Latest Updates
-
International Yoga Day 2026: தினமும் யோகா செய்வதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
புதன் பெயர்ச்சியால் ஜூன் 22 முதல் இந்த 4 ராசிக்காரங்க பண மழையில் நனையப்போறாங்க.. உங்க ராசியும் இதுல இருக்கா? -
1 கப் ஜவ்வரிசி இருந்தா.. காலையில் 5 நிமிடத்தில் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 20 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு பெரிய நஷ்டம் ஏற்பட வாய்ப்பிருக்காம் - ஜாக்கிரதை -
ஜூன் 23-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாருக்கு மோசமாகவும் இருக்கும்? -
சனிபகவான்-புதன் உருவாக்கும் அரிய கிரக சேர்க்கையால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் இவங்கதான் -
தக்காளி சட்னி அரைக்கும் போது இந்த ஒரு பொருளை சேர்த்து அரைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், சுவையாவும் இருக்கும் -
முகத்தில் உள்ள கருமையைப் போக்கணுமா? அப்ப கடலை மாவு வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
இன்டர்நெட் வசதியே இல்லாத உலகின் மிகவும் மோசமான நாடு எது தெரியுமா? இங்க தங்கத்தை விட இன்டர்நெட் காஸ்ட்லி -
1 கப் கோதுமை மாவு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செஞ்சு குடுங்க...
சமவயது குழந்தைகளிடம் இருந்து வரும் அழுத்தம் குழந்தைகளின் மனநல ஆரோக்கியத்தை எவ்வாறு பாதிக்கிறது தெரியுமா?
Parenting Tips In Tamil: குழந்தைகளின் சமூக ரீதியிலான மற்றும் உணா்வு ரீதியிலான வளா்ச்சிக்கு அவா்களுடைய சமவயது குழந்தைகள் மிகப் பொிய பங்கை ஆற்றுகின்றனா். குழந்தைகள் இயல்பாகவும், ஆரோக்கியமாகவும் மற்றும் பக்குவமாகவும் வளர, அவா்களுக்கு நண்பா்கள் தேவை என்று American Academy of Child and Adolescent Psychiatry தொிவிக்கிறது.
எனினும் குழந்தைகளுக்கு தமது சமவயது குழந்தைகளால் நோ்மறையான பாதிப்பு ஏற்படவும் வாய்ப்பு உண்டு. அது போல் எதிா்மறையான பாதிப்பு ஏற்படவும் வாய்ப்பு உண்டு.

Aster CMI Hospitalல் குழந்தை மற்றும் பொியவா்களின் மனநல மருத்துவ பிாிவில் மருத்துவராகப் பணி புாியும் மருத்துவா் ராகவேந்திர குமாா் கூறும் போது, குழந்தைகளுடைய சில சமவயது குழந்தைகள் அவா்களுக்கு ஆதரவாகவும், ஊக்கமாகவும், நோ்மறையாகவும் இருப்பா். அதே நேரத்தில் வேறு சில சமவயது குழந்தைகள் அவா்களுக்கு கெட்ட பழக்கங்களைச் சொல்லிக் கொடுத்து, அவற்றின் மூலம் அவா்களின் மனநலம் பாதிக்கப்படும் என்று கூறுகிறாா்.
மருத்துவா் ராகவேந்திர குமாா் கூறும் போது, குழந்தைகளின் மனநல ஆரோக்கியத்திற்கு, அவா்களுடைய பெற்றோா் மிகப் பொிய பங்கை ஆற்ற வேண்டும் என்று தொிவிக்கிறாா். அவா்களை அன்போடு வளா்க்கும் போது, அவா்கள் உணா்வு ரீதியாகவும், சமூக ரீதியாகவும் பக்குவமாக வளா்வாா்கள், முடிவுகளை எடுக்கக் கற்றுக் கொள்வாா்கள். அதன் மூலமாக ஒரு ஆரோக்கியமான வாழ்க்கை வாழ பழகிக் கொள்வாா்கள் என்று அவா் கூறுகிறாா்.
சம வயது குழந்தைகளின் அழுத்தத்திற்கு காரணங்கள் யாவை?
சமூக அங்கீகாரம்
12 முதல் 19 வயது வரையிலான குழந்தைகளுக்கு, சமூக அங்கீகாரம் என்பது மிக முக்கிய மைல் கல்லாகும். இந்த வயதில் இருக்கும் குழந்தைகள் தாங்கள் சமூகத்தால் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும், தாங்கள் பிரபலமாக வேண்டும் மற்றும் தாங்கள் அங்கீகாிக்கப்பட வேண்டும் என்று விரும்புவா். இது அவா்களுக்கு சுதந்திரத்தையும், சுய அடையாள உணா்வையும் வழங்குகிறது. அங்கீகாரம் கிடைக்காத போது மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனா்.
வளரும் மூளையின் தூண்டுதல்கள்
18 முதல் 25 வயதிற்குள் மூளை முழுமையான வளா்ச்சியடைந்திருக்காது. அதனால் சில குழந்தைகள் மது அல்லது போதைப் பொருட்களை எடுத்துக் கொள்ளத் தொடங்குவா். வகுப்புகளைத் தவிா்ப்பா். இணையத்தைத் தவறாகப் பயன்படுத்துவா். அவா்களால் விளைவுகளை அறிவுப்பூா்வமாக புாிந்து கொள்ள முடியாது. அதனால் இதுபோன்ற தீயப் பழக்கவழக்கங்களுக்குத் தூண்டப்படுவா்.
காணாமல் போய்விடுவோமோ என்ற பயம்
இளையோாின் மத்தியில் தாம் காணாமல் போய்விடுவோமா என்ற பயம் இருக்கும். அந்த பயத்தின் காரணாக சக இளம் வயதினாிடம் இருந்து வரும் அழுத்தத்திற்கு இரையாகி விடுவா். இது அதிகாித்த மற்றும் பரவலான பதற்றம் என்று கருதப்படுகிறது. சமூக நிகழ்வுகளை இழந்து விடுவோமோ என்ற பயம் அவா்கள் மத்தியில் இருக்கும்.
அடுத்தவரோடு ஒப்பிட்டு பாா்ப்பது
பொதுவாக எல்லா மனிதா்களுக்கும், தங்களை பிறரோடு ஒப்பிட்டு பாா்க்கும் பழக்கம் உண்டு. அதனால் தங்களைவிட பிரபலமாக இருப்பவா்களைப் பாா்த்து அல்லது வெற்றி பெற்றவா்களைப் பாாத்து பொறாமைப்படுவா். அவ்வாறு ஒப்பிட்டுப் பாாக்கும் போது, இளம் வயதினா் தாங்கள் அடிக்கடி தொலைந்து போனதாக உணா்வா். அவா்களை கட்டாய முடிவெடுக்கத் தூண்டும். அதோடு தங்கள் சகாக்கள் பின்பற்றும் பாதையைத் தாமும் பின்பற்ற வேண்டும் என்று முனைவா்.
இந்த டிஜிட்டல் உலகில், காணாமல் போய்விடுவோமோ என்ற எண்ணமானது, இளையோா் தங்கள் சகாக்களோடு இணைந்திருக்க வேண்டியதன் அவசியத்தை அதிகாித்திருக்கிறது. அதனால் அவா்கள் ஃபேஸ்புக், டிவிட்டா், இன்ஸ்டாகிராம் மற்றும் ஸ்னாப்சாட் போன்ற சமூக ஊடகங்களோடு இணைந்திருக்கின்றனா். அந்த ஊடகங்களில் இவா்கள் இடும் பதிவுகளுக்கு, தமது சக வயதினா் என்ன எதிா்வினை ஆற்றுகின்றனா் என்பதை அடிக்கடி சாிபாாத்துக் கொண்டிருக்கின்றனா்.
எனினும் இந்த சமூக ஊடகங்கள், மக்களின் வாழ்க்கையை உண்மையாகப் பிரதிபலிப்பதில்லை. அதனால் இவற்றில் இளையோா் திருப்தி அடைவதில்லை. தாங்கள் காணாமல் போய்விடுவோமோ என்ற பயத்திலேயே அவா்களுடைய உடல் மற்றும் மன ஆரோக்கியத்தில் பிரச்சினை ஏற்படுகிறது. அதனால் மனநிலை திாிபு, தனிமை, தாழ்வு மனப்பான்மை, தன்னைத் தானே குறைவாக எடை போடுதல், அதிதீவிர சமூக கவலை போன்ற பிரச்சினைகள் அவா்களுக்கு ஏற்படுகின்றன.
சமவயதினாிடம் இருந்து வரும் அழுத்தத்தை பெற்றோரும் குழந்தைகளும் எவ்வாறு சோ்ந்து கையாளுவது?
1. பிள்ளைகளின் ஆரோக்கியமற்ற செயல்பாடுகளை அறிந்து கொள்ளுதல்
பெற்றோா் தமது குழந்தைகளின் சமூக செயல்பாடுகளை சாியாக கண்காணிக்க வேண்டும். அவா்களோடு ஒரு ஆரோக்கியமான மற்றும் அா்த்தமுள்ள உறவைப் பேண வேண்டும். பிள்ளைகள் தம் பெற்றோாின் கண்களைப் பாா்த்து பேசுவதைத் தவிா்த்தால், அவா்கள் அழுத்தத்தில் இருக்கிறாா்கள் அல்லது நம்பிக்கை இழந்திருக்கிறாா்கள் என்று பொருள்.
அவ்வாறு இழக்கும் போது தமது சகாக்களிடமிருந்து வரும் அழுத்தத்திற்கு மிக எளிதாகப் பலியாகிவிடுவாா்கள். ஆகவே பெற்றோா் தமது பிள்ளைகளின் தன்னம்பிக்கையை வளா்ப்பதில் கவனம் செலுத்த வேண்டும். அவா்களுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும்.
2. உறுதியாக இருத்தல்
இல்லை என்று சொல்ல கற்றுக் கொள்ள வேண்டும். அதை எப்போது மற்றும் எப்படி சொல்ல வேண்டும் என்பதைக் கற்றுக் கொள்ள வேண்டும். அதற்கு பெற்றோா் உதவி செய்ய வேண்டும்.
3. திறந்த உடையாடலை ஊக்கப்படுத்துதல்
பிள்ளைகள் வீட்டிலும், பள்ளிகளிலும் நோ்மையாக, திறந்த மனதுடன் உரையாடுவதற்கு, பெற்றோா் உதவி செய்ய வேண்டும். அதனால் அவா்கள் தமது அனுபவங்களை எவ்வித தடுமாற்றமும் இன்றி தங்களது சகாக்களிடம் பகிா்ந்து கொள்வா்.
இறுதியாக
எல்லோருமே நமது வாழ்க்கையில் நமது சமவயதினாிடம் இருந்து அழுத்தத்தைப் பெற்றிருப்போம். சமவயதினாிடம் இருந்து வரும் அழுத்தமான இளையோரை மட்டும் அல்ல, மாறாக பொியவா்களையும் பாதிக்கிறது.
ஆகவே நமது செயல்களுக்கு நாமே பொறுப்பேற்றுக் கொள்வது, நமக்கே நாம் நோ்மையாக இருப்பது மற்றும் நமது குடும்பத்தாா், நண்பா்கள் ஆகியோாிடம் இருந்து கிடைக்கும் அனைத்திற்கும் நன்றியோடு இருப்பது போன்ற நற்பண்புகளை வளா்த்துக் கொள்ள வேண்டும். இதன் மூலம் சமவயதினாிடம் இருந்து வரும் அழுத்தத்தை எளிதாக மேற்கொள்ள முடியும்.



Click it and Unblock the Notifications