Latest Updates
-
Guru Peyarchi 2026: உச்சம் பெறும் குருவால் இந்த 6 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படப்போகுது.. -
ஓட்ஸ் இட்லியும், கார சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 02 ஜூன் 2026: இந்த நாள் உங்கள் ராசிக்கு எப்படி இருக்கப்போகிறது தெரியுமா -
புதன்-சுக்கிரன் ஒரே நாளில் நட்சத்திரத்தை மாற்றுவதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
1/4 கப் வேர்க்கடலையும், சின்ன வெங்காயமும் இருந்தா இந்த ஆந்திரா சட்னியை அரைங்க - இட்லி,தோசைக்கு செமயா இருக்கும் -
குரு-சனி இணைந்து உருவாக்கும் நவபஞ்சம ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரங்க மூட்ட மூட்டையா பணத்தை அள்ளப்போறாங்க.. -
பிரைட் மாதம் கொண்டாடும் எல்ஜிபிடிகியூ இணையர்களே! பொது இடங்களில் பாதுகாப்பாக இருக்க இந்த 5 விஷயங்களை மறக்காதீங்க! -
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க? ஜூன் மாதம் உங்களுக்கு எப்படி இருக்கப்போகுதுனு நாங்க சொல்றோம் -
சப்பாத்திக்கு ஏற்ற க்ரீமி பன்னீர் சோயா - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஆர்சிபி வெற்றிக்கு பிறகு விராட் - அனுஷ்கா ஆடிய டான்ஸ்! இணையத்தை அதிரவைக்கும் அந்த வைரல் வீடியோ இதோ!
சுகப்பிரசவத்தின் போது என்னென்ன நடக்கும்? எப்படி தயாராக வேண்டும்? விளக்குகிறார் மகப்பேறு மருத்துவர் பத்மப்ரியா!
ஒரு பெண் தாய்மை அடைவது அவருக்கு மட்டுமின்றி, அவர்களின் குடும்பம், உறவினர், மற்றும் நண்பர்கள் என அனைவருக்கும் மகிழ்ச்சியை தரக் கூடிய நிகழ்வு. கருவில் குழந்தையின் வளர்ச்சி நிலை அந்த தம்பதியினருக்கு அளவில்லாத மகிழ்ச்சியை அள்ளி தரும். என்னதான் மகிழ்ச்சியை தந்தாலும், பிரசவம் குறித்த சந்தேகங்களும் குழப்பங்களும் பெண்களுக்கு இருக்கத்தான் செய்யும்.
குழந்தையை பிரசவிக்க இருக்கும் இருவழிகள் ஒன்று சுகப்பிரசவம், மற்றொன்று அறுவை சிகிச்சை. இதை பற்றி எல்லாம் என் மருத்துவர் விளக்கிவிட்டார். நான் ஏன் தொடர்ந்து படிக்க வேண்டும் என்கிறீர்களா? ஆனால், சுகப்பிரசவம் நேரத்தின் நிகழ்வுகளை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். உங்களிடம் அதைப்பற்றி யாரும் சொல்லி இருக்கமாட்டார்கள். பல பெண்களின் நிலையை கவனித்த மகப்பேறு மருத்துவர் பத்மப்ரியா, பிரசவ நேரத்திற்கு தங்களை தயார் செய்வதை பற்றி விவரிப்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

திட்டமிட்டபடி நடக்காமலும் போகலாம்
பிரசவம் பற்றி நீங்கள் என்ன தான் தெரிந்து வைத்திருந்தாலும், நாம் திட்டமிட்டபடியே குழந்தையின் பிறப்பு அமையாது. பிரசவத்திற்கு என்று மருத்துவர்கள் காலக்கெடு கொடுத்தாலும், குழந்தையின் பிறப்பு சிலருக்கு குறித்த காலத்திற்கு முன்போ அல்லது அதன் பிறகோ கூட ஏற்படலாம். அப்படி இருக்க நாம் எப்படி சரியாக திட்டமிட முடியும் என்று நீங்கள் கேட்கலாம்.
ஒன்பதாவது மாதம் துவங்கிய உடனே, உங்களுக்கும் குழந்தைக்கும் அவசியமாக தேவைப்படும் பொருட்களை ஒரு பையில் தனியாக உங்கள் கண்களில் படும்படி வைத்திருக்க வேண்டும். இது உங்கள் உடன் இருப்பவர்களில் அலைச்சலை குறைப்பதோடு, உங்களுக்கு சரியான நேரத்திலும் கிடைக்கும். இது குறித்து உங்கள் மருத்துவரிடம் முன்கூட்டியே ஆலோசிப்பது சிறந்தது.
உணவு உண்ண அனுமதிக்காமலும் போகலாம்
கர்ப்ப காலத்தின் ஆரம்பத்தில் உங்களுக்கு விரும்பியதை எல்லாம் கொடுத்தவர்கள், பிரசவ காலம் நெருங்கும் போது, உங்களை உணவு விஷயத்தில் கட்டுப்பாட்டுடன் இருக்க சொல்வார்கள். ஏனென்றால், சில சமயங்களில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை ஏற்படலாம். இதனால் சில நேரங்களில் நீராகம் மட்டுமே உங்களுக்கு உணவாக இருக்கலாம். உங்கள் உடன் இருப்பவர்கள் அல்லது உங்கள் குடும்பத்தினர் சாப்பிடுவது உங்களை பசியடைய செய்யலாம். இருந்தாலும் நீங்கள் உணவு கட்டுப்பாட்டுடன் இருக்க உங்கள் மனதை பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டியதும் அவசியம்.
பிறப்புறுப்பில் பல கைகள் படலாம்
பிரசவ காலத்தில் உங்கள் குழந்தை பிறப்பிற்கான பகுதி எவ்வளவு விரிவடைந்து இருக்கிறது என்பதை பல செவிலியர்கள் அவ்வப்போது பரிசோதித்து கொண்டே இருப்பார்கள். அதன் காரணமாக அவர்களின் கைகள் உங்கள் பிறப்புறுப்பு பகுதியில் படும் போது, கூச்சமோ, வேதனையோ பட வேண்டாம். இது அவசியமற்றது, ஏன் இதை சொல்கிறீர்கள்? என நீங்கள் கேட்டால், உங்களை இதற்காக மனதளவில் தயார் செய்து கொள்ள வேண்டும் என்பதற்காக தான்.
அதிகப்படியான அழுத்தம் தேவை படலாம்
குழந்தை பிறப்பிற்கான வழிகளை பற்றி நீங்கள் நன்றாக அறிந்து வைத்திருக்கலாம். அதில் மிக முக்கியமான ஒன்று குழந்தை வெளியே வர அழுத்தம் கொடுப்பதுதான். பெண்களால் அதிக அளவில் அழுத்தம் கொடுக்க முடியாது என்று அவர்களை குறைத்து மதிப்பிடுவார்கள். அதற்கு தகுந்தாற்போல ஊடகங்கள் மற்றும் படங்களில் சில அழுத்தங்களில் பெண்கள் சோர்வடைவதை போல் சித்தரித்திருப்பார்கள். ஆனால் அது உண்மையல்ல. எப்படியும் மூன்று மணி நேரமாவது எடுக்கும் குழந்தை பிறக்க, அதற்கு வெறும் 10 முறை நீங்கள் கொடுக்கும் அழுத்தம் குழந்தை பிறப்பிற்கு போதுமானதாக இருக்காது. இதற்கும் நீங்கள் மனதளவில் தயாராக இருக்க வேண்டும்.
சில கழிவுகள் இருக்கலாம்
உடல் கழிவுகளை பற்றி பேசுவது அருவருப்பான ஒன்றாக கூட உங்களுக்கு இருக்கலாம். ஆனால் இது நடப்பதற்கான சாத்தியகூறுகள் அதிகம். குழந்தையை பிரசவிக்க நீங்கள் அழுத்தம் கொடுக்கும் போது, உங்கள் உடல் கழிவுகளும் வெளியேறுவதற்கான வாய்ப்புகள் உண்டு.
உடல் கழிவுகள் வெளியேறுவது சகஜமான ஒன்று என்றாலும், அது மருத்துவர், செவிலியர்கள் முன்னிலையில் நிகழும் போது உங்களை கவலையடைய செய்யலாம். ஆனால் இந்த கவலை தேவையற்றது என்கிறார் மருத்துவர். பிரசவ நேரத்தில் உங்கள் ஆரோக்கியம் மற்றும் குழந்தையின் ஆரோக்கியம் மட்டுமே கவனத்தில் கொள்ள வேண்டும். இது போன்ற தேவைற்ற விஷயங்களுக்கு கவலையடைய வேண்டாம் என்கிறார் மருத்துவர்.
இப்படி நீங்கள் பல நிலைகளை கடந்துதான் குழந்தை செல்வத்தை கையில் பெற முடியும். பிரசவம் என்பது மிக எளிமையான ஒன்று என்றாலும், நீங்கள் இதில் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும். உங்கள் வாழ்க்கை நிலையை உயர்த்துவது குழந்தை தான். உங்கள் குழந்தை பிறப்பதற்கு நீங்கள் எவ்வளவு கஷ்ட பட்டிருந்தாலும், உங்கள் குழந்தையின் முகத்தை பார்க்கும் போது அனைத்து வழிகளும் மாயமாகி விடும். குழந்தை பிறப்பு பற்றிய பயம் இருந்தால் அவற்றை விடுத்து, மன மகிழ்வோடு இருங்கள்.



Click it and Unblock the Notifications
