Latest Updates
-
சனி-சுக்கிரனால் உருவாகும் நவபஞ்சம யோகம்: ஜூன் 25 முதல் இந்த 5 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டும்... -
2 உருளைக்கிழங்கு இருந்தா, இப்படி குருமா செய்யுங்க.. சிக்கன், மட்டன்-லாம் தோத்துடும்.. -
ஜூன் 17-ல் உருவாகும் அரிய கிரக சேர்க்கையால் அற்புதமான நன்மைகளை அடையப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா -
கோவை அன்னபூர்ணா ஹோட்டல் வெஜ் குருமா ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு டக்கரா இருக்கும் -
இனிப்புகளின் ராஜா என்று அழைக்கப்படும் இனிப்பு எது தெரியுமா? உங்களுக்கு இந்த இனிப்பு பிடிக்குமா? -
எந்த கீரை வாங்கினாலும் இப்படி ஒருவாட்டி செய்யுங்க.. பிடிக்காதவங்களும் கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
ஜூலை 27-ல் நடக்கும் சனி வக்ர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களின் கனவு நனவாகப்போகுது..! -
இந்த 4 மாதங்களில் பிறந்த பெண்கள் மிகச்சிறந்த அம்மாக்களாக இருப்பார்களாம் - நீங்க பிறந்த மாதம் என்ன? -
முதலைகள் ஏன் கற்களை விரும்பி சாப்பிடுகின்றன தெரியுமா? இதுக்குப் பின்னாடி இப்படி ஒரு காரணம் இருக்கா? -
International Yoga day 2026: வாய்வு தொல்லையால் அவதிப்படுகிறீர்களா? அப்ப தினமும் இந்த யோசனங்களை செய்யுங்க..
தாய்மைபேற்றினை தடுக்கும் எதிரிகள் : வெல்வது எப்படி?

தாய்மைக்கு முதலில் வில்லனாக இருப்பது, பாலிசிஸ்டிக் ஓவேரியன் டிசீஸ்'. இந்திய பெண்களில் ஐந்தில் ஒருவருக்கு இந்த பாதிப்பு இருக்கிறது. சினைப்பையில், நீர் கோர்த்த பருக்கள் தோன்றுவதையே பாலிசிஸ்டிக் ஓவேரியன் நோய் தாக்குதல் ஆகும். நீர்கோர்த்த அந்த பருக்கள் புற்றுநோய் கட்டிகளாக மாற வாய்பில்லை என்கின்றனர் மகப்பேறு மருத்துவர்கள். இதற்கு சரியான சிகிச்சை எடுத்துக்கொண்டால் தாய்மை அடையலாம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஹார்மோன் பாதிப்பு
இந்த பாதிப்பு கொண்டவர்களுக்கு முகப்பரு தோன்றும். உடல் குண்டாகும். முகம், வயிறு, மார்புப் பகுதியில் முடி வளரும். மேலும் ஹார்மோன் பிரச்சினைகள் இருந்து கொண்டிருக்கும். பரம்பரை ரீதியாகவும் இந்த நோய் தோன்றும். இந்த நோய் பாதிப்புள்ள பெண்களின் உடலில் ஆண்களுக்கான டெஸ்ட்டோஸ்டிரான் ஹார்மோன் பெருமளவு சுரப்பதே இத்தகைய முரண்பாடுகளுக்கான காரணமாகும். இவர்களுக்கு பெண்களுக்குரிய ஹார்மோனை சுரக்கவேண்டிய சினைப்பையும், பிட்யூட்டரி சுரப்பியும், அதனை சரிவர சுரக்காத நிலை ஏற்படுவதால் அவர்களுக்கு மாதவிலக்கு நெருக்கடி தோன்றும். எனவே அருகில் உள்ள மகப்பேறு நிபுணர்களை தொடர்பு கொண்டு சரியான சிகிச்சை பெற்றுக்கொண்டால் இந்த குறைபாடுகள் நீங்கும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
உலர்வுத் தன்மை
பெண்களின் இனப்பெருக்க உறுப்பு சுரப்பிகள் ஜெல்லி போன்ற திரவத்தை சுரக்கின்றன. இதனை செர்விக்கல் மியூக்கஸ்' என்கிறோம். கணவரின் உயிரணு நீந்தி வேகமாகச் செல்ல துணைபுரிவது இந்த திரவத்தின் வேலை. இது கெட்டியாகி விட்டாலோ, தேவையான அளவு இல்லாவிட்டாலோ தாய்மைக்கு தடை ஏற்படும். எனவே உலர்வுத்தன்மையை போக்க சரியான சிகிச்சை எடுத்துக்கொள்ளவேண்டும்.
பலவீனமே எதிரி
பெண்கள் பிறப்பு உறுப்பை இறுக்கமாக்கும் வெஜைனெஸ்மாஸ்' நோய் ஏற்பட்டிருந்தாலோ, செக்ஸ் மீது ஆர்வம் இல்லாமல் இருந்தாலோ, செக்சை அருவறுப்பு நிறைந்ததாக கருதினாலோ அதற்கான சிகிச்சைகளை பெற்று, தீர்வு தேடிக்கொள்ள வேண்டும்.
ஆண்களிடையே உள்ள பலவீனமும் பெண்கள் தாய்மையடைவதற்கு தடையாகிறது. விந்தணு குறைபாடு, ஈடுபாடின்மை போன்றவையும் தாய்மை பேற்றினை தடுக்கும் எதிரியாக திகழ்கிறது.
நோய் தொற்றுகள்
சிலருக்கு கிளன்டிடா போன்ற கிருமித்தொற்றுகள் பிறப்பு உறுப்பு பகுதியில் ஏற்படும். சரியான நேரத்தில் அதற்கான சிகிச்சையை பெறாவிட்டால், செக்ஸ் செயல்பாட்டில் ஈடுபடும்போது வலி தோன்றும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும்போதும், சில வகை ஆன்டிபயோடிக் மருந்துகளை தேவையில்லாமல் சாப்பிடும்போதும், அதிக நேரம் ஈரத்தன்மையோடு இருக்கும்போதும் இந்த கிருமித்தொற்று ஏற்படும். எனவே உடல் நலத்திற்கு ஏற்ற சத்தான உணவுகளை உட்கொண்டு நோய்கிருமிகள் தாக்காத வகையில் பாதுகாக்க வேண்டும் என்பது மகப்பேறியல் நிபுணர்களின் ஆலோசனை.



Click it and Unblock the Notifications