Latest Updates
-
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மே 8 முதல் இந்த 3 ராசிக்காரர்களின் செல்வம் டபுள் ஆகப்போகுது! -
வீட்டில் இந்த 4 செடிகள் இருந்தா போதும்… புழுதிப் புயலையும் தாண்டி அதிர்ஷ்டம் தேடி வரும்! -
கேரட்டும், மாங்காயும் இருந்தா.. இப்படி செஞ்சு பாருங்க.. எல்லாத்துக்குமே டக்கரா இருக்கும்.. -
கப்பர் யோக காலத்தில் பணத்தை இழக்காதீங்க! இந்த 5 வாஸ்து மாற்றங்கள் செழிப்பை அள்ளித்தரும்! -
Mathi Meen Benefits: அடிக்கடி மத்தி மீன் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளை பட்டியலிட்ட டாக்டர் தினேஷ்! -
May 2026 Monthly Numerology: உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. மே மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
கொளுத்தும் வெயிலில் உடல் எடையைக் குறைக்க உதவும் 3 விதமான கூழ் ரெசிபிக்கள் - எப்படி செய்யணும் தெரியுமா? -
இன்றைய ராசிபலன் 02 மே 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு பொறுமையை சோதிக்கும் நாளாக இருக்குமாம் -
எவிலின் சர்மாவின் திடீர் பிரிவு! கசப்பான விவாகரத்தை விட இது எவ்வளவோ மேல் தெரியுமா? -
கல்யாணத்துக்குப் பின் 'சிச்சுவேஷன்ஷிப்' - வைரலாகும் இந்த டிரெண்ட் எதை உணர்த்துகிறது?
தி ஜங்கிள் புக் படத்தில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள்!
காட்டில் தனிமையில் இருந்த குழந்தை மௌக்ளீ கருஞ்சிறுத்தை மற்றும் ஓநாய் கூட்டத்தில் வளர்கிறான். அவனை கொல்ல துடிக்கும் ஷேர்கான், தன்னால் தனது கூட்டத்திற்கு எந்த பாதிப்பும் வரக் கூடாது என அவன் தனியாக செல்ல, அங்கு கரடி நண்பன் என மௌக்ளீயின் பயணம் தி ஜங்கிள் புக்கில் தொடரும்.
தெறி படத்துல இதெல்லா நீங்க கவனிச்சிங்களா?
இதை வரும் கேளிக்கை கார்டூன், படம் என்பதை தாண்டி. இந்த படத்தில் இருந்து உறவுகள் பற்றி குழந்தைகள் கற்றுக் கொள்ளவும், பெற்றோர்கள் கற்றுக் கொள்ளவும் நிறைய விஷயங்கள் இருக்கின்றன. அவற்றை பற்றி இனிக் காண்போம்.....

விலங்குகளின் பாசம்
விலங்குகளிடமும் மனிதர்களை போல பாசம் செலுத்தும் குணம் அதிகமாக இருக்கிறது. ஓநாய் தாயான ராக்ஷா மௌக்ளீ மீது எல்லை கடந்த அன்பு செலுத்துவதை நீங்கள் கண்டிருப்பீர்கள். நமது வீட்டிலும் கூட இதை நம் கண் கூட பார்க்கலாம். யாராவது புதிய நபர் குழந்தை அருகில் சென்றால் நாம் வீட்டில் வளர்க்கும் செல்ல பிராணிகள் அவர்களை மிரட்டும். அருகே செல்ல தடையாக நிற்கும்.

எதிர் பலன் எதிர்நோக்கும் உறவு
பாலு கரடி மௌக்ளீயின் உயிரை காப்பாற்றி விட்டு தனக்கான தேனை எடுத்து தரும் படி கேட்கும். இது தன் எதிர் பலன் எதிர்நோக்கும் உறவுகள். நாம் அனைவருமே ஒருவரை சார்ந்து ஒருவர் எனும் உறவு முறையில் தான் வாழ்ந்து வருகிறோம். இதன் நடுவில் நான் பெரியவன், நீ சிறியவன் என்ற ஈகோ எதற்கு.

பேய் குணம்
ஷேர்கான் மௌக்ளீயை பழிவாங்க துடித்துக் கொண்டே இருக்கும். பழி வாங்கும் எண்ணம் நம்மை நோக்கி கையில் வைத்திருக்கும் கத்தியை போல அது எப்போது வேண்டுமானாலும் நம்மையே பதம்பார்க்க கூடும்.

நச்சு பேச்சு
சிலர் பேசும் போது மிக இனிமையாக இருக்கும். ஆனால், அவர்கள் நம்மை பயன்படுத்துக் கொள்ள தான் அப்படி நயவஞ்சகமாக பேசுகிறார்கள் என்பது பின்பு தான் புரியும். எனவே, இப்படிப்பட்ட மனிதர்களிடம் இருந்து நாம் எப்போதும் தள்ளியே இருக்க வேண்டும்.

தன்னலமற்று
பகீரா கருஞ்சிறுத்தை தன்னலமற்று மௌக்ளீயை காப்பாற்றி வரும். உள்ளொன்று வைத்து புறமொன்று கூறாமல் எப்போதும் உண்மையாக நேசிக்கும் உறவுகள் அரிதிலும் அரிது இக்காலத்தில்.

பேராசை
பழங்குடி குரங்குகளின் அரசன் பேராசை கொண்டு தான் அனைத்து வல்லமையும் பெற வேண்டும் என ரெட் ஃப்ளவர் கேட்டு மௌக்ளீயை கடத்தி செல்லும். கடைசியில் அந்த பேராசை அதையே பலிவாங்கிவிடும். பேராசை நம்மை நாமே கொல்ல வளர்க்கும் கருவியாகும்.

நல்லிணக்கம்
காடு என்றால் அதில் அனைத்து விலங்குகளும் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் தானே அது காடு. வெறும் சிங்கம், புலி மட்டும் தான் இருக்க வேண்டும் என்றால் அது எப்படி காடாக அனுசரிக்க முடியும். அப்படி தான் மனித வாழ்க்கையும், அனைத்து உறவுகளும் இருந்தால் தான் அது வாழ்க்கை இல்லையேல் அது ஒரு பரிபூரண வாழ்க்கையாக அமையாது.

காடு தான் நமது பூர்வீகம்
காட்டை ஒதுக்கி நாம் வாழ்ந்து வருகிறோம். ஆனால், நமது பூர்வீகமே அது தான். காடுகள் தான் பூமியின் அரண்மனை அதனை அழித்துவிட்டால் மனிதர்கள் தானாக ஓர்நாள் அழிந்துவிடுவார்கள். எனவே, காட்டை பாதுகாக்க வேண்டியது நமது கடமை.



Click it and Unblock the Notifications