Latest Updates
-
May Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. மே மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
ஐயங்கார் ஸ்டைல் பருப்பு உருண்டை குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, செமையா இருக்கும் -
வெயிலால் கருமையாகியுள்ள சருமத்தை வெள்ளையாக்கணுமா? அப்ப இந்த முலாம் பழ ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
வெயிலின் தாக்கத்தை குறைக்க வாஸ்து செடிகளுக்கு மவுசு: மணி பிளாண்ட், அரேகா பாம் வாங்க மக்கள் ஆர்வம் -
செஃப் தாமு ஸ்டைல் பருப்பு ரசம் - 5 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க... -
May 2026 Monthly Horoscope: மே மாதம் ராஜவாழ்க்கை வாழப்போற 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வாஸ்து மாற்றங்கள்: ஏப்ரல் 24-ல் இந்த சின்ன மாற்றத்தை செஞ்சா பணமழை கொட்டுமா? -
ஆண்களே! உங்க விந்துவை கெட்டிபடுத்தணுமா? அப்ப இந்த டாக்டர் சொல்ற 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
நீல் ஆம்ஸ்ட்ராங் நிலாவிலிருந்து ரகசியமாக கொண்டுவந்த பொருட்கள் இப்ப கிடைச்சிருக்கு - அதுல என்னென்ன இருக்கு? -
12 ஆண்டுகள் கழித்து கடகம் செல்லும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு போதும் போதும் என்ற அளவுக்கு பணம் கொட்டபோகுது!
பிரசவத்திற்கு பின் பெண்களால் ஏன் மீண்டும் உடலுறவில் ஈடுபட முடிவதில்லை?
சமீபத்தில் தான் பிரசவம் நடந்தா? உங்களால் உங்கள் துணையுடன் சேர விருப்பம் இருந்தும் முடியவில்லையா? ஏனெனில் பிரசவத்திற்கு பின் பெண்களின் உடல் மற்றும் மனநிலையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் மற்றும் உடலில் ஏற்பட்ட காயங்கள் குணமாகிக் கொண்டிருப்பதும் தான்.
பெண்களின் வாழ்வில் கர்ப்ப காலம் மற்றும் பிரசவத்திற்கு பின்னான காலங்களில் தான் உடலிலும், மனதிலும் பெரிய அளவில் மாற்றங்கள் ஏற்படும். இக்காலங்களில் பெண்கள் துணையுடன் உடலுறவில் ஈடுபட விருப்பம் மனதில் இருந்தாலும், சில நேரங்களில் முடியாமல் தவிப்பார்கள்.
இங்கு பிரசவத்திற்கு பின் மீண்டும் உடலுறவில் ஈடுபடுவதில் பெண்கள் பிரச்சனைகளை சந்திப்பதற்கான காரணங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

காரணம் #1
பிரசவத்திற்கு பின் பெண்களால் மீண்டும் கணவருடன் உறவில் ஈடுபட முடியாமல் போவதற்கு, உடலில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் மற்றும் இறுக்கமான மனநிலையில் இன்னும் இருப்பதும் தான் காரணம்.

காரணம் #2
குழந்தை பிறந்த பின் பெண்கள் பல முறை உடலுறவில் ஈடுபடுவதில் பிரச்சனையை சந்திப்பார்கள். இதற்கு பிரசவத்தினால் உடலில் ஏற்பட்ட காயங்களின் வலி இன்னும் இருப்பது தான். அதிலும் சிசேரியன் செய்திருந்தால், நிலைமை இன்னும் மோசமாக இருக்கும்.

காரணம் #3
பிரசவத்திற்கு பின் பெண்களின் மார்பகங்கள் மிகவும் சென்சிடிவ்வாக இருக்கும் மற்றும் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதால், மார்பகங்களில் இருந்து பால் வடியும். இதன் காரணமாக முன் விளையாட்டுக்களில் ஈடுபட்டால், கடுமையான வலியை உணரக்கூடும்.

காரணம் #4
பிரசவத்திற்கு பின் பெண்கள் உறவில் ஈடுபடுவதில் சிரமத்தை அனுபவிக்க காரணம், பிரசவத்தினால் யோனியில் சுவர்கள் விரிவடையும். யோனி சுவர்கள் இறுக்கமாக இருந்தால் தான், உறவில் இன்பத்தைக் காண முடியும்.

காரணம் #5
பிரசவத்திற்கு பின்னான உடல் பருமன், ஸ்ட்ரெட்ச் மார்க்குகள், தளர்ந்த சருமம், தழும்புகள் போன்றவை, அவர்களது அழகைக் கெடுப்பது போன்று உணர்வார்கள். இப்படி மனதில் தங்கள் அழகு குறைந்துள்ளதை நினைத்து பெண்கள் புலம்புவதாலும், உறவில் ஈடுபடுவதில் இடையூறாக இருக்கும்.

காரணம் #6
பிரசவத்திற்கு பின் குழந்தையைக் கவனித்துக் கொள்வதிலேயே நேரம் சரியாக இருக்கும். இதில் எப்படி உறவில் ஈடுபட நேரம் இருக்கும்.



Click it and Unblock the Notifications