Latest Updates
-
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...!
பெற்றோர்களே! நீங்க செய்யும் இந்த தவறுகளால் உங்க குழந்தை சுயநலவாதியா வளருவாங்கலாம்...!
பல அநியாயங்கள் நிறைந்த இந்த உலகில் இரக்கமுள்ள, மரியாதையுள்ள, சிந்தனையுள்ள குழந்தைகளை வளர்ப்பது எப்படி? என்று பெற்றோர்கள் குழம்பலாம். தவறுகள் உங்களிடமும் உள்ளது
ஒவ்வொரு பெற்றோர்களுக்கும் தங்கள் குழந்தையை நல்லவர்களாகவும் ஒழுக்கமானவர்களாகவும் வளர்க்க வேண்டும் என்றுதான் விரும்புவார்கள். இது அவர்களின் தலையாய கடமை. ஆனால், சில பெற்றோர்கள் தங்கள் கடமையிலிருந்து தவறுகிறார்கள். இது குழந்தைகளின் எதிர்கால வாழ்க்கையை முற்றிலும் பாதிக்கலாம். உங்கள் குழந்தைகளுக்கு நல்ல பழக்கவழக்கங்களை சொல்லிக்கொடுப்பது மிக முக்கியம். உங்கள் குழந்தைகளை வளர்ப்பதில் அதிகம் கவனம் செலுத்துவதும், அதிகமாக ஈடுபாடு காட்டுவதும் அவர்களை நல்லவர்களாக உணர வைக்கும். ஆனால், சில பண்புகள் குழந்தைகளை அதிக சுயநலம் கொண்டவர்களாகவும், பச்சாதாபம் இல்லாதவர்களாகவும், வலுவான பணி நெறிமுறை இல்லாதவர்களாகவும், மரியாதைக்குரிய நடத்தையில்லாமலும் வளர்வதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

பல அநியாயங்கள் நிறைந்த இந்த உலகில் இரக்கமுள்ள, மரியாதையுள்ள, சிந்தனையுள்ள குழந்தைகளை வளர்ப்பது எப்படி? என்று பெற்றோர்கள் குழம்பலாம். தவறுகள் உங்களிடமும் உள்ளது. உங்கள் குழந்தைகளை இளமைப் பருவத்தில் அதிக உரிமையுள்ளவர்களாக மாற்றக்கூடிய சில மோசமான தவறுகளை பெற்றோர்களாகிய நீங்கள் செய்கிறீர்கள். அவை என்னென்ன தவறுகள் என்று இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளலாம்.

அனைத்து விருப்பங்களுக்கும் ஆம் என்று சொல்வது
உங்கள் குழந்தைக்கு மிகவும் பாசம் காட்டி வளர்க்க நீங்கள் விரும்பினால், அவர்கள் வசதியாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க அவர்களின் ஆசைகள் அனைத்தையும் நிறைவேற்ற நீங்கள் முயற்சி செய்வீர்கள். இதனால், உங்கள் குழந்தைகளிடம் 'இல்லை' அல்லது 'வேண்டாம்' என்று கூறும் நிராகரிப்பை ஏற்றுக்கொள்ளும் திறனை நீங்கள் இழக்க நேரிடும். உங்கள் குழந்தையின் எல்லா விருப்பங்களுக்கும் நீங்கள் ஆம் சொல்ல வேண்டிய அவசியமில்லை. அவர்களின் விருப்பங்களை பொறுத்து அதை நிறைவேற்ற முடியும் அல்லது முடியாது எனக் கூறுவது பெற்றோர்களாகிய உங்கள் கடமை. ஆனால், உங்கள் குழந்தைக்கு இதை கற்பிக்கவில்லை என்றால், அவர்கள் சுயநலமாக வளரலாம்.

மரியாதையை கற்பிக்க வேண்டும்
பெற்றோராக இருப்பது என்பது ஓர் குழந்தையை பெற்றெடுப்பதை மட்டும் குறிக்காது. அவர்களின் வளர்ப்பை பற்றியும், ஆரோக்கியம் மற்றும் எதிர்காலம் குறித்து நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். உண்மையில், இது கடின உழைப்பு மற்றும் கவனிப்பு ஆகியவற்றின் நீண்ட பயணத்தின் தொடக்க புள்ளியாகும். உங்கள் குழந்தை மற்றவர்களை மதிக்கும் மற்றும் அக்கறையுள்ள ஒருவராக வளர்க்க விரும்பினால், அவர்களின் சிறுவயதிலிருந்தே மதிப்பு மற்றும் மரியாதையை அவர்களுக்கு நீங்கள் கற்பிக்க வேண்டும். நீங்களும் அவர்களிடம் மரியாதையாக நடந்துகொள்ள வேண்டும்.

வெளி உலகத்தைப் புரிந்துகொள்ள உதவ வேண்டும்
உங்கள் குழந்தை வளரும்போது, உங்கள் குடும்பம் மற்றும் வீட்டிற்கு வெளியே உள்ள உலகத்தை அவர் காண இருக்கிறார். அவர்களுக்கு ஒரு நல்ல அறிவுரை மற்றும் பழக்கவழக்கங்களை கற்றுக்கொடுப்பதன் மூலம், இந்த உலகத்துடன் எவ்வாறு தொடர்புகொள்வது என்பதை கற்றுக்கொடுக்க முடியும். இதை புரிந்துகொள்வதன் மூலம், அவர்கள் புத்திசாலியாகவும் திறந்த மனதுடையவர்களாகவும் வளர உதவலாம். உங்கள் பிள்ளை செய்திதாள்களை படிக்கிறார், வீட்டிற்கு வெளியே உள்ள உலகத்தை பார்க்கிறார் அல்லது சமூக ஊடகங்களில் இயங்குவது பற்றி நீங்கள் உங்கள் குழந்தையுடன் உரையாடுவது முக்கியம்.

நன்றியைக் கற்பிக்கவில்லை
நீங்கள் எப்போதாவது தாழ்வாக உணர்ந்தால், உங்கள் ஆசீர்வாதங்களை எண்ணிப் பாருங்கள். ஒரு நிமிடம், மன அழுத்தத்தை விட்டு வெளியே வந்து, உங்கள் வாழ்க்கையில் நீங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கும் விஷயங்களைப் பட்டியலிடுங்கள். நீங்கள் அனுபவித்த அற்புதமான விஷயங்கள், நபர்கள் மற்றும் அனுபவங்கள், தற்போது நீங்கள் எதிர்கொள்ளும் தற்காலிக பிரச்சனைகளை விட அதிகமாக இருப்பதை நீங்கள் கவனிப்பீர்கள். அதனால், உங்கள் பிள்ளைக்கு நன்றியறிதலுடனும் நன்றியுணர்வுடனும் இருப்பது எப்படி என்பதை கற்றுக்கொடுக்க வேண்டும். பெரியவர்களின் ஆசீர்வாதங்கள் அனைத்தையும் உங்கள் பிள்ளை பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை என்றால், அவர்கள் குழப்பமான மற்றும் மகிழ்ச்சியற்ற பெரியவர்களாக வளரக்கூடும்.

தன்னார்வப் பணிக்கு அறிமுகப்படுத்துங்கள்
கொடுக்கல் வாங்கல், லாபம், நஷ்டம் என்று பல உறவுகள் சுழலும் உலகில், சேவை செய்பவர்கள் அல்லது தன்னார்வத் தொண்டு செய்பவர்கள் அல்லது தேவைப்படுபவர்களுக்கு உதவுபவர்கள், உலகிற்கு உண்மையிலேயே தேவைப்படும் நபர்கள். உங்கள் பிள்ளை இரக்கமுள்ளவராகவும், மற்றவர்களின் செயல்களின் மூலம் உண்மையாக அக்கறை காட்டவும் கற்றுக்கொடுங்கள். அவர்கள் நல்ல இதயம் கொண்ட நபர்களாக வளர்வார்கள்.



Click it and Unblock the Notifications











