Latest Updates
-
வாழைத்தண்டு பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணி பாருங்க.. -
இந்த 4 ராசிகள் அனைவரின் முகத்திலும் சிரிப்பை கொண்டுவரும் தூய ஆன்மாவாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
காய்ச்சலின் போது எந்த உணவுகளை சாப்பிடலாம்? எதை சாப்பிடக்கூடாது? - விளக்கும் டாக்டர்! -
ஐயங்கார் ஸ்டைல் சுட்ட கத்திரிக்காய் மசியல் ரெசிபி - செஞ்சு பாருங்க - பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க -
பாபா வாங்கா கணிப்புப்படி செப்டம்பர் மாத முதல் வாரம் இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
உலகின் முதல் ஏவுகணையை உருவாக்கிய நாடு எது தெரியுமா? அமெரிக்காவும் இல்ல, ரஷ்யாவும் இல்ல -
1/2 கப் ஜவ்வரிசி இருந்தா.. இப்படி தோசை சுட்டு சாப்பிடுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 31 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு இழப்புகள் நிறைந்த நாளாக இருக்குமாம் -
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க - செப்டம்பர் மாதம் உங்களுக்கு எப்படி இருக்கப்போகுதுனு நாங்க சொல்றோம் -
ராஜஸ்தானி பஞ்சரத்ன பருப்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஆரோக்கியமாவும், டேஸ்டாவும் இருக்கும்
Post Pregnancy Diet: பாலூட்டும் தாய்மார்கள் காலை உணவாக இதில் ஒன்றை சாப்பிடுவது அவர்களுக்கு ரொம்ப நல்லதாம்...!
Post Pregnancy Diet: கர்ப்ப காலத்தில் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்பது பற்றி அனைவரின் வீட்டிலும் விவாதிகப்படுகிறது. இதனை தெரிந்து கொள்வதற்கு பல புத்தகங்கள், டிப்ஸ்கள் மற்றும் வலைதளங்கள் உள்ளன, ஆனால் கர்ப்பத்திற்குப் பிறகு என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி பலர் பேசுவதில்லை.
எடை அதிகரிப்பதில் இருந்து மகப்பேற்றுக்கு பிறகான மன ஆரோக்கியம் வரை, பிரசவத்திற்குப் பிறகான பெண்களின் வாழ்க்கை என்பது பல போராட்டங்கள் நிறைந்தது. மருந்துகள் மட்டுமின்றி, புதிதாக குழந்தை பெற்றவர்கள் உணவிலும் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

புதிதாக குழந்தைப் பெற்றவர்கள் ஊட்டச்சத்துக்களின் சரியான சமநிலையை பராமரிப்பது முக்கியம். ஒரு நாளின் காலை உணவு அன்றைய நாளின் மிக முக்கியமான உணவாகக் கருதப்படுகிறது.
பாலூட்டும் தாய்மார்கள் தங்கள் உடலுக்கு சிறந்த ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை வழங்க வேண்டும், இதனால் குழந்தை வலுவாகவும், புத்திசாலியாகவும், ஆரோக்கியமாகவும் வளருவார்கள். புதிய தாய்மார்கள் காலை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டிய உணவுகள் என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
பப்பாளி
பப்பாளியில் உள்ள வைட்டமின்கள் தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது உங்கள் தாய்ப்பாலின் அளவையும் தரத்தையும் அதிகரிக்கக்கூடிய ஒரு சூப்பர் உணவாகும். பப்பாளியின் வழக்கமான உட்கொள்ளல் பெண்களின் செரிமான அமைப்பில் பல அதிசயங்களைச் செய்யும். பப்பாளி செல்லுலைட் வளர்ச்சியைத் தடுக்க உதவுகிறது.
டாலியா
டாலியா பலவிதமான ஆரோக்கிய நலன்களுடன் நிரம்பியுள்ளது. உடைந்த கோதுமையால் தயாரிக்கப்படும் டாலியா, ஜீரணிக்க எளிதானது மற்றும் ஊட்டச்சத்து நிறைந்தது. இது நார்ச்சத்து அதிகமுள்ள மற்றும் ஆற்றல் மட்டங்களுக்கு சிறந்த உணவுகளில் ஒன்றாக நம்பப்படுகிறது.
வாழைப்பழம்
வாழைப்பழம் ஆரோக்கியமான கார்போஹைட்ரேட் மற்றும் வைட்டமின் பி நிறைந்துள்ளது. பெக்டின் நிறைந்த, இந்த சூப்பர்-எனர்ஜிஸிங் பழம் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது மற்றும் குடல் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.
இது ஒரு ப்ரீபயாடிக் ஆகும், இது பெருங்குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களுக்கு உணவை வழங்குகிறது. இதில் உள்ள மெக்னீசியம் பிரசவத்திற்குப் பிறகான மனச்சோர்வை எதிர்த்துப் போராட உதவுகிறது மற்றும் மனநிலையை மேம்படுத்தவும் உதவுகிறது.
அமராந்த்
இது புதிய தாய்மார்களுக்கான அனைத்து ஊட்டச்சத்துக்களும் நிறைந்த உணவாகும். பிரசவத்திற்குப் பிறகு முடி உதிர்தலை எதிர்த்துப் போராட இது உதவும். இது இரும்பு, மாங்கனீஸ், செலினியம், பாஸ்பரஸ் மற்றும் தாமிரம் ஆகியவற்றின் நல்ல மூலமாகும், இது இழந்த வலிமையை மீண்டும் பெற உதவுகிறது.
ஊறவைத்த நட்ஸ்
நட்ஸ் இரும்பு, கால்சியம் மற்றும் துத்தநாகம் மற்றும் வைட்டமின் கே மற்றும் பி வைட்டமின்கள் போன்ற அத்தியாவசிய தாதுக்கள் அதிகம் உள்ளன. அவை அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் மற்றும் புரதத்தின் ஆரோக்கியமான ஆதாரமாகவும் இருக்கின்றன. அவற்றின் தனித்துவமான ஊட்டச்சத்து லாக்டோஜெனிக் என்றும் கருதப்படுகிறது.
பால்
தாய் அல்லது உங்கள் குழந்தைக்கு ஒவ்வாமை இல்லாத நிலையில், தாய்ப்பால் கொடுக்கும் போது பால் குடிப்பது பெண்களுக்கு ஒரு சிறந்த தேர்வாகும். இதில் 8 கிராம் புரதம், 50% வைட்டமின் பி12, தினசரி கால்சியம் தேவையில் 25% மற்றும் பொட்டாசியம் மற்றும் வைட்டமின் டி தினசரி தேவைகளில் 15% உள்ளது.



Click it and Unblock the Notifications
