Latest Updates
-
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
கர்ப்ப காலத்தில் கிரீன் டீ அதிகம் குடிப்பது கருவிற்கு ஆபத்து!

கிரீன் டீ குடிப்பதன் மூலம் உடல் எடை குறைவதோடு, நோய் நொடி அண்டாமல் இருக்கச் செய்கிறது என்பதால் பால் டீ யை கிரீன் டீ யை விரும்புபவர்கள் அதிகமாகிவிட்டனர். உடல் எடை குறைக்கும் கிரீன் டீ யை கர்பிணிகள் தாராளமாக குடிக்கலாம் என்று பலர் கூறிவந்த நிலையில் தற்போது கிரீன் டீ குடிப்பதால் கருவில் உள்ள குழந்தைக்கு ஆபத்து ஏற்படும் என்று அதிர்ச்சிகரமான தகவலை கூறியுள்ளனர்.
கிரீன் டீயில் ஆன்டி ஆக்சிடன்ட் அதிகம் உள்ளது. இந்த ஆன்டி ஆக்சிடன்ட்டில் அதிக வேதியியல் பொருட்கள் இருப்பதால், உடலில் செல் அழிவைத் தடுக்கிறது. மேலும் இது இதய நோய், ரத்த அழுத்தம் மற்றும் புற்றுநோய் போன்றவற்றைத் தடுக்கிறது. இது உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வதுடன், எலும்புகளை வலுபடுத்துகிறது.
ஆனால் கிரீன் டீ குடிப்பதால் உடலில் உள்ள போலிக் ஆசிட் அளவு பாதிக்கப்படுகிறது. ஆனால் கர்பிணிகளுக்கு போலிக் ஆசிட் மிகவும் முக்கியமானது. கருவில் உள்ள குழந்தையின் நரம்புக் குழல் கிரீன் டீ குடிப்பதால் பாதிக்கப்படுகிறது. அந்த நரம்புக் குழல் பாதிப்படைவதற்கு காரணம் போலிக் ஆசிட் குறைபாடேயாகும்.
கர்ப்பகாலத்தில் கிரீன் டீ குடிப்பதை குறைத்துக் கொண்டால் கருவிற்கு மிகவும் நல்லது. ஆகவே கர்ப்பிணிகள் கர்ப்ப காலத்தில் கிரீன் டீ குடிப்பதை தவிர்க்கலாம் என்கின்றனர் மகப்பேறு மருத்துவர்கள்.



Click it and Unblock the Notifications