For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

முக்கியமான சமயத்துல மாதவிடாய் வந்திடுச்சா?... வந்தபின் மாத்திரை இல்லாம எப்படி நிறுத்தலாம்?

பெண்களுக்கான மாதவிடாய் பிரச்சினை குறித்தும் மாதவிலக்கு ஆனபின்பு அதை எப்படி நிறுத்துவது என்பது பற்றியும் இங்கே விளக்கமாகப் பார்க்கலாம்.

|

மாதவிடாய்க் காலங்கள் வலி மிகுந்த காலங்கள். ஒவ்வொரு மாதமும் பெண்கள் இந்த வலியால் பாதிக்கப்படுகின்றனர். பூப்பெய்தல் முதல் மெனோபாஸ் காலகட்டம் வரை பெண்கள் இந்த மாதவிடாயை அனுபவித்தாக வேண்டும்.

How to Stop Your Period Once It Starts

மாதவிடாய் என்பது பெண்களுக்கு ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட காலகட்ட சுழற்சியில் உண்டாகும் ஒரு இயற்கையான நிகழ்வாகும். இந்த காலகட்டத்தில் சில பெண்களுக்கு அதிக இரத்தப்போக்கு மற்றும் வலி இருக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
முக்கிய நாட்கள்

முக்கிய நாட்கள்

சில முக்கிய விழாக்கள் அல்லது வைபவங்களில் கலந்து கொள்ளும்போது அல்லது விடுமுறையைக் கழிக்க விரும்பும்போது மாதவிடாய் வருவது பெண்களுக்கு ஒரு வித அசௌகரியத்தைக் கொடுக்கும். அந்த நேரத்தில் உண்டாகும் வலி அந்த விழாவை அல்லது விடுமுறையை சந்தோஷமாக கழிப்பதில் இடையூறை உண்டாக்கும். அதனால் பொதுவாக பெண்கள் அந்த நேரங்களில் மாதவிடாயை நிறுத்த அல்லது தள்ளிப் போட விரும்புவார்கள். இது போல் மாதவிடாயை நிறுத்த பல வித இயற்கை வழிகள் உள்ளன. சில வகை மருத்துவ தீர்வுகளும் உண்டு.

உங்கள் மாதவிடாய் காலத்தை குறைக்க அல்லது நிறுத்த இயற்கையான தீர்வுகள் சிலவற்றை இப்போது காண்போம்.

MOST READ: உங்க ராசிய சொல்லுங்க... உங்களுக்குள்ள ஒளிஞ்சிருக்கிற லூசு கேரக்டர் எதுன்னு நாங்க சொல்றோம்...

உடற்பயிற்சி

உடற்பயிற்சி

மாதவிடாய் காலத்தின் நீளம் மற்றும் இரத்தப்போக்கின் அளவை உங்கள் உடல் எடை ஓரளவிற்கு தீர்மானிக்கும். உடல் பருமன் சற்று அதிகமாக இருக்கும் பெண்களுக்கு மற்றும் உடலில் கொழுப்பு அதிகம் உள்ள பெண்களுக்கு வலி மிகுந்த மற்றும் நீடித்த மாதவிடாய் காலங்கள் உண்டு. இதன் காரணமாக, மாதவிடாய் காலங்களிலும் வழக்கமான உடற்பயிற்சியை மேற்கொள்வது மிகவும் அவசியம். இதனால் உங்கள் உடல் கட்டுக்கோப்பாக இருக்க முடியும். மாதவிடாயயையும் கட்டுப்படுத்த முடியும்.

முற்றிலும் நிறுத்த

முற்றிலும் நிறுத்த

மாதவிடாய் காலங்களில் மிக அதிகமான வலியை அனுபவிப்போர் உடற்பயிற்சி செய்வது சற்று கடினமான காரியம் தான். ஆனால் ஓரளவிற்கு வழக்கமான உடல்நிலையில் உள்ளவர்கள் உடற்பயிற்சி செய்வதால் மாதவிடாய் காலம் சுருங்கும் வாய்ப்பு உண்டு. சில நேரம் முற்றிலும் நின்று விடக் கூடும். இன்னும் முக்கியமாக, உங்கள் உடலின் இரத்த ஓட்டம் அதிகரித்து மாதவிடாய் வலியைக் குறைக்கிறது. ஆகவே பெண்கள் முடிந்த வரை தினமும் சில வகை உடற்பயிற்சியை மேற்கொள்வது நல்ல பலனைத் தரும்.

போதுமான அளவு தண்ணீர் பருகுவது

போதுமான அளவு தண்ணீர் பருகுவது

வாழ்வின் எந்த ஒரு காலகட்டத்திலும், உடலை நீர்ச்சத்தோடு பராமரிப்பது மிகவும் அவசியம். குறிப்பாக மாதவிடாய் காலத்தில் இரத்தப்போக்கை நிறுத்தவும் இது பயன்படுகிறது. மாதவிடாய் காலத்தில் உண்டாகும் வயிறு வீக்கம் மற்றும் வலியைக் குறைக்க அதிக அளவு தண்ணீர் பருகுவது மிகுந்த நன்மையைச் செய்கிறது. காபின் அல்லது போதை ஏற்றப்பட்ட பானங்களைத் தவிர்ப்பது நல்லது. இத்தகைய பானங்களை அதிகம் பருகுவதால், மாதவிடாய் வலி மேலும் அதிகரிக்கலாம். ஆகவே தண்ணீர் பருகுவது ஒரு நல்ல தீர்வாக கருதப்படுகிறது.

அன்பாக இருப்பது

அன்பாக இருப்பது

மாதவிடாய் காலங்களில் உங்கள் துணையுடன் இணைந்து இருப்பது உங்கள் வலியைக் குறைக்கலாம். உங்கள் துணையுடன் இணைவதால், உடலில் இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது , இதனால் வலி குறைகிறது. மேலும் மாதவிடாய் காலத்தில் உங்கள் துணையுடன் இணைவதால் மாதவிடாய் இரத்தப்போக்கு குறையலாம் அல்லது முற்றிலும் நிறுத்தப்படலாம். மேலும் இந்த காலகட்டத்தில் உண்டாகும் மன அழுத்தம் கூட உங்கள் துணையிடம் சிறிது பேசி மகிழ்வதால் குறையும் வாய்ப்பு உண்டு. எனவே இதனை முயற்சித்துப் பாருங்கள்.

MOST READ: விஷ்ணுவை ஏன் வியாழக்கிழமை நாளில் வழிபட வேண்டும்?... எப்படி வழிபடணும்?

மருத்துவ மூலிகைகள்

மருத்துவ மூலிகைகள்

பல வித மருத்துவ மூலிகைகள் மாதவிடாய் காலத்தை கட்டுபடுத்த பயன்படுகிறது. காட்டு மிளகு, மாதவிடாய் காலத்தை சுருக்குவதற்கு நல்ல தீர்வைக் கொடுக்கிறது. கருமுட்டை உண்டாவதற்கான மற்றும் மாதவிடாய்க்கு காரணமான ஹார்மோன்களை கட்டுப்படுத்துவதன் மூலம் இது செயல்புரிகிறது. கூடுதலாக, ராஸ்பெர்ரி தேநீர் பருகுவதால் மாதவிடாய் காலம் குறைகிறது.

மாதவிடாயை தாக்கத்தை உண்டாக்கும் ஹார்மோன்களை கட்டுப்படுத்தும் தன்மை கிட்டி செடிக்கு உள்ளது. இந்த மூலிகையை பயன்படுத்துவதால் உங்கள் மாதவிடாய் காலத்தை நிறுத்த அல்லது சுருக்க முடியும். மருத்துவ முறையில் மாதவிடாயை நிறுத்துவது அல்லது குறைப்பதற்கான வழிகளை இப்போது காணலாம்.

கருத்தடை மாத்திரை

கருத்தடை மாத்திரை

மாதவிடாய் கால வலியைக் குறைக்கவும் , மாதவிடாய்க் காலத்தைச் சுருக்கவும் வெற்றிகரமாக உதவுவது கருத்தடை மாத்திரைகள் என்பது பரவலாக அறியப்பட்டதாகும். இந்த மாத்திரையை எடுத்துக் கொள்வதால் உங்கள் மாதவிடாய் இரத்தப்போக்கு அளவும் குறையும். ஆனால் இதனை பயன்படுத்துவதற்கு முன்னர் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது மிகவும் அவசியம்.

மென்சுரல் கப்

மென்சுரல் கப்

பிறப்புறுப்பில் ஒரு நெகிழ்வுத்திறனுடன் கூடிய கப்பை பொருத்துவதால் மாதவிடாய் கால இரத்தப்போக்கு அந்த கப்பில் சேமிக்கப்படுகிறது. இந்த கப் பொதுவாக சிலிக்கான் மூலம் தயாரிக்கபப்டுகிறது இதனை பல முறை பயன்படுத்தலாம். ஒரே முறை பயன்படுத்தக்கூடிய கப்புகளும் சந்தையில் விற்கப்படுகின்றன. டம்பூன் பயன்பாட்டை விட சௌகரியமானது இந்த கப். மாதவிடாய் காலத்தில் இந்த கப் பயன்படுத்துவதால் இரத்தப்போக்கு சிறந்த முறையில் உறிஞ்சப்படுகிறது.

மாதவிடாய் காலத்தில் கப் (மென்சுரல் கப்) பயன்படுத்துவதால் இரத்தப்போக்கு குறைவதாகவும் மாதவிடாய் காலம் சுருங்குவதாகவும் சில ஆய்வுகள் கூறுகின்றன.

மருத்துவ ஆலோசனை

மருத்துவ ஆலோசனை

மேலே கூறிய எல்லா வழிகளின் தீர்வுகளும் ஒவ்வொரு பெண்ணிற்கும் வேறுபடுகின்றன. சில பெண்களுக்கு மாதவிடாய்க் காலத்தில் குறைவான இரத்தப்போக்கு உண்டாகலாம், சிலருக்கு முற்றிலும் மாதவிடாய் இரத்தப்போக்கு நிறுத்தப்படுகிறது. இந்த முயற்சிகளை மாதவிடாய் தொடங்குவதற்கு முன்னர் செயல்படுத்துவதால் இன்னும் சிறந்த தீர்வுகள் கிடைக்கும் வாய்ப்பு உண்டு. மருத்துவ ரீதியாக மாதவிடாயை தடுக்க எந்த ஒரு முயற்சியும் எடுப்பதற்கு முன்னர் மருத்துவரை ஆலோசிப்பது அவசியம். சுயமாக எந்த ஒரு முடிவும் எடுப்பது பல்வேறு பின்விளைவுகளை உண்டாக்கலாம்.

MOST READ: கல்யாணம் முடிஞ்சு வீட்டுக்கு வந்ததும் மொதல்ல ஏன் பால், பழம் தர்றாங்க தெரியுமா? இதுக்குதான்...

10குறிப்பு

10குறிப்பு

மற்றொரு முக்கியமான கருத்து என்னவென்றால், பொதுவாக மாதவிடாய் சுழற்சியில் எந்த ஒரு தடை அல்லது தள்ளிப் போடுதல் போன்றவையும் தேவையற்றது. இதனால் உங்கள் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். எனவே, மிகவும் அவசியம் என்றால், இந்த முறைகளை பின்பற்றலாம். அதுவும், ஒரு வருடத்திற்கு இரண்டு முறைக்கு மேல் இதனை பின்பற்றக் கூடாது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How to Stop Your Period Once It Starts

here we are talking about menstural problems and How to Stop Your Period Once It Starts.
Story first published: Thursday, December 20, 2018, 12:10 [IST]
Desktop Bottom Promotion