு பெண்ணுக்கு தோன்றுகிறது. அவ்வாறு முதல் முதலில் கர்ப்பமாக இருக்கும் பெண்ணிற்கு ஏற்படும் சில அறிகுறிகளை நாம் இப்பொழுது பார்க்கலாம்.

பின்முதுகின் கீழ்த்தண்டில் வலி ஏற்படுவதனை ஒரு பெண்ணால் உணர முடியும். ஆம், அந்த பெண்ணுக்கு ஏற்படும் வலி என்பது... மாதவிடாய் சுழற்சி காலத்தில் ஏற்படும் ஒரு வலியை போன்றதாகவே இருக்கிறது. வழக்கமான இடைவெளியில் சுருக்கங்கள் வருகிறது. மேலும் அது நீண்டதாகவும் வலிமையானதாகவும் இருக்கிறது.
நீங்கள் வலியை உணரும் முன்னே உங்கள் சவ்வுகளில் சிதைவுகள் ஏற்படலாம்.

எப்பொழுது நாம் டாக்டரை பார்க்க வேண்டும்?

உங்கள் உணர்ச்சிகளில் எதாவது சிரமம் தெரிந்தால், எந்த நேரத்திலும் நீங்கள் டாக்டரை அழைப்பது நன்றாகும். அத்துடன் மேலே குறிப்பிடப்பட்டுள்ள கருத்துகள் அனைத்தும், உங்கள் குழந்தைகளின் பிறப்பிற்கான சிறந்த அறிகுறியாகவும் அமைகிறது. மேலும், உங்கள் வயிற்றில் உள்ள குழந்தை, மெதுவாக நகர்ந்தாலோ..இல்லை என்றால், உங்களுக்கு கண் பிரச்சனை, காய்ச்சல், மற்றும் தலைவலி போன்ற பிரச்சனைகள் இருந்தாலோ, கண்டிப்பாக நீங்கள் டாக்டரை உடனடியாக பார்ப்பது நன்மை பயக்கும்.

எத்தகைய அறிகுறிகள் லேபர் தொடங்குவதற்கான ஒன்றாக விரைவில் ஏற்படும்?

லைட்டனிங்க் தான், லேபர் தொடங்குவதற்கான முதன்மை அறிகுறியாக இருக்கிறது. "லைட்டனிங்க்" என்பது கருவில் இருக்கும் குழந்தை, தன் நிலையை மாற்றிகொள்ளும் ஒன்றாகும். ஆம், குழந்தையின் தலை பெல்விஸ் பகுதியை நோக்கி திரும்புகிறது. அவ்வாறு குழந்தை திரும்பும்போது, உங்கள் அடிவயிற்றில் கனமானதோர் உணர்வினை திடீரென்று அது ஏற்படுத்தும்.

உங்களுக்கு சுவாசிப்பதற்கும், உண்ணுவதற்கும் மிக எளிதாக இருக்கும். ஆனால், சிறுநீர் கழிப்பதில் உங்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும். தவறான சுருக்கங்கள் உங்கள் உடம்பில் சரியான சுருக்கங்களாக மாறவும் வாய்ப்பிருக்கிறது.

நீங்கள் இந்த வஜினலை அதிகம் வெளியேற்ற வேண்டியது அவசியமாகிறது. அதனால் உங்கள் மன நிலையில் மாற்றம் ஏற்பட்டு... உங்கள் வீட்டினை சுத்தமாகவும் அழகுபடுத்தவும் மனம் ஆசைகொள்ளுமாம்.

லேபரின் ஆரம்ப நிலையில் நாம் என்ன செய்ய வேண்டும்?

முதலில் உங்களுக்கு தேவை ரிலாக்ஷ் மற்றும் அமைதியாகும். சில நடுத்தர மனைவிகள், முதலில் பிரசவிக்கும் பெண்களிடம் லேபர் நிலையில் ஏற்படும் வலியை தவிர்க்க பாராசிட்டமாலை பரிந்துரை செய்கின்றனர். நீங்கள் வார்ம் சவர் அல்லது வார்ம் பாத் எடுக்க வேண்டும். வாக்கிங்க் செல்வதும் உங்களுக்கு நல்லதாகும். மேலும் இது லேபர் முறையினை வேகமாக்கவும் உதவுகிறது.

நீங்கள் சோர்ந்து விட்டதாக நீங்களே நினைத்துகொள்ளாமல், போதிய ஓய்வினை இடையில் எடுத்துகொள்வது நல்லதாகும். ஹை கலோரி உணவுகளான...ட்ரை புரூட்டினை நீங்கள் மெல்ல வேண்டும். முடிந்த அளவு உங்கள் எனெர்ஜியை சேமித்து கொள்ளுங்கள். அது உங்களுக்கு தேவைப்படுவதுடன், அது உங்கள் ஆக்டிவ் லேபர் பேஸிற்கும் வழிவகை செய்கிறது.

ஆக்டிவ் லேபரை எப்படி உணர்வீர்கள்?

உங்கள் கருப்பையின் வாய் 4 லிருந்து 5 சென்டிமீட்டர் இருக்கும்போது..அதனை ஆக்டிவ் லேபர் என்கிறோம். உங்களுக்கு ஏற்படும் தினசரி வலி சுருக்கங்கள், 2 நிமிடங்களுக்கு மேலாக இருக்கிறது. உடம்பினை மிகவும் சூடாக நீங்கள் உணர்வதுடன், ஆர்வத்தையும் அது ஏற்படுத்துகிறது. உங்கள் சுற்றுபுறத்தில் என்ன நடக்கிறது? என்பதனையே மறந்து நீங்கள் செயல்படுவீர்கள்.

அதேபோல்..இந்த உணர்வு விரைவில் வந்து உங்களை கடந்துவிடும் என்பதனையும் நீங்கள் நினைவில் கொள்ளவேண்டும். உங்கள் குழந்தையை கரம் கொண்டு ஏந்தும் ஒரு நிமிடத்தினை எதிர்பார்த்து வலியை பொறுத்துகொள்ளுங்கள். உங்கள் உடம்பினை நீங்கள் கவனித்துகொள்ளுங்கள். ஒருபோதும் வேகமாக கத்தி உங்கள் எனெர்ஜியை நீங்களே வீணாக்கி விடாதிர்கள். உங்கள் வயிற்றினை அமுக்க டாக்டர் பரிந்துரை செய்ய, அதனில் மட்டுமே உங்கள் கவனத்தை செலுத்த வேண்டியது அவசியமாகும். உங்களுக்கு ஏற்படும் வலியை தாங்கிகொண்டு மூச்சு விடுவது மிகவும் நல்லதாகும்.

Read more about: pregnancy prenatal labour
English summary

Questions About Going Into Labour

Questions About Going Into Labour
Story first published: Friday, June 2, 2017, 15:53 [IST]
Desktop Bottom Promotion