Latest Updates
-
Aadi Pooram 2026: ஆடிப்பூரம் நாளில் என்னென்ன செய்யணும் தெரியுமா? -
இந்தியா-பாகிஸ்தான் எல்லையை வெறும் 5 வாரத்தில் உருவாக்கியவர் யார் தெரியுமா? நம்ப முடியாத இந்திய வரலாறு -
கடகத்தில் உச்சமடையும் குரு பகவான்: இன்று முதல் இந்த 5 ராசிக்காரர்களின் பேங்க் பேலன்ஸ் உயரப்போகுது! -
சூரியன் சொந்த நட்சத்திரத்திற்குள் நுழைவதால் வாழ்க்கையில் உச்சத்தை தொடப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - இப்படி செய்யுங்க.. தட்டு சோறு நொடியில் காலியாகும்.. -
சர்க்கரை நோயாளிகளுக்கான டாப் 5 காய்கறிகளை பட்டியலிட்ட டாக்டர்! என்னன்னு தெரிஞ்சுக்கோங்க.. -
நெல்லை ஸ்டைல் தலக சாம்பார் ரெசிபி - ஒரு தடவை செஞ்சு பாருங்க - ஒரு வாரம் வைச்சு சூப்பரா சாப்பிடலாம் -
தலைசுற்ற வைக்கும் இந்தியாவிலுள்ள வினோதமான திருமண சடங்குகள் - இப்படிலாம் கல்யாணம் பண்ணுனா அவ்வளவுதான் -
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பணத்தையும், புகழையும் கொண்டு வரப்போகுது! -
சத்தான ரவா கீரை அடை - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணி பாருங்க..
குழந்தைகளின் கவனத்தை அதிகரிக்க சில டிப்ஸ்...
குழந்தைகள் வளர வளர அவர்களது விளையாட்டுத்தனத்தால், எதிலும் ஒருவித சரியான ஈடுபாடு மற்றும் கவனம் இருக்காது. ஆனால் இப்படி அவர்களது கவனக்குறைவால், அவர்கள் பள்ளி செல்லும் போது மிகுந்த அவஸ்தைக்கு உள்ளாவார்கள். இருப்பினும் பெற்றோர்கள் குழந்தைகள் பள்ளி செல்லும் முன்பிருந்தே அவர்களின் கவனத்தை அதிகரிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்தால், பள்ளி செல்லும் போது படிப்பில் அதிகம் கவனத்தை செலுத்துவார்கள்.
இல்லாவிட்டால், படிப்பு என்றாலே எரிச்சலுக்கு தான் உள்ளாவார்கள். ஆகவே சிறு வயதிலிருந்தே பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் ஆர்வத்தை அதிகரிக்கும் மற்றும் புதியதை கற்றுக் கொள்ளும் எண்ணத்தை வளர்க்கும் செயல்களில் ஈடுபடுத்த வேண்டும். இப்படி ஆரம்பத்திலேயே கஷ்டப்பட்டால், பிற்காலத்தில் கஷ்டப்பட வேண்டிய அவஸ்தை இருக்காது.
சரி, இப்போது குழந்தைகளின் ஆர்வத்தை அதிகரிக்கும் சில வழிகளைப் பார்ப்போம்.

* சிறு வயதிலிருக்கும் போதே குழந்தைகளுக்கு புத்தகங்களை படித்து காண்பித்தால், குழந்தைகளின் கவனம் அதிகரிக்கும் என்பது தெரியுமா! மேலும் நிபுணர்களும் குழந்தைகளுக்கு புத்தகத்தை படித்து காண்பிப்பதால், அவர்களது கற்பனைத் திறன் அதிகரிப்பதோடு, அவர்களது கவனமும் அதிகரிக்கும் என்று கூறுகின்றார்கள்.
* உள்ளரங்க விளையாட்டுக்களில் குழந்தைகளை ஈடுபடுத்தினாலும் கவனம் அதிகரிக்கும். ஏனெனில் அவர்களின் மூளைக்கு அதிக செயல்பாடு கொடுப்பதால், அவர்களுக்கு யோசிக்கும் திறன் வளரும். குறிப்பாக செஸ், கேரம், பாம்பு போன்ற விளையாட்டுக்களில் ஈடுபடுத்த வேண்டும்.
* குழந்தைகளை ஒரு இடத்தில் உட்கார வைத்து, அவர்களுக்கு முன் மெழுகுவர்த்தியை வைத்து, அதனை 3 நிமிடம் அசையாமல் உற்று கவனிக்குமாறு சொல்ல வேண்டும். அவ்வாறு உட்காராவிட்டால், அவர்களிடம் இப்படி செய்தால், உனக்கு சாக்லெட் கொடுப்பேன் என்று சொல்லுங்கள்.
* மெழுகுவர்த்தி முறையைப் போன்றே, குழந்தைகளின் முன் நாணயத்தை வைத்து, அதனை தொடர்ச்சியாக 5 நிமிடம் பார்க்குமாறு சொல்லலாம். இதனாலும் கவனம் அதிகரிக்கும்.
* குழந்தைகளுக்கு பாட்டு கேட்க பிடித்தால், அவர்களுக்கு பிடித்த பாடலை கேட்க விடுங்கள். ஏனெனில் இது கூட பெரிதும் உதவியாக இருக்கும்.
* குறிப்பாக குழந்தைகளுக்கு ஒரே நேரத்தில் பல்வேறு வேலைகளைக் கொடுக்க வேண்டாம். இது அவர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தி, எதிலும் ஈடுபாடு இல்லாதவாறு செய்துவிடும்.
* குழந்தைகளுக்கு சர்க்கரை கலந்த உணவுப் பொருட்களையோ அல்லது சர்க்கரையையோ அதிகம் சாப்பிடக் கொடுக்காதீர்கள். இதனால் அவர்களது பற்கள் சொத்தை ஆவதோடு, அவர்களை சோர்வடையச் செய்துவிடும்.
* குழந்தைகளின் கவனத்தை அதிகரிக்க, அவர்களுக்கு நல்ல கதைகளைச் சொல்லி, அவர்களின் மனதில் நல்ல எண்ணத்தை பதிய வையுங்கள்.
முக்கியமாக குழந்தைகளை எக்காரணம் கொண்டும் வற்புறுத்தாதீர்கள். இது அவர்களின் மனதில் கோபம், எரிச்சல் போன்றவற்றை உண்டாக்கிவிடும்.



Click it and Unblock the Notifications