Latest Updates
-
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
பார்லர் போகாமலே உங்க முகம் பளபளன்னு இருக்கணுமா? அப்ப காபித் தூள் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
அசைவ உணவுக்கு இணையான சத்துக்களைக் கொண்ட சைவ உணவுகள் இதாங்க! நோட் பண்ணி வெச்சுக்கோங்க.. -
பீட்ரூட்டை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க..
பிரசவத்திற்கு பின் பெண்கள் தவறாமல் சாப்பிட வேண்டிய உணவுகள்!!!
கர்ப்பமாக இருக்கும் போது எப்படி ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட வேண்டியது அவசியமோ, அதேப் போல் பிரசவத்திற்கு பின்னும் பெண்கள் சரியான உணவுகளை உட்கொள்ள வேண்டும். இவ்வாறு பிரசவத்திற்கு பின், பெண்கள் சாப்பிடக்கூடியவாறு நிறைய உணவுகள் இருக்கின்றன.
ஆனால் பிரசவத்திற்கு பின் பெண்களின் உடல் மிகவும் மோசமான நிலையில் இருப்பதால், உடல்நிலையை சரியாக தேற்றுவதற்கு, நல்ல ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்வது மிகவும் இன்றியமையாதது. அதிலும் ஒரு சில உணவுகளில், பெண்களின் உடலுக்கு வேண்டிய சத்துக்கள் நிறைய உள்ளன. அத்தகைய உணவுகளை தினமும் உணவில் சேர்த்து வந்தால், நிச்சயம் பிரசவத்திற்கு பின் சந்திக்கக்கூடிய சில பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.
பொதுவாக பிரசவத்திற்கு பின் பெண்கள் புரோட்டீன், கார்போஹைட்ரேட், கால்சியம், ஜிங்க், வைட்டமின் சி, ஏ, ஈ மற்றும் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் போன்ற சத்துக்கள் நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும். ஆகவே தமிழ் போல்ட் ஸ்கை, மேற்கூறிய சத்துக்கள் நிறைந்த சில உணவுகளை பட்டியலிட்டுள்ளது. இவற்றை தவறாமல் உணவில் சேர்த்து வந்தால், உடலில் ஏற்படும் பல பிரச்சனைகளை போக்கலாம்.

முட்டை
முட்டையில் எண்ணற்ற அளவில் ஜிங்க் சத்து நிறைந்துள்ளது. இத்தகைய ஜிங்க் சத்து உடலில் குறைவாக இருந்தால் தான், மனநிலையில் மாற்றத்தை ஏற்படுத்தும். அதிலும் பிரசவத்திற்கு பின், இச்சத்து குறைவாக இருப்பதால் தான் மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. ஆகவே வேக வைத்த முட்டையை அதிகம் உணவில் சேர்த்து வந்தால், மன அழுத்தத்தைத் தவிர்க்கலாம்.

மீன்
மீனில் நல்ல அளவில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் நிறைந்திருக்கிறது. ஆகவே அடிக்கடி மீனை உணவில் சேர்க்க வேண்டும்.

தயிர்
தயிரில் கால்சியம் மற்றும் ஜிங்க் அதிகம் இருப்பது மட்டுமின்றி, இது செரிமான மண்டலத்திற்கு மிகவும் நல்லது. எனவே பிரசவத்திற்கு பின் உடல் எடையை குறைக்க விரும்பினால், குறைந்த அளவில் கொழுப்பு கொண்ட தயிரை சாப்பிட வேண்டும்.

கிரேப் ஃபுரூட்
கிரேப் ஃபுரூட்டில் மன இறுக்கம் மற்றும் சோர்வைத் தடுக்கும் ஃபோலிக் ஆசிட் அதிகம் நிறைந்துள்ளது. எனவே இந்த பழத்தையும் பிரசவத்திற்கு பின் பெண்கள் உட்கொள்ள வேண்டும்.

சிட்ரஸ் பழங்கள்
சிட்ரஸ் பழங்களான எலுமிச்சை, ஆரஞ்சு மற்றும் கிரேப் ஃபுரூட்டில் வைட்டமின்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் நிறைந்துள்ளது. அவை உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பதோடு, உடல் எடையை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளவும் உதவும்.

வால்நட்
வால்நட்டில் ஃபோலிக் ஆசிட் நல்ல அளவில் உள்ளது. இதுவும் பிரசவத்திற்கு பின் பெண்கள் சாப்பிடக்கூடிய உணவுப்பொருட்களில் முக்கியமானது.

கேல்
கேல் என்னும் கீரையில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இதுவும் பிரசவத்திற்கு பின் ஏற்படும் மன இறுக்கத்தைப் போக்கும்.

பசலைக்கீரை
பசலைக்கீரையில் எண்ணற்ற நன்மைகள் நிறைந்துள்ளன. எனவே பிரசவத்திற்கு பின் அத்தகைய கீரையை தேர்ந்தெடுத்து அதிகம் சாப்பிட்டால், உடல் நன்கு ஆரோக்கியமாக இருக்கும்.

ஆரஞ்சு ஜூஸ்
ஆரஞ்சு ஜூஸில் வைட்டமின் சி, ஃபோலிக் ஆசிட் போன்றவை நிறைந்திருப்பதால், இதனை பிரசவத்திற்கு பின் அடிக்கடி குடிப்பது நல்லது.

பருப்பு வகைகள்
பருப்புக்களில் இரும்புச்சத்து அதிகம் நிறைந்திருக்கிறது. எனவே இவற்றை சமைத்து சாப்பிட்டால், உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதோடு, மிகுந்த சுவையோடும் இருக்கும்.



Click it and Unblock the Notifications
