Latest Updates
-
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும்
பிரசவத்தைப் பற்றி பலருக்கு தெரியாத விஷயங்கள்!!!
உலகில் உள்ள பல பெண்கள் தாய்மை அடைவது என்பது ஒரு இனிமையான அனுபவம் என்று சொல்வார்கள். ஆனால் பிரசவம் என்று வரும் போது, அந்த அனுபவத்தையும் யாராலும் மறக்க முடியாது. அதுமட்டுமின்றி, பிரசவத்தின் போது சந்திக்கும் சிலவற்றையும் மறக்கவே முடியாது.
குறிப்பாக பிரசவத்தில் சிசேரியனை விட சுகப்பிரசவம் தான் சிறந்தது என்று சொல்வார்கள். ஏனெனில் சிசேரியன் பிரசவத்திற்கு பின் எடை அதிகரிப்பதுடன், வயிற்றில் கடுமையான வலி மற்றும் பல நாட்களுக்கு முதுகு வலியை சந்திக்க நேரிடும். அதுமட்டுமல்லாமல், தையல் போட்டிருப்பதால், அது ஆறுவதற்கு சில நாட்கள் ஆகும் என்ற காரணத்தினால் தான். ஆனால் சுகப்பிரசவத்திலும் ஒருசில சிக்கல்களை சந்திக்கக்கூடும் என்பது தெரியுமா?
சுகப்பிரசவம் எளிமையாக நடைபெறுவதற்கான சில எளிய டிப்ஸ்...
அதிலும் பிரசவம் நடைபெறும் போது அந்த விஷயங்கள் நடைபெறும். அதை யாரும் முன்பே சொல்லமாட்டார்கள். ஆனால் தமிழ் போல்ட் ஸ்கை சுகப்பிரசவத்தின் போது நடைபெறும் சில இரகசியங்களை உங்களுக்காக பட்டியலிட்டுள்ளது. அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

மலம் அதிகம் வெளியேறும்
சுகப்பிரசவத்தின் போது குழந்தை வெளிவர முயலும் போது, நீங்களும் வயிற்றில் அதிகப்படியான அழுத்தத்தைக் கொடுக்க நேரிடும். அச்சமயத்தில் அதிகப்படியாக மலம் வெளியேறும். ஆகவே அப்போது அதிர்ச்சியடையாமல், நல்ல படியாக குழந்தையைப் பெற்றெடுங்கள்.

அசிங்கமான ஸ்ட்ரெட்ச் மார்க்குகள்
சுகப்பிரசவத்திற்கு பின் வயிற்றில் ஏற்படும் ஸ்ட்ரெட்ச் மார்க்குகள் அவ்வளவு எளிதில் போகாது. இதுவும் யாராலும் மறுக்க முடியாத ஒன்று.

சிரிக்க முடியாது
பிரசவம் முடிந்த பின்னர் சிரிக்க முடியாது. ஏனெனில் அப்போது வாயை திறந்து பேசினாலே சிறுநீர் வெளியேறும். ஆகவே இதுவும் பிரசவத்திற்கு பின் பெண்கள் சந்திப்பவைகளில் ஒன்று.

இரத்தப்போக்கிற்கு முடிவே இல்லை
பொதுவாக மாதவிடாய் காலத்தில் இரத்தப்போக்கானது 4-5 நாட்கள் இருக்கும். ஆனால் பிரசவத்திற்கு பின், இரத்தப்போக்கு ஆரம்பித்தால், அப்போது அது நிற்பதற்கு பல நாட்கள் ஆகும். இது பெண்களுக்கு மிகவும் ஆச்சரியத்தை ஏற்படுத்தும்.

சிறுநீர் வெளியேறும்
பிரசவத்தின் போது மலம் மட்டும் வெளியேறாது, அதனுடன் சேர்ந்து சிறுநீரும் வெளியேறும். இதையும் யாரும் சொல்லமாட்டார்கள்.



Click it and Unblock the Notifications
