Latest Updates
-
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
பேறுகால முதுகுவலியை உடனே கவனிங்க !
முதுகுவலி என்பது இன்றைக்கு அனைவருக்கு உணரும் நோயாக உள்ளது. அதுவும் பேறுகாலத்தின் போது சுமார் 50 சதவீதம் பெண்கள் கீழ் முதுகுவலியை அனுபவிக்கிறார்கள். பேறு காலத்தின் போதான முதுகுவலி, குறிப்பிடும் அளவுக்கு வலியையும், செயலிழப்பையும் கொண்டு வரலாம். மேலும் அடுத்த பிரசவத்தில் முதுகுவலி வரவும் காரணமாக இருக்கலாம்.
தாயின் எடை அதிகரிப்பு, உடற்பயிற்சி, வேலை பளு போன்றவற்றினால் ஆகியவற்றைப் பொறுத்து பேறு காலத்தின் போது முதுகுவலி வரலாம். முட்டியை மடக்காமல் நேரடியாக குனிவது போன்றவையும் பேறு காலத்தின் போதான முதுகுவலியை அதிகரிக்கும்.
வயிற்று வகிட்டு, குறுக்கு வட்டம் மற்றும் கீழ்முதுகு முன்கூனல் ஆகியவை பேறு காலத்தின் போது ஏற்படும் கீழ் முதுகு வலியோடு சம்பந்தப்பட்டவைகளாகக் காணப்படும்.
நிற்றல், உட்காருதல், முன்னே குனிதல், பளு தூக்குதல் மற்றும் நடத்தல் ஆகியவை பேறு காலத்தின் போது முதுவலியை அதிகரிக்கக் கூடியவைகளாகும் என்கின்றனர் மகப்பேறு மருத்துவர்கள்.
பேறு காலத்தின் போதான முதுகுவலியானது இரவு நேரத்தில் தூங்கவிடாமல் செய்யும். தொடை மற்றும் புட்டங்களுக்கு செல்லும் வலியானது நோயாளியை மிகவும் மன உளைச்சலை உண்டு பண்ணும்.
முதுகு வலி வராமல் தவிர்க்க உடலின் பாகங்களை சமமாக வைக்கவேண்டும். எடை மிகுந்த பொருட்களை தூக்கும் போது கவனமாக கையாளவேண்டும். மாடிப்படி ஏறுதல் மற்றும் முதுகு அல்லது இடுப்பை சுற்றியுள்ள முனைப்புள்ளிகளில் திரும்பத் திரும்ப தோன்றும் அசைவுகள் ஆகியவற்றைத் தவிர்த்தால் வலி குறையும்.



Click it and Unblock the Notifications