Latest Updates
-
வெள்ளரிக்காய் தோசையும், கருப்பு உளுந்து சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கேட்ட வரங்கள் கிடைக்கப்போகுதாம் -
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
ஜூன் மாத வானிலை மாற்றமா? இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடே குளிர்ச்சியாகவும் அதிர்ஷ்டமாகவும் மாறும்! -
அடிக்குற வெயிலுக்கு மாம்பழத்தை இப்படி சர்பத் செஞ்சு குடிங்க.. குளுகுளுன்னு இருக்கும்..
உங்க குழந்தைங்க காய்கறிகள சாப்பிட மாட்டேங்குறாங்களா? அப்ப இப்படி பண்ணுங்க போட்டிபோட்டு சாப்பிடுவாங்க!
குழந்தைகளை ஆரோக்கியமானவர்களாக வளர்ப்பது என்பது பெற்றோர்களுக்கு சுலபமான விஷயமில்லை. குழந்தைகளுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை உணவு மூலம் கொடுக்க பெற்றோர்கள் தினமும் தினம் போராடுகிறார்கள். குழந்தைகளுக்கு உணவு ஊட்டுவதை விட சவாலான காரியம் பெற்றோர்களுக்கு இருக்கிறதா என?
சத்தான மற்றும் மிகவும் ஆரோக்கியமான உணவுகளை குழந்தைகளுக்கு கொடுக்கும்போது, அவர்கள் மகிழ்வது மிகவும் கடினம். உணவு தட்டை பார்த்தவுடன் அவர்கள் முகத்தை சுருக்கி, காய்கறிகளை சாப்பிட மறுப்பு சொல்கிறார்கள். எனவே, குழந்தைகள் கீரைகள் மற்றும் காய்கறிகளைத் தவிர்க்காமல் தங்கள் உணவை சாப்பிட பெற்றோராக நீங்கள் சில விஷயங்களை செய்ய வேண்டும்.

குழந்தைகளின் கண்களை கவரவும் சீரான உணவை உண்ணும் ஆர்வத்தை தூண்டுவதற்கும் உதவும் சில உதவிக்குறிப்புகள் பற்றி இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.
கவரும் வகையில் இருக்க வேண்டும்
குழந்தைகளை கவரும் வகையில் காய்கறிகளை நட்சத்திரங்கள், விலங்குகள் போன்ற மிகவும் கவர்ச்சிகரமான வடிவங்களில் பெற்றோர்கள் வெட்ட வேண்டும். உணவுகளை வித்தியாசமான முறையில் அலங்கரித்து அவர்களுக்கு கொடுங்கள். உங்கள் குழந்தைக்கு பிடித்த பொம்மை அல்லது பொருள்போல கூட உணவை தயாரித்து கொடுக்கலாம். இது குழந்தைகள் விளையாடுவதில் ஈடுபடவும் காய்கறிகளை விரும்பி சாப்பிடவும் உதவும்.
வானவில் அடங்கும்
குழந்தைகளுக்கு மிகவும் வேடிக்கையாக இருக்க பல்வேறு வண்ண காய்கறிகளைப் பயன்படுத்துங்கள். கண்களை கவரும் வகையில் பல்வேறு வண்ணக் காய்கறிகளை கொடுக்கும்போது, அவர்கள் வேண்டாம் என்று சொல்லாமல், மிகவும் ஆர்வமாக சாப்பிடுவார்கள்.
ரெயின்போ காய்கறிகளை சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் என்பதை பல ஆய்வுகள் நிரூபித்துள்ளன. ஏனெனில் அவை ஆக்ஸிஜனேற்றங்களால் அவற்றின் நிறத்தைப் பெறுகின்றன. இதனால், உங்கள் குழந்தைகளுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் உணவின் மூலம் கிடைத்துவிடும்.
உதாரணமாக இருங்கள்
நிபுணர்களின் கூற்றுப்படி, பெற்றோர்கள் முன்மாதிரியாக இருக்க வேண்டும். நீங்கள் முதலில் காய்கறிகளை சாப்பிடாமல் ஒதுக்குவதை தவிர்க்க வேண்டும். உங்களை பார்த்து, குழந்தைகளும் காய்கறிகள் சாப்பிடாமல் போகலாம். அதனால், உங்கள் குழந்தை முன்பு நீங்கள் எல்லா காய்கறிகளையும் சாப்பிட வேண்டும்.
மேலும், நீங்கள் இருவரும் இணைந்து காய்கறிகளை ஒன்றாக சாப்பிட பழகுங்கள். இதில் இருவரும் மகிழ்ச்சியாக சாப்பிடுகிறீர்கள் என்பதைக் குழந்தைகள் உணர்ந்துகொள்வார்கள். குழந்தைகள் அவற்றைப் பார்த்து, உங்களுடன் சேர்த்து சாப்பிட ஆர்வம் காண்பிப்பார்கள்.
புத்திசாலித்தனமான வழிகளைக் கண்டறியவும்
உங்கள் குழந்தைகளை சாப்பிட வைக்க பலவந்தமான முறைகளை பயன்படுத்த வேண்டாம். குறிப்பாக, உங்கள் அதிகாரம் மற்றும் சக்தியை கொண்டு அவர்களை அதட்டியோ, திட்டியோ உணவளிக்க வேண்டாம். இது காய்கறிகள் மற்றும் சத்தான உணவுகளை இன்னும் அதிகமாக வெறுக்க வைக்கும். அதனால், புத்திசாலித்தனமான வழிகளை கண்டறிய வேண்டும்.
ப்யூரி, பொடியாக நறுக்கிய அல்லது வேறு ஏதாவது செய்முறையில் காய்கறியை அவர்களுக்கு சாப்பிட கொடுங்கள். காய்கறியின் வடிவத்தை மாற்றியும் சாப்பிடக் கொடுக்கலாம். உதாரணமாக காய்கறி ஜூஸ், சூப்கள் அல்லது ஸ்மூத்திகளாக செய்து கொடுக்கலாம்.
இறுதிக்குறிப்பு
இந்த முறைகள் தினசரி ஆரோக்கியமான சமையல் குறிப்புகளில் உங்கள் ஆர்வத்தை அதிகரிக்க உதவும். உங்கள் குழந்தைகளும் காய்கறிகளை ஒதுக்காமல் எல்லாவற்றையும் சாப்பிடுவார்கள். மேலும், உங்கள் குழந்தைகளுக்கு தேவையான ஊட்டச்சத்துகள் கிடைக்கும். உங்கள் குழந்தை நன்றாக சாப்பிடுவதையும், வெளிப்புற விளையாட்டில் ஈடுபடுவதையும் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.



Click it and Unblock the Notifications

