Latest Updates
-
பீட்ரூட்டை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
அவல் தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 19, 2026: இன்றைய நாள் இந்த 2 ராசிகளுக்கு ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் - ஜாக்கிரதை -
கடக ராசிக்கு சென்றுள்ள செவ்வாய்: இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், சொத்துக்களும் குவியும்.. -
4 வெங்காயம் இருந்தா போதும்.. சப்பாத்திக்கு சூப்பரான சைடு டிஷ் செய்யலாம்! எப்படின்னு பாருங்க.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
பொலிவான முகம் வேண்டுமா? அப்ப அரிசி மாவை வெச்சு அடிக்கடி இப்படி ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
தக்காளியோட இந்த பொருளை சேர்த்து சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமான சைடிஷா இருக்கும் -
ஃபோலிக் அமிலம் ஏன் மிகவும் முக்கியம்? அதன் குறைபாட்டின் எச்சரிக்கை அறிகுறிகள் என்ன? - விளக்கும் டாக்டர்!
கர்ப்பிணிகள் சாப்பிடவேண்டிய சத்தான ஸ்நாக்ஸ் !

கர்ப்பிணிகள் தங்களின் உணவில் காய்கறிகள், நட்ஸ், தானியங்களை அதிகம் சேர்த்துக்கொள்ளவேண்டும். ஜங்க் ஃபுட், எண்ணெயில் பொரித்த உணவுகளை அறவே தவிர்க்கவேண்டும். வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் டி, போலிக் அமிலம், இரும்புச்சத்து, கால்சியம் சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும். கர்ப்ப காலத்தில் ஒரே நேரத்தில் அதிக சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ளக்கூடாது. மூன்றுவேளை உணவினை 6 வேளையாக பிரித்து உட்கொள்ளுங்கள்.
யோகர்டு எனப்படும் மணமூட்டப்பட்ட தயிர் தாய்க்கும், சேய்க்கும் அவசியமானது. இதில் உள்ள கால்சியம் சத்து கருக்குழந்தையின் பற்களின் எலும்புகளின் வளர்ச்சிக்கு அவசியமானது. யோகர்டு உடன் நார்ச்சத்து நிறைந்த பழங்கள், விதைகள் போன்றவைகளை கலந்து உட்கொள்ளலாம் அருமையான காலை உணவாக இது அமையும்.
உயர்தர ஊட்டச்சத்து மிக்க காய்கறிகள், பழங்கள் அடங்கிய சாலட் போல செய்து சாப்பிடலாம். தக்காளி, வெள்ளரி, வேகவைத்த ப்ருகோலரி, செலரி, இனிப்பு மக்காச்சோளம், இனிப்பு உருளைக்கிழங்கு போன்றவைகளை நாளுக்கு இரண்டு என்ற வகையில் சாலட் செய்து சாப்பிடலாம்.
கர்ப்பிணிகளுக்கு காரட் உயர்தர ஆகாரமாகும். இதில் உள்ள பீட்டா கரோட்டின் குழந்தைகளுக்கு ஏற்றது. இது ஆரோக்கியமானதோடு கர்ப்பகால மன அழுத்தம் ஏற்படாமல் தடுக்கிறது. காரட்டினை நறுக்கியோ, துருவியோ வைத்துக்கொண்டு அவ்வப்போது ஸ்நாக்ஸ் போல சாப்பிடலாம்.
கடலைப் பருப்பு கர்ப்பிணிகளுக்கு ஏற்ற சத்தான உணவு. இதனை லேசாக வறுத்து சாப்பிடலாம். வெல்லம், ஏலக்காய் சேர்த்து பர்பி போல சாப்பிடலாம். எளிமையான சத்து நிறைந்த உணவு இது.
பாதம் பருப்பில் வைட்டமின் இ, ப்ளேவனாய்டுகள் காணப்படுகின்றன. அதேபோல் வால்நட்டில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் காணப்படுகின்றன. முந்திரிப்பருப்பில் பாஸ்பரஸ், இரும்பு, மெக்னீசியம், செலினியம் போன்றவை காணப்படுகின்றன. இவை அனைத்துமே கர்ப்பிணிகளுக்கும், கரு குழந்தைக்கும் ஏற்ற உணவாகும்.



Click it and Unblock the Notifications
