கர்ப்பமாக இருக்கும் போது இந்த 7 விஷயங்கள் வேண்டாமே!

By Ashok CR

பெண்கள் கர்ப்பமாக இருக்கும் காலத்தில் பாதுகாப்பாக இருக்க வேண்டியது மிகவும் அவசியம். தாய் பாதுகாப்பாக இருந்தால் தானே வயிற்றில் உள்ள சிசுவும் பாதுகாப்பாக இருக்கும். அப்படி பாதுகாப்பாக இருக்க வேண்டுமானால் ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ள வேண்டியது அவசியமாகும். ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ளும் போது தான் குழந்தைக்கும் போதிய உடல் மற்றும் மன ரீதியான வளர்ச்சி இருக்கும். ஆனால் அதற்காக எதை வேண்டுமானாலும் உண்ணலாம் என்றில்லை.

ஏற்கனவே சொன்னதை போல, ஆரோக்கியமான உணவுகளை மட்டுமே கர்ப்ப காலத்தில் உண்ண வேண்டும். ஆரோக்கியமற்ற உணவுகள் தாய் மற்றும் கருவில் இருக்கு சிசு என இருவருக்குமே நல்லதல்ல. அதனால் நீங்கள் உண்ணும் உணவில் மிகுந்த கவனம் தேவை. மேலும் உங்களுக்கு புகை பிடித்தல், மதுபானம் குடித்தல் போன்ற பழக்கங்கள் இருந்தால் அவைகளை கண்டிப்பாக நிறுத்த வேண்டும். அப்போது தான் அதன் தீமையான தாக்கங்களில் இருந்து குழந்தை பாதுகாப்பாக இருக்கும்.

அப்படி நீங்களும் உங்கள் வயிற்றில் உள்ள குழந்தையும் பாதுகாப்பாக இருக்க வேண்டுமானால், கீழ்கூறிய 7 விஷயங்களை தவிர்க்கவும்:

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
காப்ஃபைன்

காப்ஃபைன்

காப்ஃபைன் இல்லாமல் உங்களால் இருக்க முடியவில்லை என்றால், தினமும் 2 கப் மட்டுமே எடுத்துக் கொள்ளவும். காப்ஃபைன் அளவு அதிகமாக உள்ள பானங்களான சோடா, கோலா, ஸ்போர்ட்ஸ் பானம் போன்றவைகளை தவிர்க்கவும். கர்ப்ப காலத்தின் போது அளவுக்கு அதிகமாக காப்ஃபைனை உட்கொள்வது, குறிப்பாக முதல் மூன்று மாதங்களில், கருச்சிதைவுகள் ஏற்படுத்தும். அல்லது பிற உடல் ரீதியான பிரச்சனைகளை ஏற்படுத்தும். தொடர்ச்சியாக காப்ஃபைனை உட்கொள்ளும் போது, குறைவான அளவு மற்றும் எடையுடன் பிறத்தல், குறைப்பிரசவம் போன்ற பல பிரச்சனைகள் ஏற்படும் என ஆய்வுகள் கூறுகிறது. இதனால் பல வித சிக்கல்கள் உண்டாகும். WHO பரிந்துரைத்தபடி ஒரு நாளைக்கு 300 மி.கி. (தோராயமாக 2 கப்) அளவுக்கு குறையாக எடுத்துக் கொண்டாலும் கூட மேற்கூறிய பிரச்சனைகள் உண்டாகலாம்.

பச்சை இறைச்சி மற்றும் மீன்

பச்சை இறைச்சி மற்றும் மீன்

பச்சையான, சமைக்கப்படாத உணவுகளை விட்டு தள்ளியே இருங்கள்; குறிப்பாக பச்சை முட்டைகள், இறைச்சிகள் மற்றும் மீன். பச்சையான, சமைக்கப்படாத கடல் உணவுகள் தாய்க்கு சில தொற்றுக்களை ஏற்படுத்தும். பச்சை முட்டைகள் அல்லது இறைச்சிகளை உட்கொண்டாலும் கூட கர்ப்பிணி பெண்ணுக்கு குறிப்பிட்ட சில ஒட்டுண்ணி நோய்கள் உண்டாகலாம். ஒரு வேளை, கர்ப்பிணி பெண்ணுக்கு இவ்வகையான உணவுகளினால் தொற்று அல்லது நோய் ஏற்பட்டால், அது தொப்புள் கொடி வழியாக குழந்தையையும் அடையலாம். இதனால் குறைப்பிரசவம் ஏற்படக் கூடும் அல்லது மனநிலை பாதிக்கப்பட்ட குழந்தையாக பிறக்க கூடும்.

பதப்படுத்தப்படாத சீஸ் அல்லது பால்

பதப்படுத்தப்படாத சீஸ் அல்லது பால்

கர்ப்ப காலத்தின் போது, நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் போது, கர்ப்பிணி பெண்களுக்கு லிஸ்டீரியோசிஸ் போன்ற உணவினால் ஏற்படும் வியாதிகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இனப்பெருக்க வயதை அடைந்த கர்ப்பமில்லாத பெண்களுக்கு ஏற்படுவதை விட 20 மடங்கு அதிகமாகும். பச்சை உணவுகள், பதப்படுத்தப்படாத பால் மற்றும் சீஸ் போன்றவற்றால் இந்த பிரச்சனை ஏற்படும்.

பதப்படுத்தப்படாத சீஸ் அல்லது பாலில் பாக்டீரியாக்கள் இருக்கலாம். இது தொப்புள் கொடி வழியாக சிசுவை அடைந்து, கருச்சிதைவை தூண்டலாம். பாதுகாப்பாக இருக்க வேண்டுமானால், நீங்கள் வாங்கும் பால் மற்றும் சீஸின் லேபிளை நன்றாக படிக்கவும். பால் மற்றும் சீஸ் பதப்படுத்தப்பட்டு கர்ப்பிணி பெண்கள் உண்ணும் நிலையில் உள்ளது என்பதை கண்டிப்பாக குறிப்பிட வேண்டும் என FDA கட்டாயப்படுத்தியுள்ளது. பதப்படுத்தப்பட்ட விவரம் இல்லை என்றால் அதனை உடனே தவிர்த்து விடவும்.

தெருவோர உணவுகள்

தெருவோர உணவுகள்

தெருவோரம் கிடைக்கும் அனைத்து உணவுகளும் கெட்டது இல்லை தான். ஆனாலும் கூட கர்ப்பிணி பெண்கள் தாங்கள் குடிக்கும் தண்ணீர் மற்றும் உணவின் மீது பாதுகாப்பாக இருக்க வேண்டும். தெருவோரம் கிடைக்கும் உணவுகளை உண்ணுவதால் தொற்றுக்கள் ஏற்படலாம். அளவுக்கு அதிகமாக தெருவோர உணவுகளை உட்கொண்டால் சுகவீனங்கள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். இதனால் பல மருந்துகளை உண்ண வேண்டியிருக்கும். இத்தனை மாத்திரைகள் உட்கொள்வது வயிற்றில் உள்ள குழந்தைக்கு நல்லதல்ல. மேலும் கர்ப்ப காலத்தில், பெண்ணின் நோய் எதிர்ப்பு சக்தி மிக குறைவாக இருக்கும். இதனால் மற்ற நேரங்களை காட்டிலும் இந்நேரத்தில் எளிதில் தொற்றுக்களுக்கு ஆளாகலாம்.

மதுபானம்

மதுபானம்

எப்போதாவது குடிப்பதால் ஒன்றுமில்லை. ஆனால் அளவை கடக்கையில் தான் பேராபத்து காத்திருக்கிறது. கர்ப்பமாக இருக்கும் போது அதிகமாக மதுபானத்தை பருகினால், குழந்தை மோசமான மற்றும் முறையற்ற மூளை வளர்ச்சிக்கு உள்ளாகும். இதுப்போக குழந்தையின் முக வடிவமும் முறையில்லாமல் மாறலாம். மனநிலை பாதிக்கப்பட்டும் கூட குழந்தை பிறக்கலாம்.

இது உங்களுக்கு போதிய பயத்தை ஏற்படுத்தவில்லை என்றால், இது பற்றி நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றினை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். கர்ப்பிணி பெண் மதுபானம் பருகும் போது, குழந்தைக்கு கடுமையான மைலாய்டு லுகேமியா ஏற்படும் இடர்பாடுகள் அதிகமாக உள்ளது. தகர்வு அல்லது கர்ப்பவாயை அடைக்கும் நஞ்சுக்கொடி போன்ற தொப்புள்கொடி சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும் என மற்றொரு ஆய்வு கூறுகிறது. கர்ப்பமாக இருக்கும் போது மதுபானம் பருகும் போது கரு ஆல்கஹால் சிண்ட்ரோம் என்ற நிலைக்கு குழந்தைகள் ஆளாகி விடும்.

சிகரெட்

சிகரெட்

புகைப்பிடிப்பது கர்ப்பிணி பெண்களுக்கு ஆபத்தானது என சொல்ல வேண்டியதில்லை. அதிலுள்ள நிகோட்டின் என்ற பொருள் தாயை பாதிப்பதோடு குழந்தையையும் அந்த நிகோட்டின், கார்பன் மோனாக்சைட் பாதிக்கும். இதனால் குழந்தைக்கு செல்ல வேண்டிய ஆக்சிஜன் அளவு குறையும். இதனால் பிறப்பு குறைபாடுகளும், குறைந்த உடல் எடையுடன், பிளவுபட்ட மேல்வாயுடன் குழந்தை பிறக்கக்கூடும். ஒரு நாளைக்கு 10 சிகரெட்கள் வரை குடித்தால், ஆண் குழந்தை என்றால் சீக்கிரத்திலேயே வயதுக்கு வந்து விடுவார்கள்; பெண் குழந்தை என்றால் அளவுக்கு அதிகமான மருந்துகளை உண்ண வேண்டியிருக்கும்.

கிரீன் டீ

கிரீன் டீ

கிரீன் டீ கர்ப்பிணி பெண்களுக்கு நல்லது என கூறும் எந்த ஒரு ஆவணமும் இல்லை. கர்ப்ப காலத்தில் டீ குடிக்க கூடாது என்பதற்கு ஒரு காரணம் உள்ளது - அது உங்கள் மெட்டபாலிக் அளவை அதிகரிக்கும். ஏற்கனவே கர்ப்ப காலத்தில் மெட்டபாலிச அளவு ஏற்கனவே அதிகமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நேரத்தில் அதனை அதிகப்படுத்துவது நல்லதல்ல. கிரீன் டீயில் கொஞ்சம் காப்ஃபைனும் உள்ளது. அதனால் கணக்கில்லாத அளவில் கிரீன் டீ குடிப்பது நல்லதல்ல. அளவுக்கு அதிகமாக கிரீன் டீ குடிக்கும் போது கர்ப்ப காலத்தில் ஃபோலிக் அமில உறிஞ்சுதல் குறையும். இதனால் தாய் மற்றும் குழந்தைக்கு ஃபோலிக் அமில குறைபாடு நோய்கள் ஏற்படும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Desktop Bottom Promotion