Latest Updates
-
சிக்கன் வாங்குனா இந்த மாதிரி தெலங்கானா ஸ்டைலில் மசாலா செஞ்சு பாருங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமாக இருக்கும் -
குருபகவான்-செவ்வாய் அரிய சேர்க்கையால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தென்னிந்தியாவின் சுல்தான் என்று அழைக்கப்பட்ட வலிமையான அரசர் யார் தெரியுமா? -
மட்டன் வாங்குனா.. இப்படி ஒருவாட்டி கிராமத்து ஸ்டைலில் செஞ்சு சாப்பிடுங்க.. தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 21 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப சந்தோஷமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (21 June 2026-27 June 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது..! -
உங்க ஸ்கின் டைப் சொல்லுங்க.. அரிசி மாவு வெச்சு எப்படி ஃபேஸ் பேக் போடுறது-ன்னு சொல்றோம்.. -
சர்க்கரைவள்ளிக் கிழங்கு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி ஸ்நாக்ஸ் செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
Father's Day 2026:இந்த 4 ராசிக்காரங்க சிறந்த தந்தையாக இருப்பதோடு, பிள்ளைகளுக்கு ரோல்மாடலாகவும் இருப்பாங்களாம்! -
முட்டைக்கோஸை இப்படி ஒருடைம் கூட்டு செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க...
குழந்தைகளை எப்படி ஒழுக்கத்துடன் வளர்ப்பது? இதோ அதற்கான சில வழிகள்!
Parenting Tips In Tamil: நேர்மறை பழக்க வழக்கங்கள் எப்பொழுதுமே உங்கள் குழந்தைகளுக்கு நம்பிக்கையும் உற்சாகத்தையும் அளிக்க கூடியது. உங்கள் குழந்தைகளை நேர்மறை பழக்க வழக்கங்கள் மூலம் திருத்தும் போது அவர்கள் எளிதாக ஒழுக்கத்துடன் செயல்பட ஆரம்பித்து விடுகின்றனர்.
நீங்கள் குழந்தைகள் மீது அச்சுறுத்தல், அவமானம், லஞ்சம் மற்றும் தண்டனைகளை பயன்படுத்துவதற்கு பதிலாக அவர்களுக்கு நேர்மறை வழிகாட்டலை கொடுக்கலாம். இதன் மூலம் குழந்தைகள் தங்களின் முக்கியத்துவத்தை உணர ஆரம்பிக்கின்றனர். நேர்மறை வழிகாட்டுதல் உங்களுக்கு நீண்ட காலத்திற்கு உதவி செய்யும்.

இது குழந்தைகளுக்கு வாழ்க்கை திறன்கள் மற்றும் சமூகத் திறன்களை கற்றுக் கொடுக்கிறது. குழந்தைகளின் நன் நடத்தையை இதன் மூலம் நீங்கள் காணலாம். சரி வாங்க குழந்தைகளுக்கு எளிதாக எப்படி ஒழுக்க நெறி முறைகளை கற்றுக் கொடுக்கலாம் என அறிந்து கொள்வோம்.
குழந்தைகளை ஒழுக்கமானவர்களாக மாற்ற சில எளிய நேர்மறை வழிகள்:
முதலில் வரம்புகளை அமையுங்கள்
குழந்தைகள் தங்கள் நடத்தையின் விளைவுகளை பற்றி அறிய முதலில் வரம்புகளை அமைக்க வேண்டும். ஆனால் அதே நேரத்தில் குழந்தைகள் அந்த வரம்புகளை மீறும் போது தண்டிக்கப்படுகிறார்கள். அவர்கள் அன்பை இழக்க நேரிடுகிறது. ஆனால் நேர்மறை வழி முறையில் குழந்தைகள் வரம்புகளை மீறும் போது அனுதாபத்துடன் கையாளப்படுகிறார்கள்.
உதாரணமாக உங்கள் குழந்தைகள் சுவரில் பென்சில் கொண்டு எழுதிவிட்டால் அவர்களை திட்டுவதற்கு பதிலாக" சுவரில் வரையாமல் இருப்பது உங்களுக்கு கஷ்டம் என்று எங்களுக்கு தெரியும், இருப்பினும் அதை அனுமதிக்க இயலாது. நீங்கள் முடிந்த வரை பேப்பரில் எழுத முயற்சி செய்யுங்கள்" என்று அவர்களுக்கு அன்பாக அறிவுரை வழங்கலாம்.
பேச்சை குறைத்து செயலில் ஈடுபடுங்கள்
பொதுவாக பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை நல்வழிப்படுத்த நிறைய பேசத் தொடங்குகின்றனர். உனக்கு சாக்லேட் தர மாட்டேன், உனக்கு இது தான் கடைசி வாய்ப்பு இது போன்று அவர்களை திட்டி நம் வழிக்கு கொண்டு வர முயற்சி செய்கிறோம். ஆனால் உண்மையில் உங்கள் குழந்தைகள் உங்கள் பேச்சை பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. எனவே பேச்சை குறைத்து விட்டு அதை செயலில் காட்டுங்கள். சாக்லேட் தர மாட்டீர்கள் என்றால் அதை செயலில் காட்டி புரிய வையுங்கள்.
சாய்ஸ்களை வழங்குவது
சாய்ஸ்களை வழங்குவது ஒரு நேர்மறையான பழக்க வழக்கமாகும். உதாரணமாக " நீங்கள் இப்போது தூங்குகிறீர்களா அல்லது 10 நிமிடங்கள் கழித்து தூங்குகிறீர்களா, உங்களுக்கு நீல நிற ஆடை அல்லது சிவப்பு நிற ஆடை எது வேண்டும் போன்று சாய்ஸ்களை நீங்கள் அவர்களுக்கு வழங்கலாம். இதன் மூலம் நீங்கள் தேவையில்லாமல் குழந்தைகளுடன் சண்டையிடத் தேவையில்லை.
"Yes" என்ற சூழலை உருவாக்குங்கள்
பொதுவாக குழந்தைகளிடம் வேண்டாம் என்ற சொல்லயே அதிகமாக பயன்படுத்துவது உண்டு. அதிக எதிர்ப்பை இதன் மூலம் காட்டுவது உண்டு. உதாரணமாக சோபாவில் குதிக்க வேண்டாம், வெளியில் விளையாடதே போன்று எதிர்ப்பை தெரிவிப்பது உண்டு. ஆனால் இதற்கு பதிலாக ஆம் என்ற சூழலை அவர்களுக்கு உருவாக்கலாம். உதாரணமாக "சோபா உட்காருவதற்கான ஒன்று, உங்களுக்கு குதித்து விளையாட வேண்டும் என்றால் தரையில் குதித்து விளையாடலாம்". என்று கூறலாம். குழந்தைகளும் yes என்ற பதிலை கூற முயற்சி செய்வார்கள்.
கத்துவதை நிறுத்தி விட்டு உறுதியான குரலை பயன்படுத்துங்கள்
நீங்கள் கத்தி கோபமாக திட்டும் போது குழந்தைகள் அழத் தொடங்கி விடுவார்கள். அதற்குப் பதிலாக உறுதியான குரலை நீங்கள் பயன்படுத்தலாம். கத்துவது எப்போதுமே பயனற்றது. அதற்குப் பதிலாக உறுதியான பதிலை அவர்களுக்கு தெரிவியுங்கள். நீங்கள் உறுதியாக இருப்பதை பார்த்த உடன் குழந்தைகள் உங்கள் வழிக்கு வர ஆரம்பித்து விடுவார்கள்.
குழந்தைகளுடன் இணைந்து பணியாற்றுங்கள்
குழந்தைகளுடன் இணைந்து விளையாடுவது, இணைந்து வேலை செய்வது போன்ற விஷயங்கள் மூலம் அவர்களை எளிதாக ஒழுக்கமானவர்களாக மாற்றலாம். வேலை செய்யும் போது ஏற்படும் சிக்கல்களை எப்படி எளிதாக தீர்ப்பது போன்ற விஷயங்களை உங்களை பார்த்து அவர்கள் கற்றுக் கொள்கின்றனர்.
குழந்தைக்கு கெட்ட பெயர் சூட்டாதீர்கள்
உங்கள் மூத்த குழந்தை உங்கள் இளைய குழந்தைக்கு எதுவும் பகிரவில்லை என்றால் உடனே அவர்களுக்கு கெட்ட பெயரை சூட்டி முத்திரை குத்தி விடாதீர்கள். அதற்குப் பதிலாக குழந்தையிடம் அமர்ந்து ஏன் நீ பொருட்களை பகிர மறுக்கிறாய் அதற்கான ஆழமான காரணங்கள் என்ன என்பதை அறிந்து கொள்ளுங்கள். அவர்களிடம் மனசு விட்டு பேசும் போது இந்த பழக்க வழக்கங்களை எளிதாக மாற்றலாம்.
உணர்ச்சிகளை மதிப்பிட வலியுறுத்துங்கள்
கோபமாக இருக்கும் குழந்தைகள் அதை அறியாமல் பதட்டத்துடன் செயல்படுவது உண்டு. எனவே குழந்தைகள் தங்கள் உணர்வுகளை கண்டறிய அவர்களுக்கு உதவி செய்யுங்கள். அவர்களுடன் உட்கார்ந்து பேசுங்கள். ஏன் இப்பொழுது கோபமாக இருக்கிறீர்கள், ஏன் பதட்டமாக இருக்கிறீர்கள் என்ன காரணம் போன்றவற்றை கேட்டு அறிந்து கொள்ளுங்கள். இதன் மூலம் குழந்தைகள் தாங்கள் எந்த உணர்வுடன் இருக்கிறார்கள் என்பதை அறிவார்கள்.
அவமானம், அச்சுறுத்தல் மற்றும் லஞ்சம் வேண்டாம்
நேர்மறை ஒழுக்கம் எப்பொழுதுமே அவமானம், அச்சுறுத்தல், லஞ்சம் அல்லது பிற உடல் தண்டனைகளை ஊக்குவிக்காது. அதற்கு பதிலாக, கற்பித்தல் மூலம் குழந்தைகளின் நடத்தையை சரிசெய்ய ஒவ்வொரு வாய்ப்பையும் வழங்கும். குழந்தைகளை தண்டிப்பதற்கு பதிலாக கற்பித்தல் மூலம் புரிய வைக்க முயற்சி செய்யுங்கள்.



Click it and Unblock the Notifications