Latest Updates
-
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது -
May Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. மே மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
ஐயங்கார் ஸ்டைல் பருப்பு உருண்டை குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, செமையா இருக்கும் -
வெயிலால் கருமையாகியுள்ள சருமத்தை வெள்ளையாக்கணுமா? அப்ப இந்த முலாம் பழ ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
வெயிலின் தாக்கத்தை குறைக்க வாஸ்து செடிகளுக்கு மவுசு: மணி பிளாண்ட், அரேகா பாம் வாங்க மக்கள் ஆர்வம்
குழந்தைங்க தப்பு செஞ்சா.. உடனே தண்டனை கொடுக்காதீங்க... அதுக்கு பதிலா இப்படி செய்யுங்க..
Parenting Tips In Tamil: குழந்தைகளுக்கு நல்ல நடத்தையை கற்றுக் கொடுப்பது மிகவும் இன்றியமையாத விஷயமாகும். எனவே பெற்றோர்கள் எப்பொழுதும் குழந்தைகளுக்கு முன்மாதிரியாக திகழ வேண்டும். நேர்மறையான எண்ணங்களையும், சமூக விதிமுறைகளையும், மதிப்புகளையும் அவர்களுக்கு நாம் வழங்க வேண்டும்.
குழந்தைகளை மரியாதை உடன் நடத்த வேண்டும். அவர்களின் உணர்வுகளையும் புரிந்து கொண்டு வழிநடத்துவது மிகவும் இன்றியமையாதது. குழந்தைகள் எதாவது தவறு செய்தால் அவர்களை தண்டிப்பதே பல பெற்றோர்களின் பழக்கமாக உள்ளது. சில பெற்றோர்களே மென்மையான வழியை கடைபிடிக்கின்றனர்.

ஆனால் உண்மையில் தண்டனை என்பது ஒழுக்கத்தை நோக்கிய வழி கிடையாது. எனவே இனி உங்கள் குழந்தைகள் தவறு செய்தால் தண்டனைக்கு பதிலாக எந்த மாதிரியான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்பதைப் பற்றி இக்கட்டுரையில் நாம் காண்போம்.
தண்டனைக்கு எதிரான ஒழுக்க நடவடிக்கை
குழந்தைகளின் தவறுகளுக்கு தண்டனை என்பது சரியான தீர்வு கிடையாது. நேர்மறையான நடத்தைகள் மூலமாக நாம் ஒழுக்கத்தை கற்பிக்க வேண்டும். குழந்தைகளை சரியான திசையில் வழி நடத்துதல், கவனம் செலுத்துதல் போன்றவற்றில் சரியாக ஈடுபட வேண்டும்.
தண்டனை என்பது எதிர்மறையான விளைவுகளை உண்டாக்குகிறது. எனவே பெற்றோர்களின் நடத்தையில் மென்மை, கற்றல் மற்றும் தனிப்பட்ட வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்தல் போன்ற விஷயங்களில் ஈடுபடலாம்.
பெற்றோர்கள் குழந்தைகளுக்கு தண்டனை கொடுப்பதற்கு பதிலாக நேர்மறையான திசையில் அவர்களை வழிநடத்துவதன் மூலம் அவர்களுக்கும் குழந்தைகளுக்கும் இடையே நீண்ட கால புரிதல் மற்றும் சுய கட்டுப்பாடு போன்றவை உண்டாகிறது. அதே சமயம் நீங்கள் குழந்தைகளுக்கு தண்டனையை அளித்தால் பயம் மற்றும் மனக்கசப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
தண்டனை என்பது குழந்தையை அடித்தல், திட்டுதல், சலுகைகளை குறைத்தல், தள்ளுதல், கட்டுப்பாடுகளை நிர்ணயித்தல் போன்றவை அடங்கும். இந்த வகையான தண்டனைகள் குழந்தைகளை தவறான வழியில் வழிநடத்துமே தவிர குழந்தைகளை ஒருபோதும் நல்வழியில் நடத்தாது.
தண்டனையின் தீய விளைவுகள்
ஜர்னல் பீடியாட்ரிக் டென்டிஸ்ட்ரியில் வெளியிடப்பட்ட ஆய்வில், அதிகாரப்பூர்வமான பெற்றோர்கள் குழந்தைகளை வளர்ப்பதற்கு பதிலாக கீழ்ப்படிதல், ஒழுக்கம், கட்டுப்பாடு போன்றவற்றில் அதிகம் கவனம் செலுத்துகின்றனர். இதனால் அவர்கள் குழந்தைகளை அதிகளவு தண்டிக்கின்றனர். இது குழந்தையின் வளர்ச்சி மற்றும் மன ஆரோக்கியத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
உலக சுகாதார அமைப்பின் கருத்துப்படி, தண்டனையானது குழந்தைகளை வலி, சோகம், பயம், கோபம், அவமானம் மற்றும் குற்ற உணர்ச்சிக்கு தள்ளுகின்றன. இது அவர்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலை உண்டாக்குகிறது. இது குழந்தைகளுக்கு மன அழுத்தம் மற்றும் ஆபத்தை சமாளிக்க உதவும் நரம்பு பாதைகளை பாதிக்கிறது.
உடல் ரீதியாக தண்டிக்கப்பட்ட குழத்தைகள் மன அழுத்தத்திற்கு உள்ளாகின்றனர். அதிக ஹார்மோன் வினைத்திறன், நரம்பு, இதயம், மூளை மற்றும் ஊட்டச்சத்து அமைப்புகள் உட்பட பல உடலியல் செயல்பாட்டில் மாற்றங்களை சந்திக்கின்றனர் என்று உலக சுகாதார அமைப்பு கூறுகிறது.
குழந்தைகளுக்கு தண்டனை கொடுப்பதற்கு பதிலாக என்ன செய்ய வேண்டும்?
குழந்தைகள் ஏதேனும் தவறுகள் செய்தால் அவர்களை மென்மையாக நடத்துவது மிகவும் அவசியம். அதற்கு டாக்டர்கள் சில வழிமுறைகளை கூறுகின்றனர்.
* பெற்றோர்களாகிய நீங்கள் கொஞ்சம் கால அவகாசத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.
* குழந்தைகள் மீதான எதிர்பார்ப்புகளை தெளிவாக அமையுங்கள்.
* குழந்தையின் நல்ல நடத்தைக்கு வெகுமதிகளை வழங்குங்கள்.
* அவர்களுக்கும் உங்களுக்கும் இடையேயான தொடர்பு பலமாக இருக்க வேண்டும்.
* நேர்மறை வலுவூட்டல் அவசியம்.
* அவர்களின் நல்ல நடத்தைக்கு நீங்கள் முன் மாதிரியாக திகழ வேண்டும்.
ஒழுக்கம் என்பது குழந்தைகளுக்கு தெளிவான அறிவுரைகளை வழங்குவதையும், எதிர்மறையான விளைவுகளை புரிந்து கொள்வதையும் வழங்குகிறது. ஒரு தவறான நடத்தைக்கு பிறகு என்ன நடக்கும் என்பது குழந்தைகளுக்கு தெரிய வேண்டும். ஒரு நடத்தைக்கு பிறகு நடக்கும் விஷயங்கள் நேர்மறையாகவும் எதிர்மறையாகவும் இருக்கலாம். எனவே அதைப் புரிந்து கொண்டு குழந்தை ஒரு செயலில் ஈடுபட கற்றுக் கொடுக்க வேண்டும்.
அதே மாதிரி நீங்கள் குழந்தைகள் செய்யும் நல்ல விஷயங்களுக்கு நேர்மறையாக நடந்து கொள்ளுங்கள். அவர்களை பாராட்டுங்கள். இதன் மூலம் குழந்தைகள் அந்த நல்ல விஷயங்களை திரும்ப செய்வார்கள். இதுவே உங்கள் குழந்தைகள் செய்த விஷயங்கள் உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் ஒழுக்க முறைப்படி அதை கற்றுக் கொடுங்கள். குழந்தைகள் அதை திருத்திக் கொண்டு செயல்படுவார்கள். தண்டனைகள் என்றைக்கும் தீர்வாக அமையாது என்று அமெரிக்க நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (CDC) விளக்குகிறது.
அதே மாதிரி ஒவ்வொரு குழந்தையும் வித்தியாசமானவர்கள் என்பதை பெற்றோர்கள் புரிந்து கொள்ள வேண்டும். எனவே குழந்தைகளின் தனிப்பட்ட ஆளுமை மற்றும் தேவைகளுக்கு ஏற்ப அணுகுமுறைகளை மாற்றியமைப்பது அவசியம். அவர்களுக்கு சுய ஒழுக்கம், சிக்கலைத் தீர்க்கும் திறன், மற்றவர்களுக்கு மரியாதை கொடுக்கும் பண்புகள் போன்றவற்றை கற்றுக் கொடுக்க வேண்டும் என்கிறார்கள் மருத்துவர்கள்.



Click it and Unblock the Notifications