Latest Updates
-
சனிபகவானின் நட்சத்திர மாற்றத்தால் இந்த 3 ராசிக்காரர்களை துரதிர்ஷ்டம் விடாம துரத்தப்போகுதாம் - ஜாக்கிரதை -
2 குடைமிளகாயும், 2 வெங்காயமும் இருந்தா.. 10 நிமிஷத்துல இந்த கிரேவியை செய்யுங்க.. சப்பாத்திக்கு அள்ளும்.. -
தேங்காய் சட்னியை ஒருதடவை கேரளா ஸ்டைலில் இந்த மாதிரி அரைச்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
ஜூன் 8-10 கனமழை எச்சரிக்கை! உங்கள் திருமணத்தை மழையிலிருந்து காப்பாற்ற இந்த 5 டிப்ஸ் போதும்! -
பழங்களின் ராணி என்று அழைக்கப்படும் அந்த பழம் எது தெரியுமா? நீங்க இந்த பழத்தை சாப்பிட்டு இருக்கீங்களா? -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரிஞ்சதுன்னு சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கன்னு சொல்றோம்.. -
ஜூன் 8, 9 திருமணமா? மழையால் உங்கள் கனவுத் திருமணம் பாழாகாமல் இருக்க, இந்த மாற்றங்களை உடனே செய்யுங்கள்! -
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது? -
சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 1 மாதம் 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா?
உங்கள் குழந்தைக்கு பால் அழற்சியை உண்டாக்குகிறது என்பதை கண்டறிவது எப்படி?
சில குழந்தைகளுக்கு பாலில் இருக்கும் லாக்டோ தன்மையால் அழற்சி ஏற்படும். இந்த அழற்சியை வெளிக்காட்டும் வகையில் குழந்தைகளின் உடலும் சில அறிகுறிகளை காட்டும்.
உணவு அழற்சி என்பது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உண்டாகிறது. இந்த உணவு அழற்சியை அவ்வளவு சீக்கிரம் கண்டறிவதும் முடியாது. சிலருக்கு முட்டை, கத்தரிக்காய் இப்படி எதாவது சாப்பிட்டால் உடல் அழற்சியை வெளிக்காட்ட ஆரம்பித்து விடும். அப்படித்தான் குழந்தைகளுக்கு ஏற்படும் பால் அழற்சியும்.

சில குழந்தைகளுக்கு பாலில் இருக்கும் லாக்டோ தன்மையால் அழற்சி ஏற்படும். இந்த அழற்சியை வெளிக்காட்டும் வகையில் குழந்தைகளின் உடலும் சில அறிகுறிகளை காட்டும். ஆனால் தாய்மார்கள் இதை கவனிக்காமல் மேலும் மேலும் பால் பொருட்களை சேர்ப்பதுண்டு. இதனால் அழற்சி மிகவும் மோசமாக வாய்ப்புள்ளது. எனவே உங்க குழந்தைக்கு பால் ஒவ்வாமை எப்படி ஏற்பட்டது என்று கவனிப்பது நல்லது.
பெரும்பாலான குழந்தைகளுக்கு மாட்டுப் பால் ஒத்து வருவதில்லை என்கிறார்கள் குழந்தைகள் நல மருத்துவர்கள். அதிலுள்ள புரதங்களால் குழந்தைகளுக்கு அழற்சி ஏற்படுகிறது. எனவே ஒரு பெற்றோராக குழந்தைகளுக்கு ஏற்படும் பால் ஒவ்வாமையை எப்படி கண்டறியலாம், வாங்க தெரிஞ்சுக்கலாம்.

பால் அழற்சி ஏற்பட காரணம் என்ன?
பால் மற்றும் பால் பொருட்களில் காணப்படும் சிலவகை புரதங்களால் பால் ஒவ்வாமை ஏற்படுகிறது. இந்த ஒவ்வாமை உள்ள குழந்தைகளுக்கு நீங்கள் மறுபடியும் மறுபடியும் பால் கொடுக்கும் போது தீங்கு ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் இந்த புரதத்தை நடுநிலையாக்க உருவாக்கப்படும் இம்யூனோகுளோபூலின் ஈ எனப்படும் ஆன்டிபாடிகளை உருவாக்கும் அபாயம் ஏற்படுகிறது. ஒவ்வொரு முறையும் பாலை குடித்த பிறகு வெளிப்படும் புரதத்தை கண்டு நமது நோயெதிப்பு மண்டலம் ஹிஸ்டமைன் என்ற வேதிப்பொருளை வெளியிடுகின்றன. இந்த வேதிப்பொருள் நமக்கு ஒவ்வாமையை ஏற்படுத்துகிறது.

குழந்தைகளே அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்
குழந்தைகளின் செரிமான அமைப்பு பலவீனமாக இருப்பதால் பெரியவர்களை விட குழந்தைகளுக்கு இந்த ஒவ்வாமை அதிகம் உண்டாகிறது. பாலில் உள்ள லாக்டோஸ் சிறுகுடலை அடையும் போது, லாக்டேஸ் நொதி அங்கிருந்து குளுக்கோஸ் மற்றும் கேலக்டோஸாக உடைகிறது. இதனால் பால் எளிதில் சீரணமாகுவதில்லை. இந்த லாக்டோஸ் இயற்கையாகவே பாலில் காணப்படும் சர்க்கரை. இப்பொழுது பால் சரிவர சீரணிக்காமல் போவதால் இந்த லாக்டோஸ் சேர்ப்பு உடம்பில் ஒவ்வாமையை உண்டு பண்ணுகிறது.

பால் அழற்சிக்கான அறிகுறிகள்
குழந்தைகளுக்கு இருக்கும் பால் அழற்சியை உடனே கண்டறிய இயலாது. அறிகுறிகள் மெது மெதுவாகத்தான் தெரிய ஆரம்பிக்கும். பால் ஒவ்வாமை இருப்பவர்களுக்கு பல மணி நேரம் அல்லது பல நாட்களுக்கு பிறகு தான் அறிகுறிகள் தெரியும். குறிப்பாக பால் ஒவ்வாமை அறிகுறிகள் குழந்தைகள் மற்றும் பிறந்த குழந்தைகளுக்கு அதிகமாக தென்படுகிறது.
* சிறுநீர் அடர்ந்த மஞ்சள் நிறத்தில் வெளியேறும், சளி மற்றும் இரத்தத்துடன் மலம் வெளியேறும்.
* வயிற்று வலி உண்டாகும்
* சிலருக்கு தோலில் ரேஸஸ் (சரும வடுக்கள்) ஏற்படும்.
* வயிற்று போக்கு மற்றும் இருமல் உண்டாகும்
* கண்களில் கண்ணீர் வடிதல், மூக்கு ஒழுகுதல் இவைகளும் பால் அழற்சியின் அறிகுறிகள்.
* சில அறிகுறிகள் கண் கூடாக தென்படும். குமட்டல், வாந்தி, பதட்டம், உதடுகளுக்கு அருகில் அரிப்பு மற்றும் உதடுகள் மற்றும் தொண்டை வீக்கம் போன்ற அறிகுறிகள் தென்பட ஆரம்பிக்கும்.

அனாபிலாக்டிக் (Anaphylactic)
சில குழந்தைகளுக்கு பால் ஒவ்வாமை காரணமாக அனாபிலாக்டிக் அதிர்ச்சியும் ஏற்படுகிறது. இது குழந்தையின் உதடுகள், தொண்டை மற்றும் வாயில் வீக்கத்தை ஏற்படுத்தும். அனாபிலாக்டிக்கால் இரத்த இழப்பு, சுவாசிப்பதில் சிரமம் ஏற்படலாம். உடனே இதற்கு சிகிச்சை அளிக்கா விட்டால் பெரும் ஆபத்தில் முடிய வாய்ப்புள்ளது. எனவே உங்க குழந்தைகளுக்கு பால் அழற்சி ஏற்பட்டால் உடனே மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுங்கள்.

தடுக்கும் முறைகள்
* உங்க குழந்தைகளுக்கு பால் மற்றும் பால் பொருட்களால் அழற்சி ஏற்பட்டால் உடனே பால் உணவுகள் கொடுப்பதை நிறுத்துங்கள். மேலும் பால் சேர்க்கப்பட்ட எந்த பொருட்களையும் கொடுக்காதீர்கள்.
* முதலில் இந்த அழற்சி குறித்து உங்க குழந்தைகள் நல மருத்துவரிடம் ஆலோசனை செய்யுங்கள்.
* லாக்டோஸ் இல்லாத பாலை கொடுங்கள். மாட்டுப் பால் இல்லாமல் சோயா பாலைக் கூட உங்க குழந்தைக்கு கொடுக்க முயலலாம்.



Click it and Unblock the Notifications