Latest Updates
-
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. அக்டோபர் மாசம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
பொறிச்ச குழம்பு - இத ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. எல்லாத்துக்கும் வெச்சு சாப்பிடலாம்.. -
சாதம் சாப்பிட்டும் சுகர் அதிகரிக்கக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த ட்ரிக்கை ஃபாலோ பண்ணுங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் வாழைக்காய் பொடிமாஸ் ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - டேஸ்ட் சூப்பரா இருக்கும -
தென்னிந்தியாவின் அம்பானி என்று கூறப்படும் இந்த நடிகருக்கு புர்ஜ் கலீஃபாவில் சொந்த வீடு இருக்காம்-யார் தெரியுமா -
அக்டோபர் மாத கிரக பெயர்ச்சிகளால் இந்த ராசிக்கெல்லாம் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. உங்க ராசி இதுல இருக்கா? -
ரோட்டுக்கடை தக்காளி குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 28, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்தில் பிரச்சினைகளை சந்திக்கப் போறாங்களாம் -
அக்டோபரில் நிகழும் சுக்கிரனின் வக்ர பெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
கொங்கு ஸ்பெஷல் பீர்க்கங்காய் கடலை சட்னி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - இட்லி, தோசைக்கு அருமையா இருக்கும்
தாலாட்ட நேரமில்லை: டிவிடியில் பாட்டுப் பாடும் 'மம்மி டாடிகள்'!

கிராமத்து வீடுகளுக்குப் போனால் சுவாரஸ்யமான தாலாட்டுக் காட்சிகளைப் பார்க்கலாம். அம்மா ஏதாவது வேலையாக இருப்பார், அவரது கைக்குழந்தை தூளியில் நெளிந்தபிட அழ ஆரம்பிக்கும். வேலையையும் விட முடியாது, குழந்தையிடமும் போக முடியாது. என்ன செய்வார் அந்த்த தாய்?
தூளியுடன் சேர்த்துக் கட்டியுள்ள கயிற்றை தான் உட்கார்ந்த இடத்திலிருந்தே பிடித்து மெதுவாக ஆட்டியபடி தாலாட்டுப் பாடலை எடுத்து விடுவார். ஆராரோ ஆரிராரோ, யாரடிச்சு நீ அழுத, அத்தை அடிச்சாரா அரளிப் பூ செண்டாலே, மாமன் அடிச்சாரோ மல்லிப் பூ செண்டாலே என்று அவர் குரல் எடுத்துப் பாடும் போது அதை மெய் மறந்து கேட்டபடி குழந்தை மீண்டும் கண்மூடித் தூங்க ஆரம்பிக்கும்.
நகர்ப்புறங்களில் இந்த மாதிரியான பாடல்களை இப்போது கேட்கவே முடிவதில்லை. பெண்களுக்குக் குரல் வளமோ, பாடல் அறிவோ இல்லை என்று அர்த்தம் இல்லை. அவர்களுக்கு இந்தப் பாட்டெல்லாம் இப்போது தெரிவதில்லை, தெரிந்தாலும் கூட பாடுதவற்கு நேரமில்லை.
இன்றைய காலகட்டத்தில் கணவனும், மனைவியும் வேலைக்குப் போனால் தான் வாழ்க்கையை சிரமமின்றி ஓட்ட முடிகிறது. அதனால் குழந்தைகளைப் பார்த்துக் கொள்ள ஆளில்லை. யாராவது ஒரு ஆயாவிடமோ அல்லது அக்கம் பக்கத்தினரிடமோ, பணத்தைக் கொடுத்து குழந்தையைப் பார்த்துக்கொள்ளச் சொல்கிறார்கள்.
வேலை முடிந்து வீட்டுக்கு வருகையில் குழந்தையை தூக்கி வரும் தாய் அதை தாலாட்ட நேரமில்லாததால் தொட்டிலில் போட்டு டிவிடியை ஆன் செய்து விடுகிறார். பாட்டி, தாய் ஆகியோரின் தாலாட்டு கேட்டு குழந்தைகள் தூங்கிய காலம் எல்லாம் மலையேறிக் கொண்டிருக்கிறது. இப்போது எஸ்.பி.பி., சித்ரா, சுஜாதா ஆகியோர் தான் பல்வேற வீட்டுக் குழந்தைகளுக்கு தாயாக மாறி டிவிடி மூலம் தாலாட்டு பாடி தூங்க வைக்கின்றனர்.
அதிலும் சில குழந்தைகளுக்கு குத்துப் பாட்டு கேட்டால் தான் தூக்கம் வருகிறது. எனவே தனுஷ், விஜய், அஜித்தின் குத்துப்பாட்டு கேட்டுக் கொண்டே தூங்கும் குழந்தைகளும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
நாத்து நட பாட்டு, வேலை செய்ய பாட்டு, நடந்து போக பாட்டு, தூங்க பாட்டு என்று எதற்கெடுத்தாலும் பாட்டு பாடும் வழக்கம் உள்ள தமிழகத்தில் அந்த வழக்கமெல்லாம் மாறிக்கொண்டிருப்பது வருத்தமான விஷயம்தான்.



Click it and Unblock the Notifications
