Latest Updates
-
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க
குழந்தைகள் உணவை மிச்சம் வைக்காமல் சாப்பிட தோட்டக்கலையை சொல்லிக்கொடுங்கள்!
குழந்தைகள் ஆரோக்கியமாக சாப்பிட சில டிப்ஸ்கள்
அம்மாக்களுக்கு பிள்ளைகளை ஆரோக்கியமாக வளர்ப்பது தான் பெரும்படாக இருக்கும். அதற்காக அவர்கள் டிவியை பார்த்து புத்தகத்தை படித்து என்ன தான் வகைவகையாக சமைத்து கொடுத்தாலும், குழந்தைகளை சாப்பிட வைப்பது அனைத்து அம்மாக்களுக்கும் குதிரை கொம்பாக தான் இருக்கும்.
அப்படியே சாப்பிட்டாலும் குழந்தைகள் ஒரு சில காய்கறிகள், கீரைகளை சாப்பிடமாட்டார்கள். பாதியை ஒதுக்கி வைத்துவிடுவார்கள். இதனால் உடலுக்கு தேவையான சத்துக்கள் அனைத்தும் கிடைக்காமலேயே போய்விடுகிறது.
இதற்கு என்ன தான் தீர்வு இருக்கிறது என குழப்பமா? கவலை வேண்டாம். நீங்கள் சொல்லாமலேயே உங்கள் குழந்தைகள் தானாகவே நன்றாக சாப்பிட வழி இருக்கிறது அது என்னவென்று காணலாம்.

உடல் பருமன்
இப்போது குழந்தைகள் சிறு வயதிலேயே அதிக உடல் பருமன் பிரச்சனைக்கு ஆளாகின்றனர். அதிக உடல் பருமன் பிற்காலத்தில் அதிக பிரச்சனைகளை தோற்றுவிக்கும். சக்கரை, உயர் இரத்த அழுத்தம், கார்டிவாஸ்குலர் இருதய நோய் ஆகியவற்றிக்கு உடல் பருமன் காரணமாகிறது. எனவே குழந்தைகளை சரியான உடல் பருமன் அளவில் பார்த்துக்கொள்வது அவசியம்.

தோட்டக்கலை
குழந்தைகளுக்கு செடி, கொடி மற்றும் மரங்களை வளர்க்க சொல்லித்தருவதால் பல நன்மைகள் உண்டாகிறது. குழந்தைகளுக்கு இயற்கையின் மீது ஆர்வம் வரும். நேர்மறையான எண்ணங்கள் தோன்றும். மன வளம் மேம்படும், அவர்களே ஒவ்வொரு செடியையும் பார்த்து பார்த்து வளர்ப்பதால் உணவை வீணக்க கூடாது என்ற எண்ணம் வரும். உடல் எடையை சரியாக பராமரிக்க இது உதவுகிறது.

ஆய்வுகள்
தோட்டக்கலையில் ஈடுபடும் குழந்தைகள் ஒரே வருடத்தில் ஆரோக்கியமான உடல் அமைப்பை பெறுகிறார்கள் என்று ஆய்வின் முடிவுகள் கூறுகின்றன. மேலும் இது குழந்தைகளின் அறிவுவை மேம்படுத்துகிறது.

மற்றுமொரு ஆய்வு
குழந்தைகள் தொடர்ந்து இயற்கையான காய்கறிகளை சாப்பிடுவதால், அவர்களது எழுத்து மற்றும் அறிவுக்கூர்மை மேம்படுகிறது என ஆய்வுகள் கூறுகின்றன. காய்கறிகளில் டின்ஏவில் ஆண்டிஆக்ஸிடன்டுகளை தக்கவைக்கின்றன. இது மூளைக்கு மிகவும் நல்லது.

குடும்ப செலவு
நீங்கள் வீட்டிலேயே உங்களுக்கு தேவையான செடிகளை வளர்ப்பதால், உங்களால் இரசாயனம் இல்லாத புத்தம் புதிய காய்கறிகளை உணவாக எடுத்துக்கொள்ள முடிகிறது. காய்கறிகளை வீட்டிலேயே பயிர் செய்வதால் செலவும் குறைகிறது. உங்கள் குழந்தைகளின் ஆரோக்கியமான எதிர்காலத்திற்கு இது வழிவகுக்கிறது.

ஆரோக்கியமான ஓய்வு நேரம்
குழந்தைகள் தங்களது ஓய்வு நேரத்தை டிவி பார்ப்பது, செல்போன்களில் விளையாடுவது போன்ற உடல்நலனை பாதிக்கும் செயல்களில் ஈடுபடுவதை விட, செடிகளை வளர்ப்பது, அதற்கு நீர் ஊற்றுவது போன்ற வேலைகளில் ஈடுபடுவது சிறந்தது.



Click it and Unblock the Notifications