தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் சாப்பிடக்கூடாத 7 பழங்கள்!

Posted By:
Subscribe to Boldsky

பிறந்த குழந்தையின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கும், உடல்நலத்திற்கும் தாய்ப்பால் மிகவும் முக்கியமான ஒன்று. கர்ப்ப காலத்தில் மட்டுமின்றி, தாய்ப்பால் கொடுக்கும் காலத்திலும் பெண்கள் உண்ணும் உணவுகளில் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் பிறந்த குழந்தைக்கு ஒரே உணவு தாய்ப்பால் தான்.

தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் எந்த உணவுகளை உட்கொண்டாலும், அது தாய்ப்பாலுடன் கலந்து குழந்தையை அடையும். எனவே உங்கள் குழந்தைக்கு எந்த ஒரு பிரச்சனையும் வராமல் இருக்க வேண்டுமானால், தாய்ப்பால் கொடுப்பவர்கள் தங்களது உணவுகளில் கவனத்தை செலுத்த வேண்டியது அவசியம்.

அதிலும் இது கோடைக்காலம். இக்காலத்தில் உடலை நீர்ச்சத்துடனும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள பழங்களை அதிகம் சாப்பிட தோன்றும். ஆனால் தாய்ப்பால் கொடுப்பவர்கள் ஒருசில பழங்களை சாப்பிடக்கூடாது. இங்கு அந்த பழங்கள் என்னவென்று பட்டியலிடப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சிட்ரஸ் பழங்கள்

சிட்ரஸ் பழங்கள்

சிட்ரஸ் பழங்களில் உள்ள ஃப்ளேவர் தாய்ப்பாலில் கலந்து, குழந்தைக்கு வயிற்று உப்புசத்தை உண்டாக்கும். எனவே தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் ஆரஞ்சு, திராட்சை, எலுமிச்சை போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது.

ஸ்ட்ராபெர்ரி

ஸ்ட்ராபெர்ரி

தாய்ப்பால் கொடுக்கும் போது ஸ்ட்ராபெர்ரி பழத்தை பெண்கள் அதிகம் சாப்பிட்டால், குழந்தைக்கு தீவிரமாக அழற்சி ஏற்படும் வாய்ப்புள்ளது. மேலும் வாய்வுத் தொல்லை, வயிற்றுப்போக்கு, எரிச்சல் போன்றவையும், சில நேரங்களில் சருமத்தில் அரிப்புக்களும் ஏற்படும். எனவே தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் இவற்றைத் தவிர்ப்பது நல்லது.

அன்னாசி

அன்னாசி

அன்னாசியில் உள்ள அசிட்டிக் தன்மை, தாய்ப்பாலுடன் கலந்தால், அது தாய்ப்பாலை நாற்றமிக்கதாக மாற்றுவதோடு, குழந்தைக்கு நாப்கின் அரிப்புக்களையும் உண்டாக்கும்.

கிவி

கிவி

கிவி பழத்தை தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இது குழந்தைக்கு ஆரோக்கியமானதல்ல. இப்பழத்தில் உள்ள உட்பொருட்கள் குழந்தைக்கு வாய்வுத் தொல்லையை உண்டாக்கும்.

செர்ரிப் பழங்கள்

செர்ரிப் பழங்கள்

செர்ரிப் பழங்களை அதிகமாக தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் உட்கொள்ளக்கூடாது. ஏனெனில் இதில் இயற்கையாகவே மளமிளக்கும் தன்மை உள்ளது. ஒரு வேளை அதிகமாக உட்கொண்டால், குழந்தைக்கு வயிற்றுப்போக்கு ஏற்படும் அபாயம் உள்ளது.

கொடிமுந்திரி

கொடிமுந்திரி

கொடிமுந்திரியையும் தாய்ப்பால் கொடுப்பவர்கள் அதிகமாக சாப்பிடக்கூடாது. ஏனென்றால் இது குழந்தைக்கு அடிக்கடி டயப்பரை மாற்றக்கூடியவாறு செய்துவிடும். ஒருவேளை உங்களுக்கு இப்பழத்தை உட்கொள்ள தோன்றினால், அளவாக உட்கொள்ளலாம். ஆனால் இதை அதிகமாக உட்கொள்ளக் கூடாது.

ஆப்பிள்

ஆப்பிள்

என்ன தான் ஆப்பிள் பழங்களிலேயே ஆரோக்கியமானதாக இருந்தாலும், தாய்ப்பால் கொடுப்பவர்கள் இப்பழத்தை அளவுக்கு அதிகமாக உட்கொள்ளக்கூடாது. ஏனெனில் இதில் உள்ள நார்ச்சத்து, குழந்தைக்கு மலச்சிக்கலை உண்டாக்கிவிடும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Seven Fruits That Make Your Baby Sick When You Breastfeed

Are you breastfeeding your newborn? Well, here are 7 Fruits That Make Your Baby Sick When You Breastfeed, so it is best to keep away from these treats.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter