இதயத் துடிப்பை வைத்து வயிற்றில் இருப்பது ஆணா... பெண்ணா என கண்டுபிடிக்க முடியுமா?

ஒரு கரு உருவாகும் போதும் அதன் பாலினத்தை தந்தையின் விந்தணுவில் உள்ள குரோமோசோம் X அல்லது Y தான் தீர்மானிக்கிறது. ஒரு ஆணின் உயிரணு பெண்ணின் கருமுட்டையுடன் கூடிய X குரோமோசோமுடன் இணைந்து தான் குழந்தையை உரு

ஒவ்வொரு தம்பதிகளுக்கும் பிறக்க போகும் குழந்தை ஆணா? பெண்ணா? என்பதை தெரிந்து கொள்ள மிகுந்த ஆர்வம் இருக்கும். அவர்களுக்கு குழந்தையை பற்றிய தகவல்களை தேடிவது எப்பொழுதும் விருப்பமாக இருக்கும்.

parenting

குழந்தையின் ஆரோக்கியமான வளர்ச்சியானது ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தையும் மற்றும் மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மாத்திரைகளின் மூலம் ஒவ்வொரு மாதமும் குழந்தை போதுமான வளர்ச்சியை அடைகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மரபணு

மரபணு

உண்மையில் குழந்தையின் பாலினம் என்பது மரபணு சார்ந்த ஒரு விஷயம். எப்படி பெற்றோர்களின் மரபணு அதை தீர்மானிக்கிறது. இது போன்ற சுவாரஸ்யமான விஷயங்களை நீங்கள் இங்கே தெரிந்து கொள்ளலாம்.

கருத்தாக்கத்தில் பாலினம்

கருத்தாக்கத்தில் பாலினம்

ஒரு கரு உருவாகும் போதும் அதன் பாலினத்தை தந்தையின் விந்தணுவில் உள்ள குரோமோசோம் X அல்லது Y தான் தீர்மானிக்கிறது. ஒரு ஆணின் உயிரணு பெண்ணின் கருமுட்டையுடன் கூடிய X குரோமோசோமுடன் இணைந்து தான் குழந்தையை உருவாக்க ஆரம்பிக்கிறது.

பெண் குழந்தை

பெண் குழந்தை

X(கருமுட்டை செல்) +X(விந்தணு செல்) =XX என்றால் பெண் குழந்தை பிறக்கும்

ஆண் குழந்தை

ஆண் குழந்தை

X(கருமுட்டை செல்) +Y (விந்தணு செல்) =XY என்றால் ஆண் குழந்தை பிறக்கும்

எனவே குழந்தையின் பாலினமானது முழுக்க முழுக்க தந்தையின் குரோமோசோமை அடிப்படையாகக் கொண்டே அமைகிறது.

டி. என். ஏ

டி. என். ஏ

எலிகள் மீது நடத்தப்பட்ட ஒரு ஆய்வின் படி பார்த்தால் குழந்தைகள் பெரும்பாலும் தாயை விட மரபணு ரீதியாக தந்தை போல் இருக்கிறது. இதற்கு காரணம் டி. என். ஏ மூலக்கூறானது தாயை விட அதிகமாக தந்தையிடம் இருந்து பெறப்படுவதே காரணமாகும். இது மனிதர்கள் போன்ற எல்லா பாலூட்டி உயிரினங்களுக்கும் இது பொருந்தும் என்று இந்த ஆராய்ச்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாலியல் வேறுபாடு

பாலியல் வேறுபாடு

கர்ப்ப காலத்தின் இரண்டாவது மாதத்தில் கிட்டத்தட்ட 7-8 வார கர்ப்பத்தில் தான் குழந்தையின் பாலுறுப்புகள் வளர ஆரம்பிக்கும். அது வரைக்கும் குழந்தையில் எந்த மாற்றமும் ஏற்பட்டு இருக்காது. இரண்டு மாத கர்ப்ப காலத்திற்கு பிறகு குழந்தையின் வளர்ச்சி ஹார்மோன் சுரப்பை உற்பத்தி செய்யத் தொடங்குகிறது. இந்த ஹார்மோன் சுரப்பு தான் ஆண் அல்லது பெண் உறுப்புகளாக வளர உதவுகின்றன. இந்த செயல்முறைக்கு பாலியல் வேறுபாடு அல்லது பாலியல் வளர்ச்சி என்று பெயர்.

மரபணு கலப்பு

மரபணு கலப்பு

ஒவ்வொரு பரம்பரை பரம்பரையாக இந்த மரபணு கலப்பு நிகழ்ந்து கொண்டே வரும். எனவே தான் குழந்தை பாதி அம்மாவின் மரபணு சார்ந்தும் பாதி அப்பாவின் மரபணு சார்ந்தும் வளர்ந்து வருகிறது. அதே மாதிரி ஒவ்வொரு பெற்றோர்களுமே தங்களுடைய பெற்றோரின் மரபணு கலப்பை பெற்று இருப்பார்கள். அப்படி பார்க்கையில் குழந்தையின் மரபணு தாக்கத்தில் அவர்களுடைய பாட்டி, தாத்தா மரபணு கலப்பும் 1/4 பங்கு அளவு இருக்கும். இப்படி பரம்பரை பரம்பரையாக மரபணு கலப்பு கடத்தப்பட்டு வருகிறது.

குடும்ப வரலாறு குழந்தையின் பாலினத்தை தீர்மானிக்குமா

குடும்ப வரலாறு குழந்தையின் பாலினத்தை தீர்மானிக்குமா

நியூகேஸில் பல்கலைக்கழகத்தின் ஒரு ஆய்வு, பல வருங்கால பெற்றோர்களுக்கு, மகள்கள் அல்லது மகன்களைக் கொண்டிருக்கும் நிகழ்வைக் கண்டறிந்து கூறியுள்ளது. ஒரு ஆணுக்கு ஆண் அல்லது பெண் குழந்தை பிறக்குமா என்பது அவர்களின் பெற்றோரின் மரபுரிமையை சார்ந்து இருக்கும் என்பது கண்டறியப்பட்டுள்ளது. ஒரு ஆணுக்கு நிறைய அண்ணன், தம்பிகள் இருந்தால் அவர்களுக்கு ஆண் குழந்தை பிறக்க வாய்ப்புள்ளது. அதே அந்த ஆணுக்கு நிறைய அக்கா, தங்கைகள் இருந்தால் பெண் குழந்தை பிறக்க வாய்ப்புள்ளது என்று இந்த ஆராய்ச்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.

எப்படி ஜீன் பாலினத்தை தீர்மானிக்கிறது.

மரபணுக்கள் பெற்றோரிடமிருந்து பெறப்பட்டவையாகும். இவற்றின் இரண்டு பகுதிகள் அலீலஸ் என்று அழைக்கப்படுகின்றன.

mm: இந்த இணைவில் ஒரு ஆணுக்கு அதிகமாக ஆண் குழந்தை பிறக்க வாய்ப்புள்ளது. ஏனெனில் இது அதிகமாக Y குரோமோசோமை உற்பத்தி செய்யும்

mf: இந்த இணைவில் ஆண் அல்லது பெண் குழந்தை பிறக்க வாய்ப்புள்ளது. ஏனெனில் இதில் சமமான அளவில் X மற்றும் Y குரோமோசோமை உற்பத்தி செய்யும்.

ff: இந்த இணைவில் பெண் குழந்தை பிறக்க வாய்ப்புள்ளது. ஏனெனில் இதில் அதிகமாக X குரோமோசோமை உற்பத்தி செய்யும்

குழந்தையின் பாலினம் பற்றிய கட்டுக்கதைகள்

இதயத் துடிப்பு

இதயத் துடிப்பு

குழந்தையின் இதயத் துடிப்பை வைத்து குழந்தையின் பாலினத்தை கண்டறிய முடியும் என்பது காலங்காலமாக சொல்லப்பட்டு வருகிறது. உங்களுடைய குழந்தையின் இதயத் துடிப்பு 140 துடிப்பு /நிமிடத்திற்கு அதிகமாக இருந்தால் பெண் குழந்தை பிறக்க வாய்ப்புள்ளது. அதுவே 140 துடிப்பு /நிமிடத்திற்கு குறைவாக இருந்தால் ஆண் குழந்தை பிறக்க வாய்ப்புள்ளது என்கின்றனர்.

ஆனால் இது உண்மை என்பதற்கு எந்த ஆராய்ச்சி தகவல்களும் இல்லை. இது குறித்து நிறைய ஆராய்ச்சிகள் செய்தும் எதிர்மறையான தீர்வு மட்டுமே கிடைத்துள்ளது. எனவே இது எல்லாம் நம்முடைய ஊகத்தின் அடிப்படை மட்டுமே.

குழந்தையின் எடை

குழந்தையின் எடை

குழந்தையின் எடை முழுவதும் தாயின் வயிற்றின் நடுவில் இருந்தால் அது பெண் குழந்தையாக இருக்க வாய்ப்புள்ளது. அதுவே தாயின் வயிறு முன்புறமாக புடைத்து காணப்பட்டால் ஆண் குழந்தை என்கின்றனர். இதுவும் ஒரு கட்டுக்கதையே. இது தாயின் வயிற்றின் வடிவம், அளவு இவற்றை பொருத்து மாறுபடுகிறதே தவிர குழந்தையின் பாலினத்திற்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை.

எண்ணெய் பசை சருமம் மற்றும் பருக்கள்

எண்ணெய் பசை சருமம் மற்றும் பருக்கள்

தாயின் சருமம் அதிக எண்ணெய் பசையுடனும் பருக்களுடனும் காணப்பட்டால் பெண் குழந்தை பிறக்கும் என்கின்றனர். இதுவும் மற்றொரு கட்டுக் கதை தான். இது கர்ப்ப காலத்தில் ஏற்படும் ஹார்மோன் மாற்றத்தால் மட்டுமே சரும மாற்றம் ஏற்படுகிறது.

மனநிலை மாற்றம்

மனநிலை மாற்றம்

பெண் குழந்தை என்றால் தாயுக்கு அடிக்கடி மன நிலை மாற்றம் ஏற்படும் என்கின்றனர். இதற்கும் ஹார்மோனில் ஏற்படும் மாற்றமே காரணமாகும். இதற்கும் பாலினத்திற்கும் சம்மந்தமில்லை

உப்பு மற்றும் இனிப்பு சுவை

உப்பு மற்றும் இனிப்பு சுவை

கர்ப்ப காலத்தில் இனிப்பு சுவையை அதிகமாக விரும்பினால் பெண் குழந்தை என்றும், உப்பின் சுவையை விரும்பினால் ஆண் குழந்தை என்றும் கூறுகின்றனர். இதுவும் உண்மையல்ல. இது உங்களுக்கு இருக்கும் ஊட்டச்சத்து பற்றாக்குறையை பொருத்து இது ஏற்படும். இதற்கும் பாலினத்திற்கும் சம்பந்தம் இல்லை.

பாலினத்தை கண்டறிய வேறு வழிகள்

பாலினத்தை கண்டறிய வேறு வழிகள்

20-22 வது வாரத்தில் செய்யப்படும் அல்ட்ரா சவுண்ட் மூலம் 90% அளவு குழந்தையின் பாலினத்தை கண்டறிய இயலும்.மேலும் இதன் மூலம் மரபணு கோளாறுகள் அல்லது குரோமோசோமால் முரண்பாடுகளை சந்திக்கும் தாய்மார்கள், அதை அமினோசென்டஸிஸ் பரிசோதனை மூலம் கண்டறியலாம்.

முடிவு

முடிவு

மரபணுவை தவிர சில சுற்றுப்புற காரணிகளும் குழந்தையின் பாலினத்தை நிர்ணயிக்கிறது என்கின்றனர். ஆனால் இருந்தாலும் இது குறித்து விளக்கமான ஆய்வு இல்லை.

இதை தொடர்ந்து நிறைய ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப் பட்டாலும் இன்னும் சாதகமான முடிவு ஏற்படவில்லை எனலாம். எனவே மரபணு மட்டுமே குழந்தையின் பாலினத்தை நிர்ணயிக்க முடியும் என்பது மட்டுமே இப்பொழுது உள்ள உண்மை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Desktop Bottom Promotion