Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
கோடை விடுமுறையில் குழந்தைகளுடன் தாய்மார்கள் எந்த மாதிரியான விளையாட்டுக்களை விளையாடலாம்?
Parenting Tips In Tamil: குழந்தைகளுக்கு கோடை விடுமுறை விட ஆரம்பித்து விட்டார்கள். குழந்தைகளை வீட்டில் வைத்து கவனிப்பது அவ்வளவு எளிதான காரியம் கிடையாது. அவர்களை சமாளிப்பதற்கென்றே நாம் நிறைய யோசிக்க வேண்டியிருக்கும். அவர்களுடன் விளையாட வேண்டும் என்று நினைப்போம்.
ஆனால் அதற்கான நேரம் அம்மாமார்களுக்கு கிடைப்பதில்லை. அப்படியே கிடைத்தாலும் என்ன விளையாட வேண்டும் என்ற குழப்பம் இருக்கும். அதற்காகத் தான் நாங்கள் உங்கள் குழந்தைகளுடன் விளையாட சில சூப்பர் விளையாட்டுகளை உங்களுக்கு வழங்குகிறோம். குழந்தைகளுடன் விளையாடுவது உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் இடையேயான பிணைப்பை அதிகரிக்கிறது.

குழந்தைகளும் ஓடியாடி விளையாடும் போது அவர்களின் உடல் ஆரோக்கியமும் மேம்படும். எனவே குழந்தைகளுடன் விளையாட உங்களுக்கான அழ அழகான விளையாட்டுகள் இதோ இங்கே கொடுக்கப்பட்டு உள்ளன.
உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் பிடித்த விளையாட்டை தேர்ந்தெடுங்கள்:
உங்கள் குழந்தைகளுடன் விளையாடும் போது இருவருக்கும் பிடித்தமான விளையாட்டை தேர்ந்தெடுங்கள். இதனால் இருவரும் விருப்பத்துடன் விளையாட முடியும். அதில் ஒரு வித மகிழ்ச்சி இருக்கும். பிடித்தமான விளையாட்டை விளையாடும் போது நேரம் போவதும் உங்களுக்கு தெரியாது.
பைக் ரைடு போகலாம்:
குழந்தைகளுடன் அப்படியே ஒரு பைக் ரைடு போய்ட்டு வரலாம். அப்படியை இயற்கை காட்சியை ரசிப்பது, அவர்களுடன் பேசிக் கொண்டு செல்வது போன்ற விஷயங்களை நீங்கள் செய்து வரலாம். இது உங்களுக்கு ஒரு மறக்க முடியாத அனுபவத்தை தரும்.
பார்க்கில் விளையாடலாம்:
குழந்தையை அருகில் உள்ள பார்க்கிற்கு சென்று விளையாடி வரலாம். அங்கே மைதானம் பெரியதாக இருப்பதால் குழந்தைகள் மிகவும் விருப்பப்படுவார்கள். ஒழிஞ்சு பிடிச்சு, சருக்கு, ஊஞ்சல் போன்ற விளையாட்டுகளை விளையாடலாம்.
சாக்பீசில் கோடு போட்டு விளையாடுதல்:
உங்கள் குழந்தைகளுடன் சாக்பீசில் கோடு போட்டு நொண்டி விளையாடுதல், சைடு வாக் கேம், சரியா தவறா போன்ற விளையாட்டுகளை நீங்கள் விளையாடி வரலாம். சாக்பீசைக் கொண்டு ரோடு மாதிரி போட்டு அதில் பைக் ஓட்டலாம். வித்தியாசமான கை வடிவங்களை வரைந்து அதன் படி கை வைத்து விளையாடலாம்.
தண்ணீர் துப்பாக்கி சண்டை:
இந்த கோடை விடுமுறைக்கு இது ஒரு சிறந்த கேமாக இருக்கும். உங்கள் வீட்டில் தண்ணீர் துப்பாக்கி இருந்தால் அதை வைத்து ஒருவருக்கொருவர் சண்டை போட்டு விளையாடி வரலாம். இந்த விளையாட்டு உங்களுக்கு மிகுந்த உற்சாகத்தை தரும்.
டான்ஸ் பார்ட்டி:
உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் பிடித்தமான பாடல்களை தேர்ந்தெடுத்து அதை வைத்து டான்ஸ் பார்ட்டி நடத்தலாம். அப்படியே ஃப்ரீஸ் மற்றும் ரிலீஸ் போன்ற விளையாட்டுகள் உங்களுக்கு மிகுந்த சந்தோஷத்தை தரும்.
தலையணை அடியில் குறிப்புகள் வைத்து விளையாடலாம்:
உங்கள் குழந்தைக்கு எதாவது துப்பு கொடுக்கும் வகையில் தலையணை அடியில் குறிப்புகள் வைத்து எதாவது பொருட்களை கண்டுபிடிக்க சொல்லலாம். முதலில் கண்டுபிடிப்பவர்கள் வெற்றி பெற்றவர் என்று அறிவிக்கலாம்.
ஓவியங்கள் வரையலாம்:
இருவரும் ஒன்றாக இணைந்து ஓவியங்கள் வரையலாம். எதாவது ஒரு தலைப்பில் ஓவியங்கள் வரைந்து பரிசுகளை வழங்கலாம். வித்தியாசமான நிறைய ஓவிய விளையாட்டுகளை குழந்தைகளுடன் சேர்ந்து விளையாடுங்கள்.
ஷாப்பிங் கேம்:
வீட்டில் இருக்கும் சோப்பு, சீப்பு, ஷாம்பு மற்றும் மேக்கப் பொருட்களை கொண்டு ஒரு ஷாப்பிங் கேமை தயார் செய்யலாம். ஷாப்பிங் கேம் குழந்தைகளை மிகுந்த உற்சாகப்படுத்தும். பொருட்களை விலை கொடுத்து வாங்குவது, காய்கறிகள் மற்றும் பழங்கள் விற்பது போன்ற விஷயங்களை செய்யலாம்.
கதை சொல்லும் விளையாட்டு:
குழந்தைகளுக்கு கதை சொல்வது என்றாலே மிகவும் பிடிக்கும். ஏனெனில் குழந்தைகளின் கற்பனை திறன் மிகவும் அதிகம். எனவே ஒருவருக்கொருவர் எதாவது கதை சொல்லி விளையாடலாம். நீங்கள் ஒரு கதை சொல்லி அந்த கதையை அவர்களை முடிக்க சொல்லலாம்.
சமையல் விளையாட்டு:
உங்கள் குழந்தைகளுடன் சேர்ந்து எதாவது சமைத்து விளையாடலாம். கேக் செய்தல், ஐஸ் கிரீம் செய்தல் போன்ற சமையல் விளையாட்டுகளை செய்து அவர்களை உற்சாகப்படுத்தலாம்.
டீ பார்ட்டி:
உங்கள் குழந்தையின் நண்பர்களை அழைத்து ஒரு டீ பார்ட்டியை நீங்கள் ஏற்பாடு செய்யலாம். அவர்களையே டீ பார்ட்டிக்கு தேவையான விஷயங்கள், பார்ட்டி அலங்காரம் போன்றவற்றை செய்ய வைக்கலாம்.
களிமண் விளையாட்டுகள்:
களிமண்ணைக் கொண்டு வித விதமான பொம்மைகள், வித விதமான டிசைன்கள் போன்றவற்றை செய்து அலங்கரிக்கலாம். சிறந்த பொம்மைகளை செய்பவருக்கு பரிசுப் பொருட்களை வழங்கி உற்சாகப்படுத்தலாம்.
மேக்கப் மற்றும் சலூன் ஷாப் கேம்:
வீட்டில் இருக்கும் மேக்கப் மற்றும் ஹேர் ஸ்டைல் பொருட்களை கொண்டு ஒரு ஷாப் ரெடி செய்யலாம். மேக்கப் போடுவது மற்றும் ஹேர் ஸ்டைலிங் பண்ணுவது, டாட்டூ டிசைன் போடுவது, நெயில் அலங்காரம் என்று ஒருவருக்கொருவர் செய்து விளையாடலாம்.
பேஷன் டிசைனிங் செய்தல்:
வீட்டில் இருக்கும் எதாவது தேவையற்ற துணிகளை எடுத்து அதில் ஃபேப்பிரிக் பெயிண்ட் கொண்டு டிசைன்கள் போடலாம். உங்கள் குழந்தைகளுக்கு இதில் அதிக விருப்பம் இருக்கும். கண்ணாடி கிளாஸை பெயிண்டிங் பண்ணுவது, துணிகளுக்கு டிசைன்கள் போடுவது போன்றவற்றை செய்யலாம்.
கார் ரேஸில் ஈடுபடலாம்:
வீட்டில் ரிமோட் கார் இருந்தால் ரோடு மட்டும் தயார் செய்து கொண்டு உங்கள் குழந்தைகளுடன் ரிமோட் கார் கொண்டு கார் ரேஸில் ஈடுபடலாம். ஆண் குழந்தைகளுக்கு இந்த விளையாட்டு மிகவும் பிடித்தமான ஒன்றாக இருக்கும்.



Click it and Unblock the Notifications