Latest Updates
-
August Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. ஆகஸ்ட் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
சந்திரன் விருச்சிக ராசிக்கு செல்வதால் தொந்தரவுகளையும், துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் -
செட்டிநாடு கொண்டைக்கடலை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா?
சிசேரியன் பிரசவத்தில் இருந்து எப்படி தப்பிக்கலாம்?

பிரசவ வலி என்பது ஒவ்வொரு பெண்ணும் உணரவேண்டிய ஒன்று. இது பெண்ணிற்கு ஏற்படும் உச்சக்கட்டவலி. மாதவிடாய் காலத்தில் வலிப்பதைப் போல இல்லாமல் அதீத வலியுடன் உயிர்போய் உயிர் வரும். அதனால்தான் பிரசவத்தை மறுஜென்மம் என்கின்றனர். இந்த வலிகளை பொறுக்க முடியாமல் அஞ்சியே பெரும்பாலான பெண்கள் சிசேரியன் பிரசவத்தை பிரும்புகின்றனர்.
பிரசவவலி என்பது அதிகபட்சம் 12 மணிநேரம் தான், அதனை பொறுத்துக்கொண்டால் ஆண்டுமுழுவதும் மகிழ்ச்சியாய் நடமாடலாம் என்கின்றனர் நிபுணர்கள். ஆனால் வலிக்கு பயந்து சிசேரியன் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளும் பெண்கள் அதற்கான பின் விளைவுகளை அனுபவிக்கவேண்டும் என்கின்றனர் நிபுணர்கள்.சிசேரியன் பிரசவத்தை தவிர்க்க என்ன செய்யலாம் என்று நிபுணர்கள் ஆலோசனை கூறியுள்ளனர்.
கர்ப்ப காலத்தில் சிலருக்கு கை, கால் வீக்கம் வருவது இயல்புதான். இவர்கள் நெல்லிக்காய், முருங்கைக்காய், முள்ளங்கி சாப்பிடலாம். ஒரு டேபிள் ஸ்பூன் சோம்பு எடுத்து அதை சட்டியில் வறுத்து வெடிக்கும் போது தண்ணீர் விட்டு காய்ச்சி குடிக்கலாம் இது கால் வீக்கத்தை குறைக்கும்.
கர்ப்பிணிகள் தங்கள் கர்ப்பகாலத்தில் உடலுக்கு குடைச்சல் தரும் வாய்வு உணவுப் பொருட்களை உண்ணக்கூடாது. முக்கியமாக வாழைக்காய், உருளைக்கிழங்கு, இறால்மீன் போன்றவைகளை சாப்பிடுவதை தவிர்க்கவேண்டும்.
மூன்றாவது மாதம் தொடங்கி பிரசவ காலம் வரை வெந்தையக்கஞ்சி சாப்பிடுவது சுகப்பிரசவத்திற்கு வலி வகுக்கும். 5 வது மாதத்தில் இருந்து ஒரு டம்ளர் அரிசி கொதி நீர் எடுத்து அதில் சிறிதளவு வெண்ணெய் கலந்து மதியம் நேரத்தில் சாப்பிடலாம். கர்ப்பகாலம் முதல் பிரசவகாலம் வரைக்கும் சின்னவெங்காயம், சீரகம் சேர்த்து முருங்கைக் கீரை சூப் வைத்து சாப்பிடலாம் இதனால் பிரசவம் சுலபமாகும்.
பிரசவ நாள் நெருங்கும் சமயத்தில் சிலருக்கு அடிக்கடி வயிறு வலி வரும். அப்பொழுது வெற்றிலை, ஓமம், பூண்டு சேர்த்த கசாயம் வைத்து சாப்பிடலாம். சாதாரண வலி என்றால் நின்றுவிடும். அதே பிரசவ வலி என்றால் மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய நேரம் வந்தாச்சு என்கின்றனர் நிபுணர்கள்.



Click it and Unblock the Notifications