Latest Updates
-
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
கர்ப்பிணி பெண்களே! இந்த தீபாவளி பாதுகாப்பான தீபாவளியாக இருக்க இதோ சில டிப்ஸ்...
தீபாவளி என்றதும் அனைவரின் வாயும் பல்லாக காட்சி அளிக்கும். குழந்தைகளுக்கு புத்தாடை, பட்டாசு மற்றும் பலகாரம்; பெரியவர்களுக்கோ குடும்ப சமயதமாக கொண்டாட்டம். சொல்லப்போனால் நாம் கொண்டாடும் பண்டிகையிலேயே தீபாவளி தான் பெரும்பாலான பேருக்கு பிடித்த பண்டிகையாக இருக்கும். தீபாவளி என்பது மிக முக்கியமானது மட்டுமல்லாது மிகப்பெரிய இந்து பண்டிகையாகும். அதனை ஒவ்வொரு வருடமும் நாட்டிலுள்ள அனைத்து பகுதிகளில் இருந்தும் மக்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். லக்ஷ்மி தேவி மற்றும் விநாயகர் பெருமானை அவரவர் வீட்டிற்கு வரவேற்பதற்காக அனைவருமே தயாராகி கொண்டிருப்பார்கள். குடும்பத்துடன் ஒன்று சேர்ந்து மகிழ்ந்து கொண்டாடும் பண்டிகையாக விளங்குகிறது தீபாவளி. இருப்பினும் கர்ப்பிணி பெண்கள் இந்த திருவிழாவின் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அதற்கு காரணம் இது மிகவும் சத்தத்துடன் கூடிய பண்டிகை மட்டுமல்லாமல், ஆபத்தானதும் கூட.
ஆகவே, இந்த பண்டிகையின் போது கர்ப்பிணி பெண்கள் வீட்டிற்குள்ளேயே இருப்பது தான் நல்லது. தீபாவளி நெருங்கி கொண்டிருப்பதால், கர்ப்பிணி பெண்களுக்காக நாங்கள் சில உபயோகமான டிப்ஸ்களை வழங்க உள்ளோம். அதனை படித்து விட்டு, பாதுகாப்பான தீபாவளியை உங்கள் குடும்பத்துடன் சேர்ந்து கொண்டாடி மகிழ்ந்திடுங்கள்.
இப்போது கர்ப்பிணி பெண்களுக்கு இந்த தீபாவளி பாதுகாப்பான தீபாவளியாக இருக்க சில டிப்ஸ்களைப் பார்ப்போம்.

1. வசதியாக இருங்கள்:
பட்டு அல்லது சிந்தெடிக் பேப்ரிக் வகை துணிகளை அணிவதற்கு பதிலாக, வசதியாக உள்ள லேசான காட்டன் ஆடைகளையே அணியுங்கள். அது பாதுகாப்பாக இருப்பதோடு, எளிதில் நெருப்பு பற்றிக் கொள்ளாமலும் இருக்கும். மேலும் அதிக எடையுள்ள ஆடைகளை அணியும் போது கசகசவென இருக்கும். மேலும் அது ஆபத்தை கூட விளைவிக்கலாம்.

2. பட்டாசுகளை தவிர்க்கவும்:
ஒவ்வொரு வருடமும் பட்டாசு வெடிப்பது என்றால் கொள்ளை பிரியமாக இருக்கலாம். ஆனால் கர்ப்பமாக இருக்கும் போது, அவைகளின் ஆபத்தை மனதில் வைத்துக் கொண்டு, அதனை விட்டு விலகி இருப்பதே நல்லது. மேலும் பட்டாசுகளில் இருந்து வெளியேறும் புகை மற்றும் மாசுக்களில் அளவுக்கு அதிகமான கார்பன்-டை-ஆக்ஸைடு மற்றும் நைட்ரஸ் ஆக்ஸைடு அடங்கியுள்ளது. இது தாய்க்கும், கருவில் இருக்கும் சிசுவுக்கும் தீமையை விளைவிக்கலாம். அதிலும் இந்த புகை தாய்க்கும், கருவில் உள்ள சிசுவுக்கும் சுவாச கோளாறுகளை கூட ஏற்படுத்தலாம். அதுமட்டுமின்றி கர்ப்ப காலத்தில் செவிச்சவ்வு சென்சிடிவ்வாக இருப்பதால், இரைச்சல் மாசு ஏற்படுவதும் கூட உங்களுக்கு நல்லதல்ல.

3. உணவு:
இந்த நேரத்தில் பொதுவாக பெண்களுக்கு வேலைப்பளு அதிகமாக இருக்கும். அதனால் கர்ப்ப காலத்தில் அவர்கள் கடைப்பிடிக்கும் உணவு பழக்கத்தை அவர்களால் சரிவர பின்பற்ற முடியாது. வீட்டு வேலைகள் பார்க்கும் போது, கிடைக்கின்ற இடைவேளைகளில் சத்தான உணவுகளை கொஞ்சம் கொஞ்சமாக உண்ணுங்கள். இந்த நேரத்தில் உடல் ஆரோக்கியத்தை லேசான விஷயமாக எடுத்துக் கொள்ள கூடாது. ஆரோக்கியமான உணவுகளை சரியான அளவில் உண்ணுங்கள். முடிந்த வரை காரசாரமான உணவுகளையும், எண்ணெய் பலகாரங்களையும் தவிர்க்கவும். தீபாவளி என்றாலே இனிப்பு தான். ஆனால் கர்ப்பிணி பெண்களோ குறைந்த அளவிலேயே இனிப்புகளை உட்கொள்ள வேண்டும். இது தான் தீபாவளியின் போது கர்ப்பிணி பெண்கள் கடைப்பிடிக்க வேண்டிய முக்கியமான டிப்ஸ். ஏனெனில் கர்ப்ப காலத்தில் அளவுக்கு அதிகமாக இனிப்புகளை சாப்பிட்டால், பிரசவ நேரத்தில் சர்க்கரை நோய் வந்துவிடும்.

4. கவனம் தேவை:
வீட்டு வேலை செய்யும் போது, கர்ப்பிணி பெண்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். நாற்காலி மீது ஏறி நிர்ப்பது அல்லது சோப்பு நீரை கொண்டு எதையாவது துடைப்பது போன்றவற்றை தவிர்க்க வேண்டும். வீட்டு வேலையில் ஈடுபட்டிருக்கும் போது தான் பல விபத்துக்கள் நேரிடும். முக்கியமாக குனிந்து வேலை செய்வது மற்றும் விளக்குகள் ஏற்றுவது போன்றவற்றை தவிர்க்க வேண்டும். வயிறு பெரிதாக இருப்பதால், குனிந்து விளக்கு மற்றும் மெழுகுவர்த்தி ஏற்றுவது வலியை ஏற்படுத்தலாம். அதே போல் தீக்காயம் ஏற்பட்டால், அந்த காயங்களை தாங்கும் சக்தியும் அவர்களுக்கு இருப்பதில்லை.
மேற்கூறிய சில டிப்ஸ்களை கர்ப்பிணி பெண்கள் தீபாவளியின் போது பின்பற்றி, பாதுகாப்பான தீபாவளியை இந்த வருடம் கொண்டாடுங்கள்.

குறிப்பு
மேற்கூறிய சில டிப்ஸ்களை கர்ப்பிணி பெண்கள் தீபாவளியின் போது பின்பற்றி, பாதுகாப்பான தீபாவளியை இந்த வருடம் கொண்டாடுங்கள்.



Click it and Unblock the Notifications