Latest Updates
-
ஐயங்கார் ஸ்டைல் தேங்காய்ப்பால் ரசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - கமகமனு சூப்பரா இருக்கும் -
உங்க முகத்தில் இந்த 3 அறிகுறிகள் தெரியுதா? அப்ப கொழுப்பு கல்லீரல் நோய் இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
தலைசுற்ற வைக்கும் வட கொரியாவின் கொடூரமான விதிமுறைகள் - இந்த நாட்ல மக்கள் எப்படித்தான் வாழ்றாங்களோ? -
விரிசல் இல்லாம பூர்ண கொழுக்கட்டை செய்யணுமா? இதோ சில டிப்ஸ்.. -
பெண்களுக்கு ஆண்கள் வரதட்சணை கொடுத்து திருமணம் செய்யும் பெண்களால் ஆளப்படும் இந்தியச் சமூகம் எது தெரியுமா? -
Ganesh Chaturthi 2026: உங்க கஷ்டங்கள் குறையணுமா? அப்ப இன்னிக்கு விநாயகருக்கு உங்க ராசிப்படி இத வாங்கி கொடுங்க! -
விநாயகர் சதுர்த்திக்கு வழக்கமான சுண்டல் செய்யாம இந்த மாதிரி மசாலா அரைச்சு செஞ்சு பாருங்க - செமையா இருக்கும் -
Ganesh Chaturthi 2026: விநாயகரின் சிறப்பு ஆசீர்வாதத்தைப் பெற்ற 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
Ganesh Chaturthi 2026: விநாயகர் சதுர்த்தி நாளில் அதிர்ஷ்ட மழையில் நனையப்போவது இந்த 4 ராசிக்காரங்க தான்! -
கூரைக்கடை கார சட்னி - இட்லிக்கு இந்த சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க..
குழந்தைங்க வெடி வைக்கும் போது பத்திரமாக பாத்துக்கோங்க...

பட்டாசு வெடிக்கும் போது இருக்க வேண்டியவை....
* குழந்தைகள் பட்டாசு வைக்க போகும் போது, அவர்களை மறக்காமல் செருப்புகளை அணிந்து கொள்ளுமாறு சொல்ல வேண்டும். இல்லையெனில் அவர்கள் கால்களில் தீக்காயங்கள் ஏற்படும்.
* வெடி வைக்கும் போது குழந்தைகளுக்கு பருத்தி ஆடைகளை அணிவிப்பது நல்லது. அதிலும் சங்கு சக்கரம் வைக்கும் போது கவனமாக இருக்க வேண்டும்.
* கம்பி மத்தாப்பு விட்டதும், அதனை அப்படியே கீழே போட்டு விடாமல், அருகில் ஒரு வாளி நீரை வைத்து, அதில் அந்த கம்பிகளை போட்டால், அங்கும் இங்கும் ஓடி விளையாடும் குழந்தைகளுக்கு தீக்காயங்கள் ஏற்படாமல் தடுக்கலாம்.
* குழந்தைகள் வெடி வைக்க நினைக்கும் போது, அவர்கள் பக்கத்திலேயே பெற்றோர்கள் இருக்க வேண்டும். அதிலும் அவர்களுக்கு நீளமான ஊதுபத்திகளை கொடுத்து, வெடிக்க வைக்க வேண்டும்.
* முக்கியமாக பூத்தொட்டி வைக்கும் போது, அவர்களை உட்கார்ந்து வைக்கவிடாதீர்கள். ஏனெனில் அவர்கள் ஏற்கனவே பயந்து கொண்டு வெடி வைக்கும் போது, என்ன தான் பெற்றோர்கள் அருகில் இருந்தாலும், அவர்கள் தவறி கீழே விழந்துவிடுவார்கள்.
* குழந்தைகள் பட்டாசு வைக்கும் போது அவர்களை பயமுறுத்த வேண்டாம். பின் அதுவே அவர்களுக்கு அதிக பயத்தை ஏற்படுத்திவிட்டு, காயத்தையும் ஏற்படுத்தும்.
* மேலும் வெடி வெடிக்கும் போது, அதனை உற்று பார்க்க வைக்காதீர்கள். ஏனெனில் சில வெடிகளிலிருந்து வரும் தீத்துகள்கள், அவர்களின் கண்களில் பட்டு, பின் அது அவர்களது கண்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். சில சமயங்களில் பார்வையே போய்விடும்.
* வெடி வெடிக்கும் போது, குழந்தைகளை எந்த ஒரு உணவையும் கைக் கழுவாமல் சாப்பிட விடாதீர்கள்.
தீக்காயம் ஏற்பட்டால் செய்ய வேண்டிய முதலுதவிகள்...
* கண்களில் தீத்துகள்கள் பட்டால், உடனே தண்ணீரில் கண்களை கழுவ வேண்டும். அதிலும் கண்களில் எரிச்சல் போகும் வரை கண்களை கழுவி, பின் மருத்துவரை அணுக வேண்டும். முக்கியமாக கண்களை கழுவும் போது குளிர்ந்த நீரை பயன்படுத்தாமல், சாதாரண நீரையே பயன்படுத்த வேண்டும். ஏனெனில் குளிர்ந்த நீர் உடலில் இரத்த ஓட்டத்தை குறைத்துவிட்டு, பாதிப்பை ஏற்படுத்தும்.
* வெடி வெடிக்கும் போது சிறிய தீக்காயம் ஏற்பட்டால், உடனே வீட்டில் இருக்கும் தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெயை தடவினால் சரியாகிவிடும். ஆனால் பெரிய காயம் ஏற்பட்டால், உடனே 108-க்கு போன் செய்யுங்கள்.



Click it and Unblock the Notifications
