Latest Updates
-
சிம்ம ராசிக்கு செல்லும் சுக்கிரன்: ஜூலையில் இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
சாணக்கிய நீதி படி ஒரு நல்ல குடும்பத் தலைவரிடம் இருக்க வேண்டிய 4 குணங்கள் இதுதான் - உங்ககிட்ட எத்தனை இருக்கு? -
1/2 கப் பாசிப்பருப்பு இருந்தா.. இப்படி குழம்பு வையுங்க.. சாதத்துக்கு செமயா இருக்கும்.. -
இந்தியாவிலுள்ள இந்த கிராமத்திற்குள் இந்தியர்களே நுழையக்கூடாதாம் - இது எந்த நாட்டுக்கு சொந்தம் தெரியுமா? -
ஜூன் 22-ல் உருவாகும் திரிகிரக யோகம்: இந்த 3 ராசிக்கு தொழிலில் நல்ல வளர்ச்சியுடன், லாபமும் கிடைக்கும்.. -
பீன்ஸை பட்டாணியுடன் சேர்த்து இந்த மாதிரி பொரியல் பண்ணுங்க - பீன்ஸ் பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க -
World Sickle Cell Day 2026: அரிவாள் செல் நோய் என்றால் என்ன, அதன் அறிகுறிகள் என்ன? - விளக்கும் டாக்டர்! -
செவ்வாய் ரிஷப ராசி செல்வதால் ஆகஸ்ட் மாதம் வரை இந்த 3 ராசிக்காரர்களை ஆபத்துகள் விடாம துரத்தப்போகுதாம் -
ரவா அடையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 19 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம்
கர்ப்ப காலத்தில் ஏற்படும் வாந்தியை தடுக்கக்கூடிய சில எளிய இயற்கை வழிகள்!
பெண்மையின் உச்சகட்டம் தாய்மை என்று சொல்லலாம். அப்படிப்பட்ட தாய்மையை ஒவ்வொரு பெண்களும் அனுபவித்து மகிழ்ச்சி அடைவார்கள். எனினும் தாயாகக் கூடிய சந்தோஷத்தில் அவர்கள் உடலில் எண்ணற்ற மாற்றங்கள் ஹார்மோன்களால் ஏற்படும்.
அந்த வகையில் பேறு காலத்தில் வாந்தி, மசக்கை என்பது ஒரு பெண் கருவுற்ற காலத்தில் ஏற்படக்கூடிய ஒரு சிக்கலான நிகழ்வு எனக் கூறலாம். இந்த வாந்தியின் காரணமாக அவர்களுக்கு எடை இழப்பு ஏற்படுவதோடு மட்டுமல்லாமல் நீர் சத்தும் குறையும்.

மேலும் அதிகமாக வாந்தி எடுப்பதின் மூலம் சில சமயம் இவர்களுக்கு மயக்கம் வரக்கூடிய சூழ்நிலையையும் உருவாக்கும். இத்தனை கஷ்டங்களையும் தாங்கிக் கொண்டு தன்னுள் ஒரு உயிரை வளர்க்கக்கூடிய தன்மை பெண்மைக்கு மட்டுமே உண்டு எனக் கூறலாம்.
எனவே இது போன்ற பிரச்சனைகள் அத்தனைக்கும் ஈடு கொடுத்து ஒரு உயிரை ஈன்றெடுத்து தாய் என்ற அந்தஸ்தை அடைவதில் பெண்கள் மட்டுமல்ல அவர்களைச் சார்ந்தவர்களும் பெருமகிழ்ச்சி அடைகிறார்கள்.
கர்ப்ப காலத்தில் ஏற்படும் வாந்தியை தடுக்க கூடிய இயற்கை வழிகள்
கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு வாந்தி, குமட்டல், மயக்கம் போன்றவை ஏற்படுவது இயற்கையான ஒன்று தான். எனினும் இந்த சமயத்தில் இவர்கள் வாந்தியை நிறுத்த எளிய இயற்கை வழிகள் உள்ளது. அவை என்னென்ன என்பதை பற்றி கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
* பொதுவாக இந்த மசக்கையானது ஐந்து மாதத்திற்குள் சில பெண்களுக்கு நின்றுவிடும். ஆனால் சில பேருக்கு ஐந்து மாதங்கள் ஆனாலும் குழந்தை பேறு ஏற்படும் வரை வாந்தி இருக்கத்தான் செய்யும். எனவே இந்த மசக்கை வாந்தியை சரி செய்ய வீட்டில் இருக்கும் இஞ்சியை சிறுசிறு துண்டுகளாக வெட்டிக்கொண்டு அதை மசக்கை வாந்தி எடுக்கும் பெண்கள் அவர்கள் வாயில் போட்டுக் கொள்வதன் மூலம் எளிதில் வாந்தி நிற்கும். அது மட்டுமல்ல இஞ்சியை சிறு சிறு துண்டுகளாக வெட்டி தேனில் ஊறவைத்து அவற்றை நீங்கள் சாப்பிடுவதின் மூலம் வாந்தி ஏற்படாது.
* எலுமிச்சை பழத்தை சிறிதளவு உப்பு தேய்த்து சிறு சிறு துண்டுகளாக வெட்டி கர்ப்பமான பெண்கள் வாயில் போட்டு சூப்புவதன் மூலம் அவர்களுக்கு வாந்தி மற்றும் குமட்டல் ஏற்படாது.
* இன்னும் கிராமப்புறத்தில் மசக்கை ஏற்படும் பெண்களுக்கு கம்பினை சமைத்து அந்த நீரை பருகக் கொடுப்பார்கள். இதை பருகுவதின் மூலம் அவர்களுக்கு வாந்தி பிரச்சனை, மசக்கை பிரச்சனை சுத்தமாக ஏற்படாது.
* மேலும் துளசிச்சாறு, சிறிதளவு தேன் விட்டு குடிப்பது, ஓமத்தை வறுத்து அதை பொடியாகி சிறிதளவு சாப்பிடுவதின் மூலம் மசக்கை உணர்வே கர்ப்பிணிப் பெண்களுக்கு ஏற்படாது.
* மயிலிறகை தீயில் சுட்டு அதை தேனில் குழைத்து உள்நாக்கில் தேய்த்து விடுவதின் மூலமும் மசக்கை வாந்தி குறைவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள்.
* மேலும் நீங்கள் தண்ணீரை பருகும் போது முழுமையாக ஒரே நேரத்தில் பருகுவதை தவிர்த்து விட்டு இடைவெளி விட்டு பருகுவதின் மூலம் மசக்கை வாந்தி ஏற்படுவதை தடுத்து விடலாம்.
* வைட்டமின் பி6 அதிகம் உள்ள பழங்களை உணவில் சேர்த்துக் கொள்வதின் மூலம் மசக்கை காரணமாக ஏற்படுகின்ற வாந்தி மயக்க தொல்லையிலிருந்து மிக எளிதில் விடுபட முடியும் என்று மருத்துவ நிபுணர்கள் கூறியிருக்கிறார்கள்.
* சோம்பினை வாயில் போட்டு மென்று கொண்டே இருப்பதன் மூலம் உங்களுக்கு வாந்தி உணர்வு ஏற்படாது.
எனவே மேற்கூறிய இந்த குறிப்புக்களை பயன்படுத்தி கர்ப்பிணிப் பெண்கள் அவர்களுக்கு ஏற்படக்கூடிய மசக்கை வாந்தியை இயற்கையான முறையில் தடுத்து விடலாம்.



Click it and Unblock the Notifications