பிரசவத்திற்குப் பின் பெண்களுக்கு 4 வாரம் வரை இரத்தப்போக்கு இருக்குமா?

Posted By:
Subscribe to Boldsky

பெண்கள் கர்ப்ப காலத்தில் மட்டுமின்றி, பிரசவம் முடிந்த பின்னும் வெளியே சொல்ல முடியாத அளவிலான பிரச்சனைகளை சந்திப்பார்கள். சொல்லப்போனால் கர்ப்ப காலத்தை விட, பிரசவத்திற்கு பின் 2 வாரம் ஒரு பெண் சந்திக்கும் பிரச்சனை தான் மிகவும் கொடியது. அது என்னவெனில் பிரசவம் முடிந்த பின், பெண்களுக்கு இரத்தப்போக்கு அதிகம் ஏற்படும்.

பிரசவம் முடிந்த பின் பெண்கள் ஒரு வாரம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் கர்ப்பப்பை, சிறுநீர்ப்பை போன்றவற்றில் நோய்த்தொற்றுகள் எளிதில் ஏற்பட்டு, கடுமையாக அவஸ்தைப்பட வேண்டியிருக்கும். இப்போது இக்கட்டுரையில் நாம் பார்க்கப் போவது பிரசவத்திற்கு பின் ஏற்படும் இரத்தப்போக்கு குறித்து தான்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பிரசவத்திற்கு பின் இரத்தப்போக்கு

பிரசவத்திற்கு பின் இரத்தப்போக்கு

பிரசவம் முடிந்த பின் பெண்களுக்கு சளியுடன் கூடிய கருப்பை திரவம் (இரத்தப்போக்கு) அதிகமாக வெளியேறும். கர்ப்பமாக இருக்கும் போது, 9 மாதங்கள் உடலில் இருந்து இரத்தம் வெளியேற்றப்படாமல் இருப்பதால், பிரசவம் முடிந்த பின் பெண்களுக்கு இரத்தப்போக்கு அதிகமாகவே இருக்கும்.

பலருக்கு இது 10 நாட்கள் வரை இருக்கும். மிகவும் அரிதாக சில பெண்களுக்கு 5-6 வாரம் வரை அளவான இரத்தப்போக்குடன் இருக்கும்.

இரத்தத்தின் நிறம்

இரத்தத்தின் நிறம்

பிரசவம் முடிந்த ஆரம்பத்தில் வெளியேறும் இரத்தமானது சிவப்பு முதல் பிங்க் நிறமாக வெளியேறும். பின் ப்ரௌன் நிறத்தில் வெளியேறும். இறுதியில் மஞ்சள் கலந்த வெள்ளை திரவமாக வெளியேறும். ஆனால் 4 வாரத்திற்குள் முழுமையாக நின்றுவிடும்.

ஆனால் ஒரு பெண்ணுக்கு 4 வாரத்திற்கு மேல் இரத்தக்கசிவு இருப்பின், உடனடியாக மருத்துவரை அணுக வேண்டியது அவசியம்.

இரத்தக் கட்டிகள்

இரத்தக் கட்டிகள்

பிரசவத்திற்குப் பின் வெளியேறும் இரத்தம் கட்டிகளாகவும் இருக்கும். அந்த இரத்தக்கட்டி ஒரு கோல்ஃப் பந்து அளவில் இருந்தால், சற்றும் தாமதிக்காமல் மருத்துவரை அணுக வேண்டும்.

செய்ய வேண்டியவைகள் மற்றும் கூடாதவைகள்!

செய்ய வேண்டியவைகள் மற்றும் கூடாதவைகள்!

நேப்கின்கள்

பிரசவத்திற்கு பின் பெண்கள் பெரிய அளவிலான நேப்கின்களைப் பயன்படுத்த வேண்டும். டேம்பான்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் அவை கருப்பை மற்றும் பிறப்புறுப்பு பகுதிகளில் பாக்டீரியா தொற்றுக்களை உண்டாக்கிவிடும்.

உடுத்தும் உடைகள்

உடுத்தும் உடைகள்

இக்காலங்களில் பெண்கள் தாங்கள் உடுத்த தேர்ந்தெடுக்கும் உடைகள் புதியதாக இல்லாமல், பழையதாக இருப்பது நல்லது. பிரசவம் முடிந்த பின் புதிய உடைகளை அணிந்தால், உடைகளில் இரத்தக் கறைகள் படிந்து, பின் அந்த உடையே பாழாகும். எனவே முடிந்த அளவில் பழைய உடைகளை அணியுங்கள்.

ஓய்வு அவசியம்

ஓய்வு அவசியம்

பிரசவம் முடிந்த பின் பெண்கள் கடுமையான வேலைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும். ஒருவேளை அப்படி வேகமாக வேலைகளில் ஈடுபட்டால், உடல் தன்னைத் தானே சரிசெய்யும் செயல்முறை குறைந்து, இரத்தக்கசிவு மீண்டும் அதிகரிக்கும். எனவே நல்ல ஓய்வு மிகவும் அவசியம்.

நேப்கின் மாற்றுவது

நேப்கின் மாற்றுவது

இரத்தப்போக்கு அதிகமாக இருந்தால், 1 மணிநேரத்திற்கு ஒருமுறை நேப்கின்களை மாற்ற வேண்டும். இதனால் நோய்த்தொற்றுகள் ஏற்படுவதைத் தடுக்கலாம். ஒருவேளை இரத்தப்போக்கு கடுமையான துர்நாற்றத்துடன் இருந்தால், உடனே மருத்துவரை அணுகுங்கள். (பிரசவத்திற்கு பின் வெளிவரும் இரத்தக்கசிவின் நாற்றம் மாதவிடாய் கால இரத்தக்கசிவு நாற்றத்தில் தான் இருக்கும்.)

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Vaginal Bleeding After Delivery

Are you experiencing vaginal bleeding after delivery? Here's how (and how not) to manage the bloody flow after your baby has arrived.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter