வயிற்றில் இருப்பது ஆணா, பெண்ணா என்பதை அறிய நம் முன்னோர்கள் பயன்படுத்திய வேடிக்கையான வழிகள்...!

கர்ப்ப காலம் பல்வேறு சுவாரஸ்யங்கள் நிறைந்தது, அதில் முக்கியமானது கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை யூகிப்பது. குழந்தையை பாலினத்தைக் கொண்டு வேறுபடுத்தி பார்ப்பது என்பது முட்டாள்தனமான ஒன்றாகும். ஆனால்

பொதுவாக கர்ப்பத்தின் 20-வது வாரத்தில், அல்லது சில நேரங்களில் 10-வது வாரம் அல்லது 12-வது வாரத்தில் இரத்தப் பரிசோதனையின் போது, பெற்றோர்கள் தங்கள் குழந்தையின் பாலினத்தைக் கண்டறிய முடியும். ஆனால் இது இந்தியாவில் சட்டப்படி தடைசெய்யப்பட்ட ஒன்றாகும்.

Funny Ways To Predict Your Baby’s Gender in Tamil

உலகம் முழுவதும் பல கலாச்சாரங்கள் மற்றும் பாரம்பரியங்கள் குழந்தைகளின் பாலினத்தை முன்கணிக்கும் சில வித்தியாசமான மற்றும் வேடிக்கையான முறைகளைக் கொண்டிருந்தது. இந்த வேடிக்கையான முறைகள் முழுவதும் நம்பக்கூடியதாக இல்லாவிட்டாலும் சுவாரஸ்யமானதாக இருந்தது என்பது மறுக்க முடியாதது. குழந்தைகளின் பாலினத்தைக் கண்டறியும் பழங்கால வேடிக்கையான முறைகள் என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

வயிற்றின் வடிவம்
பெண்கள் கருவுற்றிருக்கும் போது அவர்களின் வயிற்றின் வடிவத்தை வைத்தே கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தைக் கண்டறியலாம் என்று பழங்கால இந்திய பாரம்பரியம் கூறுகிறது. பெண்களின் வயிறு வெளியே நீண்டு இருப்பது போலவும், வட்டமாக இருப்பதை விட சற்று நீளமாக இருப்பது போலவும் தோன்றினால், அவர்கள் ஒரு ஆண் குழந்தையை சுமக்கலாம். மறுபுறம், அவர்களின் வயிறு மிகவும் வட்டமாகவும் உறுதியாகவும் இருந்தால், உங்கள் கால்களுக்கு கிடைமட்டமாக இருந்தால், அவர்கள் பெண் குழந்தையை சுமக்க வாய்ப்புள்ளது.

உதைக்கும் இடம்
இது மிகவும் வினோதமான ஒரு முறையாகும்.கருவில் இருக்கும் குழந்தை எங்கு உதைக்கிறார்கள் மற்றும் உதைகளை உணரும் இடம் குழந்தையின் பாலினத்தைக் கண்டறிய உதவும். பெண்கள் விலா எலும்புகளில் உதைகள் அதிகமாக இருப்பதாக உணர்ந்தால், கருவில் இருப்பது பெண் குழந்தையாக இருக்கலாம். அடிவயிற்றில் உதைகள் தொடர்ச்சியாக இருந்தால் கருவில் இருப்பது ஆண் குழந்தை என்று நம்பப்பட்டது.

தூங்கும் பக்கம்
இது பல திரைப்படங்களில் பார்க்கும் ஒரு வேடிக்கையான முறையாகும். இந்திய நாட்டுப்புற கதைகளின்படி, தாய் தனது வலது பக்கத்தில் அடிக்கடி தூங்கும்போது அவருக்கு பெண் குழந்தை பிறக்கலாம், இடது பக்கத்தில் தூங்கினால் அவருக்கு ஆண் குழந்தை பிறக்கும்.

உணவு விருப்பங்கள்
கர்ப்ப காலத்தில் சில பெண்கள் அதிக உணவை சாப்பிட விரும்புவார்கள், மற்றவர்கள் உணவை பார்த்தாலே வெறுப்படைவார்கள். இது குழந்தையின் பாலினத்துடன் நிறைய தொடர்புடையதாக்க இருக்கலாம் என்று கூறப்படுகிறது. உணவு வெறுப்பு அல்லது சாப்பிட்ட பிறகு குமட்டல் ஏற்படும் பெண்களுக்கு ஆண் குழந்தை பிறக்கும் வாய்ப்புகள் அதிகம் என்றும் போலந்து ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆய்வின்படி, தாயின் உடலானது பெண் கருவை விட அதிகமாக பாதிக்கப்படக்கூடிய வளரும் ஆண் கருவைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை உணர்கிறது.

கை வறட்சி
இந்த வேடிக்கையான கதைகள் கருவுற்ற பெண்களின் கைகளையும் விட்டு வைக்கவில்லை. தாயின் கைகள் வறண்டு இருந்தால் ஆண் குழந்தை பிறக்கலாம் என்றும் மென்மையாக இருந்தால் பெண் குழந்தை என்றும் இன்றுவரை பலர் நம்புகிறார்கள்.

இனிப்புகள் மீதான ஆசை
இது இன்றுவரை பின்பற்றப்படும் பொதுவான கட்டுக்கதைகளில் ஒன்றாகும். பல கலாச்சாரங்கள் தாயின் உணவுப் பழக்கத்தை குழந்தையின் பாலினத்துடன் இணைக்கிறார்கள். கர்ப்ப காலத்தில் இனிப்பு ஆசை உள்ள அம்மாக்களுக்கு பெண் குழந்தையும், காரம் சாப்பிடும் ஆசை உள்ள பெண்களுக்கு ஆண் குழந்தையும் பிறக்கும் என்று கூறப்படுகிறது.

மனநிலை மாற்றங்கள்
மனநிலை மாற்றங்கள் என்பது கர்ப்ப காலத்தில் அனைத்துப் பெண்களும் சந்திக்கும் ஒரு பிரச்சினையாகும். ஹார்மோன் காரணங்களால் அம்மாக்கள் பல மனநிலை மாற்றங்களை அனுபவிக்கிறார்கள். ஆனால் சில கட்டுக்கதைகளின்படி, மகிழ்ச்சியிலிருந்து சோகத்திற்கு அடிக்கடி மாறுவது பெண் குழந்தை கருவில் இருப்பதன் அடையாளம் என்று நம்பினார்கள்.

தொடர்ச்சியான அசௌகரியம்
வயிற்றில் அசௌகரியம், குமட்டல் மற்றும் வாந்தி போன்ற எபிசோடுகள் அதிகமாக இருக்கும் அம்மாக்களுக்கு பெண் குழந்தை பிறக்க வாய்ப்புள்ளது. கருவில் ஆண் குழந்தை இருக்கும் போது பெண்களுக்கு இந்த அசௌகரியம் ஏற்படாது என்று கூறப்படுகிறது.

கல்யாண மோதிர சோதனை
இந்த சோதனை உலகம் முழுவதும் மிகவும் பிரபலமானது. இந்த சோதனையில், தாயின் திருமண மோதிரம் ஒரு நூலில் கட்டப்பட்டு வயிற்றின் அருகில் வைக்கப்படுகிறது. அது முன்னும் பின்னுமாகச் சென்றால் அது ஒரு ஆண் குழந்தை மற்றும் அது வட்டமாக நகர்ந்தால் அது ஒரு பெண் குழந்தை என்று கூறப்படுகிறது.

Story first published: Wednesday, April 26, 2023, 12:31 [IST]
Desktop Bottom Promotion