Latest Updates
-
ஐயங்கார் ஸ்டைல் பொரிச்ச ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
வாடகைக்கு மனைவி கொடுக்கும் வினோத நாடு? இதற்கு எவ்வளவு கட்டணம் வாங்குறாங்க தெரியுமா? -
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க...
குழந்தைகளின் தசைகளைத் தாக்கும் புற்றுநோய் பற்றி கேள்விபட்டதுண்டா? அதன் அறிகுறிகள் என்ன?
இதுவரை உலகளவில் 100-க்கும் அதிகமான புற்றுநோய்கள் கண்டறியப்பட்டு உள்ளன. அதில் ஒரு வகை தான் இந்த ராபடோமியோசர்கோமா புற்றுநோய் என்பது. இது தசை செல்களின் புற்றுநோய் என்றும் அழைக்கின்றனர்.
புற்றுநோய் என்ற வார்த்தையே மிகக் கொடுமையானது எனலாம். அதிலும் குழந்தைகளுக்கு ஏற்படும் புற்றுநோய் மிகவும் ஆபத்தானதாக உள்ளது. இதுவரை உலகளவில் 100-க்கும் அதிகமான புற்றுநோய்கள் கண்டறியப்பட்டு உள்ளன. அதில் ஒரு வகை தான் இந்த ராபடோமியோசர்கோமா புற்றுநோய் என்பது. இது தசை செல்களின் புற்றுநோய் என்றும் அழைக்கின்றனர்.

இந்த புற்றுநோய் பொதுவாக குழந்தைகளை அதிகளவில் தாக்க கூடியதாக உள்ளது என்கிறார்கள் மருத்துவர்கள். எனவே தான் இது குறித்து மக்கள் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்று உலகெங்கும் உள்ள சுகாதார நிறுவனங்கள் கேட்டுக் கொண்டு வருகிறார்கள். ஆனால் இந்த புற்றுநோயின் பேரைக் கூட மக்கள் கேள்வி பட்டிருக்க மாட்டார்கள். ஒரு புற்றுநோயை பற்றிய விழிப்புணர்வு தேவை என்றால் அதைப் பற்றிய முழு விவரங்களும் மக்களுக்கு தெரிந்திருக்க வேண்டியது அவசியம்.
அந்த புற்றுநோயின் அறிகுறிகள், சிகிச்சைகள் போன்றவற்றை அவர்கள் அறிந்து வைத்திருக்க வேண்டும். அப்பொழுது தான் அறிகுறிகளின் ஆரம்ப கட்டத்திலேயே அதற்கான சிகிச்சையை நாம் பெற முடியும். இதன் மூலம் புற்றுநோயை நாம் குணமாக்க வழியும் உண்டு என்கிறார்கள் மருத்துவர்கள். அந்த வகையில் குழந்தைகளுக்கு ஏற்படும் இந்த ராபடோமியோசர்கோமா புற்றுநோய் பற்றி அறிந்து கொள்வோம்.

ராபடோமியோசர்கோமா புற்றுநோய் என்றால் என்ன?
இது ஒரு வீரியமிக்க புற்றுநோய் ஆகும். இந்த புற்றுநோயால் நமது தசை செல்களில் கட்டிகள் உருவாகின்றன. அல்லது தசை செல்களை படிப்படியாக வீங்கச் செய்கின்றன. குறிப்பாக 19 வயதிற்குட்பட்ட குழந்தைகளையே இந்த புற்றுநோய் தாக்குகிறது. ரப்டோமியோசர்கோமா தசை திசுக்களில் உள்ள உயிரணுக்களில் உருவாகிறது. இது ஒரு வகை சர்கோமா ஆகும், இது தசைகளில் தொடங்கி எலும்புகளுடன் தொடர்புடையது. இது குழந்தைகளுக்கு ஏற்படும் 3 வது புற்றுநோயாக இருக்கின்றன. இவை நம் உடலின் பாகங்களை நகர்த்த உதவும் தசைகளை பாதிக்கின்றன.

ராபடோமியோசர்கோமா புற்றுநோய் கட்டிகள் உருவாகக் கூடிய இடங்கள்:
* தலை மற்றும் கழுத்து (குறிப்பாக தொண்டைக்குள் அல்லது கழுத்தின் முதுகெலும்புக்கு அருகில்)
* சிறுநீர் மற்றும் இனப்பெருக்க உறுப்புகள் (சிறுநீர்ப் பை மற்றும் இனப்பெருக்க உறுப்புகள்)
* கை மற்றும் கால்கள்
* மார்பு மற்றும் அடிவயிற்றில் இப்படி எந்த பகுதியில் வேண்டுமானாலும் இந்த புற்றுநோய் கட்டிகள் உண்டாகலாம்.

ராபடோமியோசர்கோமா புற்றுநோயின் காரணங்கள்:
இந்த புற்றுநோய் எதனால் ஏற்படுகிறது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்கிறார்கள் மருத்துவர்கள். உயிரணுக்களின் டி. என். ஏ வில் ஏற்படும் சில மாற்றங்களால் இந்த புற்றுநோய் கட்டிகள் உருவாகலாம் என்று கூறப்படுகிறது.

ராபடோமியோசர்கோமா புற்றுநோயின் அறிகுறிகள்:
இந்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டவருக்கு கீழ்க்கண்ட அறிகுறிகள் தென்படும். அவையாவன
* தலைவலி
* கண்களில் கொப்புளங்கள் மற்றும் வீக்கம் உண்டாதல் ஏற்படும்
* மூக்கு, தொண்டை மற்றும் காதுகளில் இருந்து இரத்த போக்கு ஏற்படுதல்
* சிறுநீர் மற்றும் மலத்தில் இரத்த போக்கு ஏற்படும்
* பெண்ணுறுப்பு பகுதியில் அல்லது மலவாய் பகுதியிலும் இரத்த போக்கு உண்டாகும்.

புற்றுநோயின் வகைகள்:
இந்த ராபடோமியோசர்கோமா மூன்று வகைப்படுகிறது. அவையாவன:
புருன்- ராபடோமியோசர்கோமா
இந்த புற்றுநோய் பிறந்த 4 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளிடமே இது காணப்படுகிறது. தலை, கழுத்து, பிறப்புறுப்புகள் அல்லது மலக்குடல் போன்ற பகுதிகளில் காணப்படுகிறது.
அல்வியோலர்
இந்த வகை பொதுவாக கைகள், கால்கள், மார்பு, அடிவயிறு அல்லது பிறப்புறுப்புகளில் காணப்படுகிறது. இது 19 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளில் காணப்படுகிறது. இது இளம் வயது குழந்தைகளிடம் காணக்கூடியதாக உள்ளது.
அனாபிளாஸ்டிக்
இது ஒரு அரிய வடிவமான புற்றுநோய். இந்த புற்றுநோய் தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளிடம் காணப்படுகிறது.

சிகிச்சை முறைகள்:
அறுவை சிகிச்சை
ராபடோமியோசர்கோமாவை குணப்படுத்த அறுவை சிகிச்சை பரிந்துரைக்கப்படுகிறது. இதன் மூலம் நீண்ட நாளான கட்டிகளை கட்டுப்படுத்த முடியும். கட்டியின் அளவு மற்றும் இருப்பிடத்தை பொறுத்து அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது.
கதிர்வீச்சு சிகிச்சைகள்
புற்றுநோய் கட்டிகளின் வீரியத்தை குறைத்து சுருக்க கதிர்வீச்சு சிகச்சைகள் செய்யப்படுகின்றன. இதன் மூலம் கட்டியின் அளவை எளிதாக குறைத்து பின்னர் லேசாக அறுவை சிகிச்சை செய்து விடுகின்றனர்.
ஹீமோதெரபி சிகிச்சைகள்
இந்த தசை செல் புற்றுநோயை போக்க ஹீமோதெரபி சிகிச்சை பரிந்துரைக்கப்படுகிறது. இதன் மூலம் கட்டிகளை 80 சதவீதம் வரை குறைக்க முடியும். இதைத் தவிர நோயெதிப்பு மருந்துகளும் நோயாளிகளுக்கு கொடுக்கப்படுகிறது. மேற்கண்ட சிகிச்சை முறைகள் ராபடோமியோசர்கோமா புற்றுநோயை விரட்ட உதவியாக இருக்கும் என்கிறார்கள் மருத்துவர்கள்.



Click it and Unblock the Notifications
