Just In
- 39 min ago
சாணக்கிய நீதியின் படி இந்த வழிகளில் பணம் சம்பாதிப்பவர்கள் வாழும்போதே நரகத்தை அனுபவிப்பார்களாம்...!
- 1 hr ago
இந்த உணவுகளை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடக்கூடாதாம்... மீறி சாப்பிட்டா புற்றுநோய் வர வாய்பிருக்காம்!
- 2 hrs ago
பெண்களின் குறைந்த பாலியல் ஆசையை உடனடியாக அதிகரிக்க இந்த 5 உணவுகளில் ஒன்று போதுமாம்...!
- 3 hrs ago
அடிக்கடி சிறுநீர் கழிச்சிகிட்டே இருக்கீங்களா? அப்ப உங்களுக்கு இந்த ஆபத்தான நோய் இருக்க வாய்ப்பிருக்காம்!
Don't Miss
- Technology
ஜியோவுடன் இணைந்து திருப்பதி தேவஸ்தானம் அறிமுகம் செய்த புதிய ஆப்.! எதற்குத் தெரியுமா?
- Finance
கூகுள் ஊழியரின் கண்ணீர்..பிரசவ அறை,4கை குழந்தை, தாய் மரணம்,இண்டர்வியூவ்-க்கு மத்தியில் பணிநீக்கம்..!
- News
தமிழ்நாட்டிற்கு பதில் தமிழ்நாய்டு.. மத்திய அரசு இணையதளத்தில் எழுத்து பிழை.. பாமக ராமதாஸ் கண்டனம்
- Sports
என்ன தெரிகிறது அங்கு??.. போட்டியின் போது அம்பயர் எராஸ்மஸ் செய்த காரியம்.. இணையத்தில் சிரிப்பலை!
- Movies
காலில் கட்டுடன் குஷ்பூ... என்னாச்சு என பதறிய ரசிகர்கள்... திரையுலகில் அடுத்தடுத்து அதிர்ச்சி
- Automobiles
ஷோரூம்களுக்கு வர தொடங்கிய புதிய ஹூண்டாய் ஐ10... விலை இவ்ளோதானா! மாருதி, டாடா கார்களின் கதையை முடிக்க போகுது!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
- Travel
தாஜ்மஹாலில் நடைபெறும் 10 நாள் வண்ணமயமான திருவிழாவில் நீங்கள் கலந்துக்கொள்ள ஒரு அரிய வாய்ப்பு!
எப்ப பார்த்தாலும் உங்க குழந்தைகிட்ட கத்திக்கிட்டே இருக்கீங்களா? அதுனால என்ன நடக்கும் தெரியுமா?
ஒவ்வொரு பெற்றோருக்கும் தங்கள் குழந்தைகள் நல்ல ஒழுக்கமான குழந்தைகளாக இருக்க வேண்டும் வளர வேண்டும் என்று ஆசை. அவ்வாறு வளர்ப்பது என்பது பெற்றோர்களுக்கு சவாலான கடமை பணி. குழந்தைகளை நெறிப்படுத்துதல், அவர்களை சிறந்த மனிதர்களாக உருவாக்குதல் மற்றும் பல ஆண்டுகளாக அவர்களை வழிநடத்துதல் ஆகியவை மிகப்பெரிய வேலையாக இருக்கும். நீங்கள் உங்கள் பிள்ளையை நினைத்து பெருமிதம் கொள்ளும் ஒரு காலம் வரும். ஆனால் நீங்கள் மிகவும் பாதிக்கப்படக்கூடியதாக உணரும் நேரங்களும் இருக்கும். மேலும் உங்கள் குழந்தைகளுடன் நீங்கள் மிகவும் வருத்தப்படும் நிலைமையும் வரலாம். அப்போதுதான் பெற்றோர்கள் குழந்தைகளை 'கத்துவது' தவிர்க்க முடியாததாகிறது.
கத்துவது என்பது ஒழுக்கத்தின் ஒரு பாரம்பரிய வழிமுறையாகும். இது பயனுள்ளதாக இருக்கும் என்று கருதப்படுகிறது. ஆனால், இது உண்மையில் வேலை செய்யாது. நீங்கள் ஒரு குறுகிய கால மாற்றத்தைத் தேடுகிறீர்களானால், அது அப்போதைக்கு மட்டுமான தீர்வாக இருக்கலாம். ஆனால் நீண்ட காலத்திற்கு அது சரியாக இருக்காது. குழந்தைகளைக் கத்துவதால் எந்தப் பயனும் இல்லை என்பதற்கான சில காரணங்களும் நீங்கள் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்றும் இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.

பயம் காரணமாக இருக்கலாம்
கத்தி திட்டுவது வேலை செய்யும் என்று நீங்கள் நினைத்தால், மீண்டும் சிந்தியுங்கள். உங்கள் பெற்றோர் உங்களைக் கத்தி திட்டியது நினைவிருக்கிறதா? நிச்சயமாக, நீங்கள் சிறிது நேரம் உங்கள் வழிகளை மாற்றிக்கொண்டீருப்பீர்கள். ஆனால் அது உங்களுக்குள் ஏற்பட்ட பயமா அல்லது உண்மையான மாற்றமா? என்று யோசித்து இருக்கிறீர்களா? ஆம், பெரும்பாலும் அது பயத்தின் காரணமாகத்தான் இருக்கும். பயம் அந்த நேரத்திற்கு மட்டுமே இருக்கும்.

குழந்தையின் நடத்தையை சரிசெய்யாது
நீங்கள் குழந்தைகளைக் கத்தி திட்டினால், அது மிகக் குறுகிய கால விளைவை மட்டுமே ஏற்படுத்தும். அவர்கள் பார்ப்பது என்னவென்றால், 'நீங்கள் கோபமாக இருக்கிறீர்கள்' மற்றும் 'அவர்களின் அணுகுமுறைக்கு' எதிராக, அதற்கேற்ப, தற்போதைக்கு அவர்களின் நடத்தையை மாற்றிக் கொள்வார்கள். இது அவர்களுக்கு சரியான நடத்தையாக இருக்காது. பின்விளைவுகளை நீங்கள் பார்க்கத் தவறினால், அவர்கள் தங்கள் பழைய வழிகளுக்குச் செல்ல வாய்ப்புள்ளது மற்றும் அவர்களின் செயல்களில் மிகவும் தைரியமாக இருக்கலாம். நீங்கள் நீண்ட காலத்திற்கு அவர்களின் நடத்தையை மாற்ற விரும்பினால், அவர்களிடம் நேர்மறையான பழக்கத்தை வளர்க்க விரும்பினால், கத்துவதை விட்டுவிடுங்கள்.

பயத்தையும் பதட்டத்தையும் தூண்டுகிறது
நியூயார்க் டைம்ஸ் அறிக்கையின்படி, 2014 ஆம் ஆண்டு தி ஜர்னல் ஆஃப் சைல்ட் டெவலப்மென்ட்டில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், குழந்தைகளுக்கு உடல் ரீதியான தண்டனையை தருவது போன்றவை மோசமான விளைவுகளுக்கு வழிவகுக்கிறது. அதாவது பதட்டம், மன அழுத்தம் மற்றும் மனச்சோர்வு மற்றும் நடத்தை சிக்கல்களின் அதிகரிப்பு ஆகியவை அதிகரிக்கும். குழந்தைகளை கத்துவது என்றால்? சத்தமாக கூச்சலிடுவது. இது உங்களை அதிக அதிகாரம் மிக்கவராகவும், கட்டுப்பாட்டுடன் இருக்கவும் செய்ய வேண்டும் என்று காட்டுக்கிறது. நீங்கள் ஓரளவு அதிகாரத்தைப் பெறும்போது, உங்கள் குழந்தை மிகவும் செயலற்றதாகவும் கவலையுடனும் இருக்கும் அபாயத்தையும் நீங்கள் பெறுவீர்கள்.

மோசமான தகவல் தொடர்புத் திறன்
பெற்றோர்கள் கத்துவதை ஒரு தகவல்தொடர்பு வடிவமாகவும் நாம் பார்க்கலாம். ஆனால், நிச்சயமாக இது பெற்றோர்-குழந்தை உறவுக்கு நல்லதல்ல. ஒரு புள்ளியைக் காட்டுவதில் நீங்கள் வெற்றிகரமாக இருக்கலாம். ஆனால் கத்துவதன் மூலம், நீங்கள் ஒரு தவறான உதாரணத்தை மட்டுமே உங்கள் குழந்தைக்கு அமைக்கிறீர்கள். உங்களுக்குத் தெரிந்தபடி, தகவல்தொடர்பு என்பது இருவழி செயல்முறையாகும், அங்கு நீங்கள் ஒரு பேச்சாளரைப் போலவே நல்ல கேட்பவராகவும் இருக்க வேண்டும். உங்கள் பிள்ளையை கத்தி அடக்குவதை விட, உங்கள் பிள்ளைக்கு ஒரு கருத்தை தெரிவிக்கவும், அதை வெளிப்படுத்தவும் நீங்கள் அனுமதிக்க வேண்டும்.

குழந்தைகளிடமிருந்து உங்களைத் தூர விலக்கிவிடும்
கத்துவது எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? அது உங்கள் குழந்தையுடனான உங்கள் உறவுக்கு தீங்கு விளைவிக்கும். இது பயம், பதட்டம் மற்றும் நம்பகத்தன்மையற்ற உணர்வைத் தூண்டுவதால், நீங்கள் இந்த ஒழுங்குமுறை முறையைத் தொடரக்கூடாது. அப்படி தொடர்ந்தால், உங்கள் குழந்தை உங்களிடமிருந்து தங்களைத் தூர விலக்கிவைக்கலாம்.

கத்தாமல் எப்படி ஒழுங்குபடுத்துவது?
குழந்தைகளை எச்சரிப்பது பரவாயில்லை. ஆனால், அதற்காக கத்துவது தவறு. உங்கள் குழந்தை மிகவும் நல்ல நடத்தையுடனும் மற்றும் ஒழுங்காகவும் இருக்க வேண்டும் என நீங்கள் விரும்பினால், அவர்களை சரியான வழியில் அணுக வேண்டும். அவர்கள் ஏன் செயல்படுகிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். சில வெளிப்புறப் பிரச்சினைகளால் அவர்கள் எதிர்மறையான அணுகுமுறையாக இருந்தால், அவர்களைக் கத்துவதையோ அல்லது தண்டிப்பதையோ விட அதைத் தீர்க்க அவர்களுக்கு உதவுங்கள்.

இறுதிக்குறிப்பு
பெற்றோர் மற்றும் குழந்தைகளுடான உறவில் ஆரோக்கியமான தொடர்பு அவசியம். இது எப்போதும் உதவியாக இருக்கும். அங்கு நீங்கள் உங்கள் பிள்ளையின் கருத்தைக் கேட்டு அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்கலாம். மேலும், நீங்களும் கருத்துக்களை தெரிவிக்கலாம். விதிகள் மற்றும் எல்லைகளை ஆரம்பத்தில் அமைக்கலாம், இதனால் எது சரி எது தவறு என்பதை உங்கள் குழந்தைகள் அறிவார்கள்.