Latest Updates
-
இந்தியாவின் முதல் IAS அதிகாரி யார்? அவருடைய பெயர் என்ன தெரியுமா? அவரு யாருனு தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
2 முருங்கைக்காயை இருந்தா.. இப்படி ஒருவாட்டி பிரியாணி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
4-ல் 3 இந்திய பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு: உடலில் இரும்புச்சத்தை அதிகரிக்க சிம்பிளான 6 டிப்ஸ் இதோ! -
ஐயங்கார் ஸ்டைல் பொரிச்ச ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
வாடகைக்கு மனைவி கொடுக்கும் வினோத நாடு? இதற்கு எவ்வளவு கட்டணம் வாங்குறாங்க தெரியுமா? -
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க..
மனைவி கர்ப்பமாக இருக்கும் போது கணவன்மார்கள் தவறாமல் செய்ய வேண்டியவைகள்!!!
மனைவி கருத்தரித்தால், கணவனாக இருப்பவர் சந்தோஷப்பட்டால் மட்டும் போதாது, அவர்களின் கர்ப்ப காலத்தில் அவர்களுக்கு உறுதுணையாகவும், அளவுக்கு அதிகமான சந்தோஷத்தை கொடுப்பவராகவும் இருக்க வேண்டும். ஏனெனில் பெண்கள் கர்ப்பமாக இருக்கும் போது, தன் கணவனின் அன்பை, அரவணைப்பைத் தான் அதிகம் எதிர்பார்ப்பார்கள். பத்து மாதங்கள் குழந்தையை சுமப்பது என்பது ஈஸியான விஷயம் அல்ல. கர்ப்பத்தால் பெண்கள் சந்தோஷமாக இருந்தாலும், அந்த காலத்தில் அவர்கள் அனுபவிக்கும் வலி மற்றும் வேதனைக்கு அளவே இருக்காது.
அதுமட்டுமின்றி, கர்ப்பிணிகள் கர்ப்ப காலத்தில் பல்வேறு மனநிலை மாறுதல்களுக்கு ஆளாவார்கள். எனவே கணவன்மார்கள், கர்ப்பமாக இருக்கும் தன் மனைவியை சந்தோஷமாக இக்காலத்தில் வைத்துக் கொள்வது என்பது மிகவும் இன்றியமையாதது. இதனால் மனைவி சந்தோஷமாக இருப்பதோடு, வயிற்றில் வளரும் குழந்தையும் நன்கு ஆரோக்கியமாக வளரும்.
ஆகவே தமிழ் போல்ட் ஸ்கை, மனைவி கர்ப்பமாக இருக்கும் போது கணவன்மார்கள் செய்ய வேண்டிய சில விஷயங்களைப் பட்டியலிட்டுள்ளது. அவற்றை தவறாமல் பின்பற்றி, உங்கள் மனைவியை கர்ப்ப காலத்தில் சந்தோஷமாக வைத்துக் கொள்ளுங்கள்.

மசாஜ் செய்துவிடுங்கள்
கர்ப்பிணிகளுக்கு கர்ப்ப காலத்தில் முதுகு மற்றும் கால்களில் கடுமையான வலியை உணர்வார்கள். எனவே நேரம் கிடைக்கும் போது, அவர்களுக்கு முதுகு மற்றும் கால்களுக்கு மசாஜ் செய்துவிடுங்கள். அதுவும் அவர்கள் கேட்காமலேயே செய்யுங்கள். இதனால் அவர்கள் மிகுந்த சந்தோஷத்திற்கு ஆளாவார்கள்.

விருப்பத்தை நிறைவேற்றுங்கள்
கர்ப்ப காலத்தில் பெண்களின் விருப்பதை நிறைவேற்றினால், அவர்கள் சந்தோஷமாக இருப்பார்கள். ஆகவே அவர்கள் விருப்பதை நிறைவேற்றுவதோடு, அவ்வப்போது அவர்களுக்கு எதிர்பாராத விதமாக பரிசுகளைக் கொடுத்து அசத்துங்கள்.

மனநிலை மாற்றத்தை புரிந்துகொள்ளுங்கள்
கர்ப்பிணிகள் ஒரு நாளைக்கு 6 விதமான மனநிலை மாற்றங்களுக்கு உள்ளாவார்கள். ஆகவே அவர்களின் மனநிலை மாற்றங்களை புரிந்து கொண்டு நடந்து கொள்ளுங்கள். குறிப்பாக அவர்கள் மன அழுத்தத்தில் இருப்பது போல் தெரிந்தால், அவர்களது மனம் சந்தோஷம் அடையும் செயல்களில் ஈடுபடுங்கள்.

அவர்களது போக்கிலேயே செல்லுங்கள்
சில நேரங்களில் கர்ப்பிணிகள் கோபத்தினால் கத்தலாம். அப்போது அவர்களை விட்டு வெளியே செல்ல நினைக்கலாம். ஆனால் அப்படி தான் செய்யக்கூடாது. கர்ப்பிணிகளுக்கு மனநிலை மாற்றத்தினாலும், வயிற்றில் வளர்வது உங்கள் குழந்தை என்பதாலும், அவர்களின் மனநிலையை புரிந்து, அவர்களது போக்கிலேயே செய்ய வேண்டும்.

உதவுங்கள்
கர்ப்பமாக இருக்கும் போது சில நேரங்களில் வேலை செய்ய முடியாத அளவில் உடல் சோர்வடைந்து விடும். ஆனால் வீட்டில் அதிகப்படியான வேலை இருக்கும். அப்போது அவர்களை ஓய்வு எடுக்க சொல்லி, வீட்டு வேலைகளை நீங்கள் செய்தால், அவர்கள் மனம் சந்தோஷமாக இருக்கும்.

உடற்பயிற்சி செய்யுங்கள்
கர்ப்பிணிகள் உடற்பயிற்சி செய்வது முக்கியது. எனவே அவர்கள் உடற்பயிற்சி செய்யும் போது, அவர்களுடன் நீங்களும் துணைக்கு உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

வெளியே அழைத்து செல்லவும்
கர்ப்பமாக இருக்கும் மனைவியை எப்போதும் வீட்டிலேயே அடைத்து வைக்காமல், அவர்களை அவ்வப்போது வெளியே வாக்கிங் போன்றோ அல்லது ஹோட்டல்களுக்கோ அழைத்துச் செல்ல வேண்டும்.

மருத்துவரிடம் அழைத்து செல்லவும்
தவறாமல் மருத்துவரிடம் அழைத்துச் சென்று, தாய் மற்றும் குழந்தையின் ஆரோக்கியத்தை பரிசோதிக்க வேண்டும். இது ஒவ்வொரு கணவனின் தலையாய கடமை.

குழந்தையுடன் பேச வேண்டும்
தாய் மட்டும் தான் குழந்தையுடன் பேச வேண்டும் என்பதில்லை, தந்தையும் வயிற்றில் வளரும் குழந்தையுடன் தவறாமல் பேச வேண்டும். எனவே மனைவியுடன் பேசும் போது, சற்று மனைவியின் வயிற்றில் கை வைத்து, குழந்தையுடனும் பேசுங்கள்.

எதிர்காலத்தைப் பற்றி பேசவும்
எதிர்காலத்தைப் பற்றி மனைவியுடன் கலந்தாலோசிக்க வேண்டும். அதுவும் குழந்தை பிறந்த பின், என்னவெல்லாம் செய்ய வேண்டும், என்ன பெயர் வைப்பது போன்றவற்றை கலந்தாலோசிக்க வேண்டும்.

மனைவிக்கு பிடிக்காததை செய்யாதீர்கள்
கர்ப்பமாக இருக்கும் மனைவிக்கு நீங்கள் செய்யும் ஒரு செயல் பிடிக்காவிட்டால், அதனை செய்யாதீர்கள். அப்படி அவர்களை மீறி செய்தால், அவர்கள் மன அளவில் பாதிக்கப்படுவார்கள். இதனால் வயிற்றில் வளரும் குழந்தையும் பாதிக்கப்படும். ஆகவே கர்ப்ப காலத்தில் அவர்களுக்கு பிடித்தவாறு நடக்க முயற்சி செய்யுங்கள்.

பழங்கள் மற்றும் காய்கறிகளை வாங்கி கொடுங்கள்
கர்ப்பமாக இருக்கும் போது பெண்களுக்கு நிறைய ஊட்டச்சத்துக் குறைபாடுகள் ஏற்படும். ஏனெனில் அவர்கள் சாப்பிடும் உணவு அனைத்தும் வளரும் குழந்தைக்கு செல்வதால், அவர்கள் நல்ல ஊட்டச்சத்துமிக்க உணவுகளை அடிக்கடி உட்கொள்ள வேண்டியிருக்கும். எனவே அவர்களுக்கு பழங்கள் மற்றும் காய்கறிகளை வாங்கி கொடுத்து சாப்பிட சொல்லுங்கள். அதுமட்டுமின்றி, நேரம் இருந்தால், அவர்களுக்கு நீங்களே ஜூஸ் போட்டு அடிக்கடி கொடுங்கள்.



Click it and Unblock the Notifications
