Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
கர்ப்பமாக இருக்கும் போது சந்திக்கக்கூடிய வித்தியாசமான வலிகள்!!!
ஒரு பெண்ணுக்கு வாழ்க்கையில் மிக முக்கியமான நிகழ்வு என்பது கருவுறும் தருணம் தான். இந்நிலையில் ஒரு புதிய உயிர் கருவாகி, உருவாகி ஒன்பது மாதங்களில் குழந்தையாக மடியில் தவழப்போகிறது. ஆனால், சில சமயங்களில் கருவை சுமப்பதனால் ஏற்படும் வலிகளால் அவள் மிகவும் அவதியுற்று, நம்பிக்கை இழக்கும் சூழல் ஏற்படும். எனவே, ஒவ்வொரு பெண்ணும் கருவுற்றிருக்கும் போது எதிர்கொள்ளும், வெவ்வேறு வகையான வலிகளைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும்.
தாய்மையடையும் போது சில வகையான வலிகள் ஏற்படுவது சகஜம் தான். ஆனால் இவ்வலிகள் கட்டாயம் ஏற்படும் என்பது இல்லை. ஆனால் இவ்வலிகளைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம் ஆகும் . ஏனென்றால், இவ்வலிகள் ஏற்படும் போது அடையாளம் காண வேண்டும் அல்லவா? அப்போது தான் வலிகளின் தீவிரத்தைப் பொறுத்து, மகப்பேறு மருத்துவரை உடனே கண்டு ஆலோசிக்க முடியும். ஒரு பெண் முதல் முறையாகக் கருவுற்றாலும், மூன்றாம் முறையாகக் கருவுற்றாலும் அனைத்தும் ஒன்றை போலவே இருப்பது இல்லை. இப்போது கர்ப்பமாக இருக்கும் போது சந்திக்கக்கூடிய வலிகளைப் பார்ப்போம்.

கருவுற்றிருக்கும் போது ஏற்படும் வலிகள்:
வலியுடன் கூடிய இரத்தக்கசிவு:
கருவுற்றிருக்கும் போது மாதவிலக்குச்சுழற்சி நின்றுவிடுகிறது. ஆனால் சில நேரங்களில் இரத்தக்கசிவு தென்படும். இது சகஜம் தான். ஆனால் இரத்தக்கசிவு வலியுடன் ஏற்படும். இத்தகைய தருணங்களில், உடனே மருத்துவரை சென்று பார்க்க வேண்டும்.
வயிற்று வலி:
கருப்பைக்குள் ஒரு புதிய உயிர் வளர, இடம் தேவைப்படுவதால், சிசுவானது தனக்குத் தேவையான இடத்தை உருவாக்கிக் கொள்கிறது. இம்மாதிரியான நேரங்களில், கருவுற்ற பெண்ணுக்கு வயிற்று வலி ஏற்படும். எனவே பெண்கள் தேவையான அளவு ஓய்வு எடுக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. இத்தகைய வலிகள் வந்தால், உடனே மறைந்துவிடும். ஆனால் அதே வலி நீண்ட நேரம் நீடித்தால், மருத்துவரை அணுகுவது நல்லது.
பெருமளவு சுகவீனமும் களைப்பும்:
சில நேரங்களில் கருவுற்றிருக்கும் பெண்கள் மிகுந்த களைப்பாக உணர்வார்கள். இத்தகைய தருணங்களில் பெண்களுக்கு எந்த வேலையையும் செய்யப் பிடிக்காது. நன்றாக ஓய்வெடுக்க தோன்றும். இதுபோன்ற நேரங்களில் தேவையான அளவு ஓய்வு எடுக்க வேண்டும். இல்லையென்றால் இக்களைப்பு நீங்காது.
காரணமின்றி மார்பக வலி:
கருவுற்றிருக்கும் போது சில நேரங்களில் மார்பகங்களில் வலி உண்டாகலாம். கருவுற்றிருப்பதால், மார்பகம் தேவையான அளவு பெரிதாக வளர வேண்டியிருக்கும். இதன் காரணமாக வலியும் உண்டாகலாம். மார்பகங்களின் கனம் சில நேரங்களில் தாங்கிக் கொள்ள முடியாத அளவுக்கு அதிகமாக இருந்தால், அதன் காரணமாகவும் வலி உண்டாகலாம்.
வீக்கமும் வலியும்:
கருவுற்ற சில வாரங்களுக்குப் பிறகு, உடலுறுப்புக்களில் குறிப்பாக, பாதங்களும், கால்களும் காரணமின்றி வீங்கத் தொடங்கும். அதன் காரணமாக வலி தோன்றும். சில நேரங்களில் வயிற்று வலி, தலை வலி கூட உண்டாகி அவஸ்தைக்குள்ளாக்கும்.
எனவே பெண்கள் எப்போதும் இத்தகைய வலிகளைக் கவனிக்க வேண்டும். வலிகளைப் பற்றிய ஐயங்களையும், பயத்தினையும் மருத்துவரிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும். மேலும் சீரான இடைவெளிகளில் தவறாமல் மருத்துவரிடம் சென்று, உடல்நிலையைப் பரிசோதித்துக் கொள்ள வேண்டும்.



Click it and Unblock the Notifications