பள்ளிகள் மீணடும் திறக்கும் இந்த சூழலில் குழந்தைகளை பள்ளிகளில் எப்படி கவனமாக பாத்துக்கனும் தெரியுமா?

கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் சற்று குறைந்துள்ளதால் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளனர். மூன்றாவது அலை குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டபோதிலும் மக்கள் அதை குறித்து கவலைப்பட்டதாக தெரிவதில்லை.

கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் சற்று குறைந்துள்ளதால் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளனர். மூன்றாவது அலை குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டபோதிலும் மக்கள் அதை குறித்து கவலைப்பட்டதாக தெரிவதில்லை. அனைத்திற்கும் மேலாக செப்டம்பர் 1 முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட உள்ளதால் மக்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டிய நிர்பந்தத்தில் உள்ளனர்.

Tips to Keep Children Safe After School Reopen

குழந்தைகள் வைத்திருக்கும் பெற்றோர்கள் இனி மிகவும் எச்சரிக்கையாக தங்கள் குழந்தைகளை பாதுகாக்க வேண்டும். பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு பெற்றோர் செய்ய வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
எளிதில் பாதிக்கப்படக் கூடியவர்கள்

எளிதில் பாதிக்கப்படக் கூடியவர்கள்

18 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பாதிக்கப்படக்கூடிய மற்றும் தடுப்பூசி போடப்படாத குழுக்களில் உள்ளனர். பெரியவர்களைப் போலவே குழந்தைகளும் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுகின்றனர். குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு தொற்று மற்றும் பரவுதல் ஒத்திருக்கிறது. குழந்தைகளுக்கான தடுப்பூசிகள் இன்னும் கண்டறியப்படாத நிலையில் அவர்கள் எளிதில் கொரோனா தொற்றுக்கு ஆளாக்கக்கூடிய ஆபத்தில் உள்ளனர்.

அறிகுறியற்றவர்கள்

அறிகுறியற்றவர்கள்

பெரும்பாலான குழந்தைகள் அறிகுறியற்றவர்களாக இருந்தாலும் அல்லது லேசான தொற்றுநோயாக இருந்தாலும், அவர்கள் தொற்றுநோயை மற்றவர்களுக்கு பரப்பலாம். குழந்தைகள் மூலம் மற்றவர்களுக்கும் நோய் பரவ அதிக வாய்ப்புள்ளது.

குழந்தைகளை பாதுகாப்பது எப்படி?

குழந்தைகளை பாதுகாப்பது எப்படி?

உங்கள் குழந்தைகள் மீண்டும் பள்ளிக்குச் செல்லத் தொடங்கும் போது கோவிட் -19 இலிருந்து உங்கள் குழந்தைகளைப் பாதுகாப்பதற்கான எளிய குறிப்புகள் உள்ளன. இவை உங்கள் குழந்தைகளை மட்டுமின்றி, உங்களையும் பாதுகாக்கும். குழந்தைகளை எப்படி பாதுகாக்கலாம் என்று மேற்கொண்டு பார்க்கலாம்.

 உணவைப் பகிர்ந்து கொள்ள அனுமதிக்காதீர்கள்

உணவைப் பகிர்ந்து கொள்ள அனுமதிக்காதீர்கள்

பகிர்ந்துண்ணும் பழக்கம் குழந்தைகளுக்கு மிகவும் அவசியமான ஒன்றாகும். ஆனால் கொரோனா பரவும் இந்த சூழலில் குழந்தைகள் எதையும் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பதே நல்லது, இல்லையெனில் அவர்கள் கொரோனாவை பகிர்ந்து கொள்ள நேரிடும். எனவே உணவு, தண்ணீர் பாட்டில்கள் மற்றும் ஸ்னாக்ஸ் போன்றவற்றை பகிரக்கூடாது என்று குழந்தைகளுக்கு அறிவுறுத்துங்கள்.

கையை கழுவ வேண்டும்

கையை கழுவ வேண்டும்

ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கும் ஒருமுறை 20 நொடிகளுக்கு கையை சோப்பு போட்டு நன்கு கழுவுமாறு குழந்தைகளிடம் கூறுங்கள். அவர்கள் அதை செய்கிறார்களா என்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

மாஸ்க்

மாஸ்க்

முகமூடி அணிய வேண்டியது பெரியவர்களுக்கு மட்டுமல்ல குழந்தைகளுக்கும் மிகவும் அவசியமானதாகும். குழந்தைகள் முகமூடி அணிவது மட்டுமில்லாமல் அது அவர்களுக்கு பொருத்தப்பட்டுள்ளதா என்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

சானிடைசர்

சானிடைசர்

பள்ளிக்கு, டியூஷனுக்கு அல்லது விளையாடச் சென்றாலும், சானிடைசரை எடுத்துச் செல்ல மறக்காதீர்கள். வெளியே செல்லும் போது, ஒவ்வொரு 20-30 நிமிடங்களுக்கும் பயன்படுத்தவும்.

தடுப்பூசி

தடுப்பூசி

குழந்தைகளுக்கு இன்னும் தடுப்பூசி கிடைக்காத நிலையில், 12 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு ZyCOVID தடுப்பூசி செப்டம்பர் மாதத்தில் இருந்து கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கான தடுப்பூசி வெளியிடப்பட்டவுடன் உங்கள் குழந்தைகளுக்கு தடுப்பூசி போட தயங்காதீர்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Desktop Bottom Promotion