Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
பெற்றோர்களே! உங்க குழந்தைங்க எப்பவும் டல்லா இருக்காங்களா? அப்ப நீங்க என்ன பண்ணனும் தெரியுமா?
பல குழந்தைகள் பெற்றோர் மற்றும் உறவினர்களால் புறக்கணிக்கபடுவது, உளவியல் காரணம், உடல் அல்லது பாலியல் துன்புறுத்தல் போன்ற பிரச்சனைகளுக்கு ஆளாகிறார்கள்.
குழந்தைகள் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்றுதான் எல்லா பெற்றோர்களும் விரும்புவார்கள். ஒவ்வொரு குழந்தைகளுக்கும் வாழ்க்கையை பற்றியும், சூழ்நிலைகளை நாம் எவ்வாறு கையாள வேண்டும் என்பது பற்றியும் பெற்றோர்கள் கற்றுக்கொடுக்க வேண்டும்.
நல்ல விஷயங்களை பெற்றோர்கள் கற்றுத் தருவது, குழந்தைகளின் எதிர்கால வாழ்க்கைக்கு நன்மை பயக்கும். குழந்தைகள் மகிழ்ச்சியாக இருக்க, மகிழ்ச்சியற்ற நிலையை எப்படி சகித்துக்கொள்ள வேண்டும் என்பதை அவர்களுக்குக் கற்பிக்க வேண்டும்.

ஆனால் இது பொதுவான சோகமா அல்லது கண்டறியப்படாத அதிர்ச்சியா மனநிலையா என்பதை பெற்றோர்கள் அடையாளம் காண வேண்டியது அவசியம்.
குழந்தைகளின் மனநிலையை பற்றி பெற்றோர்கள் அறிந்திருக்க வேண்டும். ஏனெனில், அவர்களுக்கு இருக்கும் இந்த அதிர்ச்சி மனநிலை குழந்தைகளின் எதிர்கால வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். குழந்தைகள் அதிர்ச்சியான மனநிலையில் இருப்பதற்கான காரணமும் அதை சரி செய்வதற்கும், குணப்படுத்தும் செயல்முறையைத் தொடங்குவதற்கும் தேவையான உதவியை நீங்கள் செய்ய வேண்டும்.
பல குழந்தைகள் பெற்றோர் மற்றும் உறவினர்களால் புறக்கணிக்கபடுவது, உளவியல் காரணம், உடல் அல்லது பாலியல் துன்புறுத்தல் போன்ற பிரச்சனைகளுக்கு ஆளாகிறார்கள். இதனுடன், பள்ளி அல்லது சமூகங்களில் நடக்கும் வன்முறைகள், வீட்டில் நடக்கும் சண்டைகளை காண்பது, கடுமையான விபத்துக்கள், தங்கள் அன்புக்குரியவர்களின் இறப்பு, நேசிப்பவர்களின் திடீர் மாற்றம், கொடுமைப்படுத்துதல் மற்றும் இயற்கை பேரழிவுகள் போன்ற பல விஷயங்கள் குழந்தைகளின் மனநிலையை பெரிதும் பாதிக்கிறது.
ஒரு நிகழ்வு அல்லது அதிர்ச்சிகரமான அனுபவங்களின் காரணமாக அதிர்ச்சி மனநிலை ஏற்படலாம். ஒரு அதிர்ச்சிகரமான சம்பவத்திற்கு பிறகு ஒரு குழந்தையின் பதில் என்னவாக இருக்குமெனில், அவர்களின் வயது அல்லது வளர்ச்சி நிலையைப் பொறுத்து மாறுபடும். இங்குதான் பெற்றோரின் பங்கு இன்னும் முக்கியமானது.
குழந்தைகள் ஆபத்தில் இல்லாதபோதும், அவர்களின் உடல்கள் அதிக விழிப்புடன் இருக்கும். இது உடலில் மன அழுத்த ஹார்மோன்களை வெளியிடுகிறது. இதனால் குழந்தைகளின் கவனம், தூக்கம் அல்லது மற்றவர்களுடன் சமூக தொடர்பு கொள்ளும் திறன்கள் பாதிக்கப்படுகிறது.
அதிர்ச்சியின் பொதுவான அறிகுறிகள்
அதிர்ச்சி வெவ்வேறு வழிகளில் வெளிப்படும். எனவே, குழந்தைகளில் ஏற்படும் அதிர்ச்சியின் அறிகுறிகளை அறிந்து கொள்வது அவசியம். ஏனெனில் தீர்க்கப்படாத அதிர்ச்சியின் தாக்கம் பல ஆண்டுகள் நீடிக்கும். கவனம் செலுத்துவதில் சிரமம், எளிதில் பயப்படுதல், தூங்குவதில் சிரமம், திடீர் எடை மாற்றங்கள், எளிதில் விரக்தியடைதல் அல்லது எரிச்சல் அடைதல், சாப்பிடுவதில் சிக்கல், கடுமையான கோபம் மற்றும் பகல் கனவில் ஈடுபடுவது போன்ற குழந்தைகளுக்கு ஏற்படும் சில அதிர்ச்சி அறிகுறிகளை பெற்றோர்கள் அடிக்கடி தவறவிடுகின்றனர்.
பெற்றோர்கள் என்ன செய்ய வேண்டும்?
குழந்தையின் உணர்ச்சிகளையும் நடத்தையையும் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். உங்கள் குழந்தை என்ன சொல்ல வருகிறார் என்பதை திறந்த மனதுடன் பொறுமையாகக் கேட்க வேண்டும். இதன்மூலம் அவர்களின் பல்வேறு சிக்கல்களை நீங்கள் தீர்க்கலாம். உங்கள் குழந்தையிடம் ஏற்படும் நுட்பமான மாற்றங்களைக் கவனித்து, அவற்றைப் பற்றி அவர்களிடம் மெதுவாகக் கேட்க வேண்டும். எப்போதும் நீங்கள் உங்கள் குழந்தைக்கு உறுதுணையாக இருப்பீர்கள் என்று அவர்களுக்குத் தெரிவியுங்கள்.



Click it and Unblock the Notifications

